English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
stare
n. உறுத்த பார்வை, ஊன்றிய பார்வை, இமையா விழிப்பு, நீடித்த அகல விழிப்புநோக்கு, உருட்சி நோக்கு, மருட்சிப்பார்வை, வியப்பார்வ நோக்கு, திகைப்பு நோக்கு, மடமை நோக்கு, பற்றார்வ நோக்கு, ஏக்க நோக்கு, வேணவா நோக்கு, (வினை.) உறுத்து நோக்கு, ஊன்றிப் பார், விழித்து நெடு நேரம் நோக்கியிரு, பேந்தப்பேந்த விழி, திகைப்புடன் விழித்துநோக்கு, வியப்பார்வத்துடன் கூர்ந்து நோக்கு, பற்றார்வத்துடன் நோக்கு, முனைப்பாக முன்வந்தெய்து, திடுமெனவந்து திகைக்க வை, கண்கூடாகத் தெரியவர்,விழித்துநோக்கி அச்சுறுத்து, விழித்து நோக்கி அச்சுறுத்தி செயலாற்று, விழித்து நோக்கி எதிர்ப்புத் தெரிவி.
starer
n. உறுத்து நோக்குபவர், வேணவா நோக்காளர்.
starfinch
n. செவ்வாற் குருவி.
starfish
n. உடுமீன், ஐந்து அல்லது பல புறமுனைப்புக்களையுடைய வட்டமீன் வகை.
stargaze
v. விண்மீன்களை உற்றுநோக்கு, வானோக்கு, (பே-வ) வானுலாய்வு செய், பகற்கனவு காண்பவர், முகட்டுவிழி மீன்வகை.
staring
a. முனைப்பான, அச்சுறுத்துகிற, திகைப்பூட்டத்தக்க, அருவருப்பூட்டத்தக்க, (வினையடை.) முனைப்பாக, அச்சுறுத்துவதாக, திகைப்பூட்டுவதாக, அருவருப்பூட்டுவதாக.
staringly
adv. முனைப்பாக.
stark
a. விறைப்பான, முறைப்பான, (செய்.) வலிமையான, உறுதியான, விடாப்பிடியான, கலப்பற்ற, தனி நிலையான, புற அணியற்ற, முழுதளவான, மறைவு பொதிவற்ற, (வினையடை.) முட்டமுழுக்க, முற்றிலும்.
starless
a. விண்மீன் அற்ற.
starlet
n. சிறுதிற விண்மீன்.
starlight
n. விண்மீன் ஒளி, (பெ.) விண்மீன்களால் ஒளி தரப்பெற்ற, விண்மீன் ஒளி பரவிய.
starlike
a. விண்மீன் ஒத்த.
starling
-1 n. போலி செய்யும் ஆற்றலுடைய பூசையினப் பறவை வகை.
starlit
a. விண்மீன் வெளிச்சங் கொண்ட.
starry
a. விண்மீன் ஆர்ந்த, உடுவுருக்களால் அணி ஒப்பனை செய்யப்பட்ட, உடுக்களடங்கிய, உடுக்களிலிருந்து வருகிற, விண்மீன்கள் போன்ற, விண்மீன்கள் போன்று ஒளிருகிற.
starry-eyed
a. கனவியலாளரான, கற்பனையுலகிலே திரிகிற.
stars
n. pl. யோகம், நல வாய்ப்பு.
