English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
stank
v. 'ஸ்டிங்க்' என்பதன் இறந்த கால வடிவங்களில் ஒன்று.
stannary
n. வெள்ளீயச் சுரங்கம், வெள்ளீயச்சுரங்கமுள்ள மாவட்டம்.
stannate
n. ஈயத்திராவக உப்பு.
stannic
a. வெள்ளீயஞ் சார்ந்த, மீ எடைகிற வெள்ளீயஞ்சார்ந்த, நாலிணைதிற வெள்ளீயத்துக்குரிய.
stanniferous
a. வெள்ளீயம் அடங்கிய.
stannous
a. ஈரிணை திற வெள்ளீயஞ் சார்ந்த.
stanza
n. செய்யுட் பத்தி, அடிவரையறைச் செய்யும், கிரேக்க இலத்தீன் மொழிகள் வகையில் நாலடிப்பாட்டு.
stanzad, stanzaed
அடிவரையறைப்பாக்களால் யாக்கப் பெற்ற, அடிவவரயறைப் பா அமைப்புற்ற.
stanzaic
a. அடிவரையறைச் செய்யுள் சார்ந்த.
staple
-1 n. கொண்டி, நாதாங்கி, தாழ்செருகுகுழை, புற்குழல், துளை இசைக்கருவியின் புல்வாய்களை உள்ளடக்குங்குழல், தைப்புமுள், கம்பித்ததையலில் வழங்கும் வளைமுள் இறுக்கி, (வினை.) கொண்டியிடு, கொண்டியிட்டிறுக்கு, கொண்டியிட்டடை, தாழிடு, தாழிட்டு அடை, தைப்பு முள்ளிட்டு, தைத்திறுக்கு.
stapler
-1 n. முக்கிய பொருள் வணிகர், கம்பளியைத் தரப்படுத்தி வாணிகஞ் செய்பவர்.
stapling-machine
n. தாள் தைப்பு முட்கருவி.
star
-1 n. விண்மீன், வான்வெள்ளி, வான்வெளிக் கோளம், நட்சத்திரம், ஐம்முனை வடிவப்பொருள், உடுவடிவப் பதக்கம், உடுவடிவ விருதுச்சின்னம், உடுக்குறி, விலங்கின் சுட்டி, குதிரை முக வெண்சுட்டி, பல்தெருச்சந்தி, சேணிடப்பொருள், அரும்பொருள், ஒண்பொருள், பற்றார்வத்துக்குரியவர், பக்திக்குரியவர், பொதுமக்கள் உளங்கவர்ந்தவர், புகழ் நடிகர், புகழ் நடிகை, புகழ் ஒளி சான்றவர், முதன்மைச் சிறப்புடையது, நற்பேறு, குருட்டு யோகம், உடுமீன், விணமீன் வடிவமீன்வகை, மேசைக்கோற்பந்துக் கூட்டாட்டத்தில் மூவாய்ப்புக்களும் கடந்த சிறப்பாட்ட வாய்ப்பு, (பெ.) விண்மீன்களுக்குரிய விண்மீனால் குறித்துக்காட்டப்பட்ட, ஒளிமிக்க, முததன்மையான, தலைசிறந்த, புகழ் ஒளிசான்ற, (வினை.) வீண்மீன்போல ஒளிவீசு, உடு உருக்கள் பதி, உடு உருக்களால் அணிசெய், பட்டியலில் பெயர்மீது உடுக்குறி அடையளாமிட்டுக்காட்டு, ஐங்கதிர் வட்டிவடிவாகக் கீறு, ஐங்கதிர் வட்டக்கூறுகளாகச் சிதறடி, புகழ்நடிகராக்கு, தலைசிறந்த நடிகராகக் காட்டு, காட்சி அல்லது திரைப்படத்திற்குத் தலைசிறந்த நடிகராகக் கொள், முக்கிய நாடிகராக விளங்கு, முக்கிய நடிகராகத் தோன்று, பொதுமக்கள் கவனங் கவர், மேசைக் கோற்பந்துக் கூட்டாட்டத்தில் மூவாய்ப்புக்கும் கடந்த சிறப்பாட்ட வாய்ப்புப் பெறு.
Star hotel
உடுவிடுதி, நட்சத்திர உணவகம்
star-apple
n. மேற்கிந்தியக் கனிமர வகை, மேற்கிந்தியக் கனிவகை.
star-blasting
n. ஆட்சிக்கோள்களின் நச்சுப்பலன்.
star-bright
a. விண்மீன் போலச் சுடர்வீசுகிற.
star-catalogue
n. உடுப்பட்டி, விண்மீன்கள் பெயர் முதலிய விவரங்களடங்கிய பட்டியல்.
star-crossed, star-crost
a. ஆட்சிக்கோள்களின் தீ விளைவுகளினால் கேடுற்ற.
star-drift
n. உடுக்குழுவியக்கம், நிலை விண்மீன் குழுக்களின் நிலவுலகப் புடைபெயர்வு சாராத தற்சார்பான பொதுநிலை இயக்கம்.