English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
strategic
a. போர்த்திறஞ் சார்ந்த, போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த, போர்த்திற நோக்கங்கொண்ட, போர்த்திற நடவடிக்கைக்குப் பயன்படத்தக்க, போர்த்திற நடவடிக்கை சார்ந்த, குண்டுவீச்ச வகையில் எதிரியின் பொருளியல் நிலை-மன அமைதிநிலை, ஆகியவற்றைச் சீர்குலைக்கும்படி திட்டமிடப்பட்ட.
strategist
n. போர்த்திற வல்லுநர், படையாட்சி நடவடிக்கைகளில் தேர்ந்தவர், போர்த்திறம் வாய்ந்தவர்.
strategus
n. போர்முறைத் தலைவர், பண்டைக்கிரேக்க நாட்டு ஏதென்ஸ் நகரில் ஆண்டுக்கொருமுறை அமர்த்தப்படும் படைத்தலைவர் பதின்மருள் ஒருவர்.
strategy
n. படைத்தலைமைத்திறம், போர்முறைத்திறம், படை நடத்துமுறை, போர்க்கலை, சூழ்ச்சிமுறை.
strath
n. அகன் மலைத்தாக்கு, அகன்ற மலைப்பள்ளத்தாக்கு.
straticulate
a. (மண்.) அடுக்கியலான, அடுக்கடுக்குப் படுகைகளாக அமைந்துள்ள.
stratification
n. அடுக்கமைவு, அடுக்கடுக்கான படுகைகளாக அமைதல்.
stratified
a. படுகைகளாக அமைந்த.
stratiform
a. அடுக்கியல் வடிவான, படுகையடுக்குக்களையுடைய, அடுக்கியற் படிவுடைய, படுகையடுக்குக்களாக உருவாகிற.
stratify
v. படுகைகளாக உருவாக்கு, படுகை அடுக்குக்களாகப் படிவுறுத்து, அடுக்கடுக்காக அமைவி.
stratigraphy
n. அடுக்கியற் படிவாய்வு, அடுக்கியற் படி வாக்கக் கூறுகளின் தொகுதி.
strato-cirrus
n. மங்கல் பஞ்சியல் பாவடிமுகில்.
strato-cumulus
n. பாவடித்திரள் குவிமுகில், மழை பெயலற்ற திரள் குவிமுகில்.
stratocracy
n. படைத்துறை ஆட்சி, படைவீரர் ஆதிக்கம்.
stratocruiser
n. மீவளி மண்டல வானுர்தி, வளிமண்டலத்தின் மேன்முகட்டுத் தளத்திற்குச் செல்லத்தக்க விமானம்.
stratose
a. படுகைகளாக உள்ள.
stratosphere
n. மீவளி மண்டிலம், தட்பவெப்பநிலை உயரத்திற்கேற்ப மாறாமல் நிலையாக இருக்கும் வளி மண்டிலத்தின் எழு கல்லுயரத்திற்கு மேற்பட்ட அடுக்கு.
stratum
n. அடுக்குப் படுகை, (மண்.) நில அடுக்கு, படிநிலைப்பாளம், சமூகத்தரம், சமுதாயப் படிநிலை.
stratus
n. பாவடி முகில், தளமட்ட நிலையிலுள்ள தொடர்மேகப் படலம்.
straw
n. வைக்கோல், அரிதாள், கூரைவேய்புல், தொப்பிமுடைவதற்கான வைநார், படுக்கை பின்னுவதற்கான வைக்கோலிழை.