English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
splatter
v. சளசள ஒலிசெய், சிதறித்தெறிக்கும் ஒலி செய், புரியா மொழி பேசு, விளங்காதபடி உரையாடு.
splay
n. தளச்சாய்வுக் கோட்டம், கதவு-பலகணி விளிம்புச் சுவர்ச்சாய்வு, மதிற்புழைப் புறக்கோட்டச் சாய்வு, (பெ.) புறநோக்கிச் சாய்வான, கால்வகையில் சப்பயைன, வாய்வகையில் இளித்த, புறநோக்கி நீண்ட, (வினை.) மதிலின் உட்புறப்புழை புறநோக்கிச் சாய்வாக அமை, கதவு-பலகணி விளிம்புச் சுவரைப் புடைச்சாய்வாக்கு, மதிற்புழை-கதவு-பலகணி வகையில் புடைச்சாய்வாயமை, சுளுக்கு, குதிரையின் தோள்பட்டை வகையில் மூட்டுப்பிசகு.
splay-foot
n. சப்பைக்கல், புறத்தே திரும்பியுள்ள அகன்ற தட்டை அடி, (பெ.) சப்பைக்காலுடைய.
splay-footed
a. சப்பைக்காலான.
splay-mouthed
a. இளிச்சவாயுடைய, புடைநீண்ட வாயினையுடைய.
splayed
a. புடைச்சரிவான, புறநோக்கிச் சாய்வான.
spledour
n. பிறங்கொளி, கூசொளி, புகழொளி, பகட்டணி, ஆரவார ஒப்பனை, பகட்டாரவாரம், குறிப்பிடத்தக்க சீர்த்தி, சீர்மை, சீர்சிறப்பு, மென்மை, உயர்வு.
spleen
n. மண்ணீரல், உளச்சோர்வு, ஊக்கமின்மை, துயர்மனம், சினம், வெறுப்பு, பகைமை.
spleenful
a. உளச்சோர்வான, ஊக்கமற்ற, சினமுடைய, வெறுப்பான, பகைமை சார்ந்த.
spleenfully, spleenishly
adv. உளச்சோர்வுடன், ஊக்கமின்றி, சினங்கொண்டு, வெறுப்புற்று, பகையுற்று.
spleenwort
n. சூரல் இனச் சிற்றிலைப் படர்செடிவகை.
splenalgia
n. மண்ணீரல் நோவு.
splenalgic
a. மண்ணீரல் நோவுசார்ந்த, மண்ணீரற் பகுதி நோயுடைய.
splendent
a. (கனி.) சுடரிடுகிற, மினுக்கமான, பளபளப்பான.
splendid
a. ஒளிர்கிற, பிறங்கொளி வாய்ந்த, உயரிய, தனிப்படக் குறிப்பிடத்தக்க, மிகச்சிறந்த, பகட்டணி வாய்ந்த, ஆரவார ஒப்பனை வாய்ந்த, நீடிசையார்ந்த, புகழொளிப் பிறக்கமான, ஏராளமான, நிறை நலமார்ந்த, குறைவற்ற.
splendidly
adv. பிறக்கொளியோடு, தாராளமாக, குறைவின்றி, பன்பு கெழுமிய வகையில், புகழொளியுடன்.
splenectomy
n. மண்ணீரல் துணிப்பு.
splenetic
n. மண்ணீரல் நோய்க்கான மருந்து, மண்ணீரல் நோயாளி, (பெ.) மண்ணீரலுக்குரிய, சிடுசிடுப்பார்ந்த, முகவாட்டமான, உளச்சோர்வுடைய, மனவாட்டமான, வனமங்கொண்டுள்ள.
splenial
a. சிம்பு போன்ற, திமில் சதை சார்ந்த.
splenic
a. மண்ணீரல் சார்ந்த, மண்ணீரலில் உள்ள.