English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
stagecraft
n. நாடகமேடைக் கலை.
staggard
n. நான்காண்டு நிறைந்த கலைமான்.
stagger
n. தள்ளாட்டம், தடுமாற்றம், தயக்கம், கருத்து ஊசலாட்டம், (இயந்.) விமான முதலிய கட்டுமான வகையில் முந்துறு தளநீட்டம், தளக்கவிவு, தளத் திருகுமறுகீடு, (வினை.) தள்ளாடு, தடுமாறு, நடையின் போது தலைக்கிறக்கமுறு, தயங்கு, கருத்தில் ஊசலாடு, தள்ளாடுவி, தடுமாறுவி, தலைசுற்றுவி, தயக்கமுறுவி, ஆட்டங்கொடுக்கச் செய், ஏறுமாறாக அமைவி, வண்டிச்சக்கர ஆரைகளை மாறி மாறி வலமிடம் திருப்பியமை, நாட்பட்டியில் ஒய்வுநாள் வேலை நேரங்களை மாறுபடக் குறி.
staggerer
n. தள்ளாடுபவர், தள்ளாடுபவது, தடுமாறுவிப்பவர், தடுமாறுவிப்பது, தயங்குபவர், மனவுறுதி இழக்கப்பண்ணும் விவாதம், ஒழுங்கு குலைக்கும் நிகழ்ச்சி, இடையிட்டுத் தடைப்படுத்தும நிகழ்ச்சி, தடுமாற்ற நிகழ்ச்சி.
staggers
n. pl. தலைமயக்கம், குதிரை-கால்நடைகளின் மூளை-தண்டுவட நோய்வகை.
staghorn fern
n. கலைமான் கொம்புபோன்ற இலைகளையுடைய சூரல்வகை.
staghound
n. பெரு வேட்டைநாய், மான்வேட்டை நாய்.
staging
n. நாடக மேடையற்றம், நாடகமேடை நடிப்பு, வண்டி அஞ்சல் செய்தல், சாரக்கட்டு, கட்டிடத்திற்கான சாரங்கட்டுதல்.
Stagirite
n. ஸ்டாகிரா என்னும் பண்டை கிரேக்க நகரினர், பண்டை கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில்.
stagnant
a. நீரொழுக்கற்ற, ஓடாத, பாயாத, அசையாது நிற்கிற, கிளர்ச்சியற்ற, மந்தமாக, செயலற்ற, சோம்பியுள்ள, கெட்டுப்போன, நலங்கெட்ட.
stagnate
v. நீர்மவகையில் ஓட்டமற்றிரு, பாயாது தேங்கிநில், செயலற்று இயங்கு, வாழ்க்கை வகையில் தேக்கமடைந்திரு, மாறுபாடில்லாத சோர்வுற்றிரு, உள்ளத்தின் வகையில் சுறுசுறுப்பற்றிரு, சோம்பியிரு, ஆள்வகையில் கிளர்ச்சியற்றிரு, தொழில்வகையில் மந்தமாயிரு.
stagnicolous
a. சதுப்புநிலத்தில் வாழ்கிற, தேங்கல்நீரில் வளர்கிற.
stagy
a. நாடகப் பாணியிலுள்ள, நாடகப் பண்புமிக்க, பகட்டு நடிப்பான, புறப்பகட்டான.
staid
a. எழுச்சியற்ற, கிளர்ச்சியற்ற, ஒரு நிலைப்பட்ட.
stain
n. கறை, அழுக்கு, நிறவேறுபாடு, நிறவேறுபாட்டுத்தடம், கறை உண்டாக்கும் பொருள், சாயப்பொருள், குற்றம், குறைபாடு, (வினை.) கறைப்படுத்து, அழுக்காக்கு, மாசுபடுத்து, நிறங்கெடு, நிறம்மாறுபடுத்த, நிறம் மங்கலாக்கு, சிறிதளவு வெளிறிய சாயலுட்டு, புதுநிறமூட்டு, புகழுக்குக் களங்கம் விளைவி, பெயருக்குப் பழி ஏற்று, மரம்-கண்ணாடி முதலியவற்றிற்குப் புதுவண்ணச் சாயல்கொடு, உருப்பெருக்காடியில் பார்க்கும் பொருளுக்கச் சாயமேற்று, சுவர் ஒட்டுத்தாளுக்கு நிறப்படிவமேற்று, (வேதி.) உட்படிவம் வெளித் தெரியும்படி கூறுகளின் நிறம் வேறுபடுத்திக் காட்டு.
stainless
a. மாசற்ற, கறையற்ற, களங்கமற்ற, குறையற்ற, குற்றத்தடமில்லாத, துருவற்ற, எஃகுவகையில் நிறமியக்கலப்பால் துருவுக்கும் அரிப்புக்கும் இடமளிக்காத.
Stainless steel
துருவுறா எஃகிரும்பு
stair
n. ஏணிப்படி, படிக்கட்டு.
stair-carpet
n. படிக்கட்டு விரிப்பு.