start
n. திடுக்குறவு, திடீர் அதிர்வெறிவு, திடீர் இயலதிர்வு, தன்னையறியாமலே திடுமென ஏற்படும் அதிர்ச்சி, திடீர் வெட்டசைவு, திடீர் வியப்பதிர்ச்சி, திடீர் நடுக்குறவு, எதிர்பாரா நடுக்க உணர்வு, திடீர்ப்பீற்று, திடீர் வலி, திடீ எழுச்சி, விட்டியங்குநிலை, இடைவிட்டெழும் சிறுதிற அசைவியக்கம், விட்டெழுச்சி, இடைவிட்டெழும் குறுமுயற்சி, தொடக்கம், தொடங்குதல், தொடக்குவிப்பு, தொடக்க இயக்குவிப்பு, புறப்படுகை, புறப்படுவிப்பு, தொடக்க ஊக்காதரவு, முதல்நிலை ஆதரவு, பந்தயத்தில் தொடக்க இடம், பந்தயத்தில் தொடக்க வேளை, பந்தயத்தில் தொடக்க நிலையான இடம்விடு சலுகை, பந்தயத்தில் தொடக்கத்திற்குரிய நேரச்சலுகை, (வினை.) திடுக்கிடு, திடீர் அதிர்வுறு, திடீர் வியப்பதிர்வுறு, திடுமெனப் புடைபெயர்வுறு, வெட்டுமரவகையில் திடீர்ப்பெயர்வுறு, இரிவுறு, வெட்டுமர வகையில் திடுமெனக் கீழமர்வுறு, பெயர்வுறச் செய், பெயர்ச்சியுணர், திடுமென எழு, மேலெழு, மனத்தில் எழு, காட்சியில் தோன்று, புறப்படு, தொடங்கு, பயன்படுத்தத் தொடங்கிவிடு, செயல்தொடங்கிவிடு, தொடக்க முயற்சியிலீடுபடு, முன்னேற்பாடுகள் செய், தொடக்கமுறு, இயங்குவி, தொடங்குவி, நிறுவு, புதுவதாகத் தோற்றுவி, தொடங்கி நடத்து, விடாது தூண்டுதலளி, இயங்கிக் கொண்டே இருக்கும்படி செய், மணிப்பொறியைத் திருக்கிவிடு, உந்துகல இயந்திரப் பொறியை முடுக்கிவிடு, தொடக்க உதவி செய், ஊக்காதரவு வழங்கு, முதல்நிலை ஆதரவு அளி, உந்து, துருத்தி நில, திறம்பு, விரி, மலர்வுறு, தளர்வுறு, கழலு, துள்ளிப் பாய், தெறித்தோடு, பீறி வெளிப்படு, வெளிப்படுத்து, கலைவுறு, கலை, ஒழுகுறு, ஒழுகுவி, வேட்டைவிலங்கு வகையில் மறைவிடத்திலிருந்து கலைத்து வெளிப்படுத்து, (கப்.) மிடாவிலிருந்து தேறல், வடித்தெடு.
starter
n. தொடங்குபவர், முடுக்குபவர், வேட்டை விலங்கைக் கலைப்பவர், கிளப்புபவர், புதுவதாகத் தொடக்கஞ் செய்பவர், வினைத் தொடக்கம் புரிபவர், வாணிகம்-தொழில் ஆகியவற்றின் வகையில் வினைமுதலாகுபவர், தொடக்க உதவி புரிபவர், ஓட்டப்பந்தயத் தொடக்க அடையாளங் காட்டுபவர், (கப்.) மிடாவிலிருந்து தேயல் வடிப்பவர், பந்தயத்தில் புறப்பட ஆயத்தமாயுள்ள குதிரை, போட்டியாளர் பந்தயத்தில் புறப்பட ஆயத்தமாயுள்ளவர், வேட்டையாட்டுத் தொடங்கி வைக்கும் நாய், இயந்திர இயக்கந் தொடங்கி வைக்கும் அமைவு தொடக்கமுறைக் கருவி.
starting
n. திடுக்கிடுக்கை, திடுக்கிடுவிப்பு, புறப்படுகை, புறப்படுவிப்பு, தொடங்குதல், நிறுவுகை, தொடங்கிவைப்பு, நிறுவன வினை, நடைமுறைத் தொடக்கம், ஓட்டப் பந்தயத்தொடக்க அடையாளங் காட்டல், வேட்டை விலங்குக் கலைப்பு, (கப்.) தேறல் வடிப்பு, (பெ.) புறப்படுகிற, முதற்படியான, தொடங்கி வைக்கிற, தொடக்க ஊக்கமான, இயந்திர இயக்கந் தொடங்கி வைக்கிற, ஓட்டப்பந்தயத் தொடங்கி வைக்கிற.