English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
stack
n. வைக்கோற்போர், உலர்புல் போர், மோடார்ந்த கூலக்குவியல், தானியக் கதிர்க்கூம்பு, சுழல் துப்பாக்கிக் குவட்டடுக்கு, கழி அடுக்குக் குவியல், கூப்பு, 10க்ஷ் கன அடிக்கட்டை அளவு, புகைப்போக்கிகளின் கும்பு, கப்பல் அல்லது ஊர்திவகையில் புகைக்கூம்பு, ஸ்காத்லாந்து நாட்டு வழக்கிலும் ஆர்க்னித்தீவுகள் வழக்கிலும் கடற்கரையோரக் கொடும்பாறை, (வினை.) போராகக் குவி, கூம்பாக எழுப்பு, குவியலாகக் குவித்து வை, விமான தளத்தில் விமானக் கட்டளைவகையில் பல்வேறான மட்டங்களில் பறக்கும்படி கூறு.
stack-funnel
n. வைக்குவைப் புனல்.
staddle
n. பற்றுக்கோல், கட்டுத்தறி.
stadium
n. பண்டை கிரேக்க வழக்கில் 202 கெச நீளமுள்ள நீட்டளவை, பண்டைய கிரேக்க வழக்கில் ஓட்டப் பந்தய வெளி, விளையாட்டரங்கம், பயிற்சிவிளையாட்டுக் களரி, (மரு.) நோயின் பருவம்.
stadtholder
n. (வர.) ஆளுநர், நெதர்லாந்து வழக்கில் மண்டல ஆட்சித் தலைவர், (வர.) நெதர்லாந்து வழக்கில் மன்னர் ஆட்பேர், (வர.) நெதர்லாந்துக் குடியரசின் ஒன்றிய மாகாணங்களில் தலைமைக் குற்ற நடுவர், (வர.) டச்சுக் குடியரசின் தலைவர்.
staff
-1 n. கழி, கோல், நீள்முளை, நெடுங்கழி, வடி, கைப்பிரம்பு, கைத்தடி, ஊன்றுகோல், ஆதாரம், கொடிக்கம்பம், கொடி இணைவரிச்சட்டம், கைத்தண்டம், பணிச்சின்னம், ஆட்சிக்கோல், ஆட்சிச் சின்னம், நில அளவைக்கோல், கடல்மட்ட மானி, இருப்பூர்தி தனிநெறி செல்வதற்கான இசைவாணைச் சின்னமான எறிதண்டம, அறுவைக்கத்திக்குரிய முன்தூண்டலகு.
staff-sergeant
n. ஆணைபெறாத படைத்துறை உயர் அலுவலரின் பயிற்சி அதிகாரி.
staff-surgeon
n. கடற்படை உயர்படி அறுவை மருத்துவர், மருத்துவமனையில் வேலைபார்க்கும் படைத்துறை மருத்துவர்.
staff-tree
n. அமெரிக்க புதர்ச்செடி வகை.
stag
n. கலைமான், ஆண்மான், காளைமாடு, முழுவளர்ச்சியுற்றபின் விதையடிக்கப்பட்ட காளை, பங்குமாற்றுக்களத்தில் உடனடியாக ஆதாய விற்பனை நோக்கத்துடன் புதுப்பங்கு கோருபவர், (இழி.) வகைதுறையற்ற இருப்புச் சரக்கு வணிகர்.
stag-bettle
n. கொம்பன் வண்டு, கலைமான் கொம்பு போன்ற நிமிர் தாடையலகுடைய வண்டுவகை.
stag-evil
n. குதிரைகளின் வாய்ப்பூட்டு நோய்.
stag-horn
n. சிதல் விதை உறைகள் கொண்ட பாசி வகை, பவளக்கொடி வகை.
stag-party
n. ஆடூஉக்குழாம், ஆடவர் மட்டும் கொண்ட குழு.
stage
n. அரங்கு, நாடகமேடை, சாரமேடை, கொல்லத்து வேலைக்காரரின் கட்டுமானத் துணைச்சட்டம், பார்வைத்தட்டம், உருப்பெருக்காடியில் பார்க்கப்படும் பொருள் வைக்குந்தட்டு, நாடகம், நாடகக்காட்சி, நடிப்புக்கலை, நடிப்புத்தொழில், படிநிலை, வளர்ச்சியில் எய்தியுள்ள பருவம், முன்னேற்றப்படி, வரிசை அடுக்கு, வேலைப்படி, செயற்கூறு, செயற்களம், செயலரங்கம், துறை, வழிக்கட்டம், உந்தூர்தித்தொலைவுக் கூறு, நிறுத்து நிலை, உந்தூர்தி நிறுத்துமிடம், அஞ்சல்வண்டி, படிமுறைப் பயணவண்டி, (மண்.) மண்ணுழிப்பிரிவுக் கூறு, (வினை.) நாடகமாகக் காட்டு, மேடையில் நடித்துக்காட்டு, நாடகக் காட்சி போல் நடைமுறைப் படுத்திக் காட்டு, நாடகப்பாணியமை, நாடக வகையில் மேடைக்காட்சிக்குப் பொருத்தமாயமை.
stage-coach
n. அஞ்சல்முறை வண்டி, இடையிடையே பயணக்கட்டங்களில் மாற்றுக்குதிரை வசதி ஏற்பாடுகளுடன் செல்லும் வண்டி.
stage-coachman
n. அஞ்சல் வண்டி வலவர்.
stage-struck
a. மேடைத் திணறலுடைய.