English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stalinism
n. ருசிய பொதுவுடைமைச் சர்வாதிகாரியான ஸ்டாலின் (1க்ஷ்ஹ்ஹீ-1ஹீ53) என்பாரின் அரசியற்கோட்பாடு.
stalk
-1 n. காம்பு, தண்டு, தாள், காலடி, தேறல் கிண்ணத்தின் அடித்தண்டு, தாறு, இயந்திர நடு உருளை, கருவிகளின் இடைத்தண்டு, நெடும் புகைபோக்கி, ஒடுங்கிய இடையிணைப்புக் கூறு, உறுப்பின் அடி இணைப்பாதாரம், (தாவ.) மரவினத்தின் நடுத்தண்டு, (உயி.) விலங்கின் தண்டுபோன்ற அமைவு, (க-க) தண்டமைவணி ஒப்பனை, (வினை.) தண்டகற்று, காம்பகற்று.
stalk-eyed
a. நண்டினை ஒப்பத் தண்டுபோன்ற உறுப்பின் மீதமைந்த கண்களையுடைய.
stalked
a. தண்டுடைய, தண்டுபோன்ற உறுப்புடைய, காம்புகொண்ட.
stalking-horse
n. வேட்டையாளர் பின்மறைந்து செல்லப்பெறும் குதிரை நொண்டிச்சாக்கு, போலிக்காரணக் குறிப்பு.
stallage
n. சந்தையில் விற்பனைச் சாவடியிடம், அங்காடிவிற்பனைச் சாவடிக் கட்டணம், சந்தையில் விற்பனைச் சாவடி இடவுரிமை, பொருட்காட்சிக் கடைக் கட்டணம்.
stalled
a. விலங்கு வகையில் கொட்டிலில் வைக்கப்பட்ட, கொழுக்க வைக்கப்பட்ட.
stallfeed
v. தனிக்கொட்டிலில் வைத்துக் கொழுக்கவை.
stalling
n. தொழுவ அடைப்பு.
stallinger
n. சந்தைச் சாவடியாளர்.
stalwart
n. வல்லவர், கட்சியின் வன் கடைப்பிடியாளர், (பெ.) உரமிக்க, கட்டுறுதிவாய்ந்த, வீரமிக்க, மனவுரம்வாய்ந்த, உலையா உறுதியுடைய, வன் கடைப்பிடி வாய்ந்த.
stamen
n. மலரிழை, மலரின் ஆணுறுப்பு.
stamina
n. கருவகக்கூறு, அடிப்படைக்கூறு, உள்ளுரம், தாங்கும் உறுதி, அடிவேலு.
staminal
a. மலரிழை சார்ந்த, பூவிழைக்குரிய, பண்புரஞ் சார்ந்த.
staminate
a. மலரிழைகளையுடைய, பூவிழைவாய்ந்த, மலரிழைமட்டுமேயுடைய, சூலகம் இல்லாத.
stamineal
a. பூவிழைகளையுடைய, பூவிழைகள் அடங்கிய.
staminiferous
a. மலரிழைகளையுடைய.
staminode, staminodium
n. பொலிவற்ற பூவிழை, மலட்டுமலரிழை.