English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Spiozist
n. அடிமூல ஒருமைக் கோட்பாட்டாளர், ஸ்பைனோசா என்ற ஸ்பானிய மெய்விளக்க அறிஞரைப் பின்பற்றுபவர்.
spiracle
n. (வில.) விலங்குகள் மூச்சுவிடுவதற்கான தொளை, கடல் வாழுயிர் வகைகளின் ஊதுபுழை.
spiraea
n. ரோசா இனச் செடிவகை.
spiral
n. சுருள்வட்டம், திருகுசுருள், சுருள்வில், சிப்பி-சங்கு முதலியவற்றில் திருகு சுருளான வடிவமைவு, படிப்படியான ஏற்றம், படிப்படியான இறக்கம், (பெ.) திருகு சுருளான, மையத்திலிருந்து விலகிக்கொண்டே தொடர்ந்து சுற்றிச் செல்கிற, நீள் திருகான, ஆணியின் புரியைப் போல் புரிகருளான, (வினை.) திருகு சுருளாகச் செல், திருகு சுருளாக்கு.
spirally
adv. திருகுசுருள் வடிவாக, புரிசுருள் வடிவாக.
spirant
n. (ஒலி.) மூச்சு உராய்வொலி.
spiration
n. மூச்சுவிடல்.
spire
-1 n. தூபி முனை, கோபுரக் கூம்பு, மர உச்சி, கிளைக்குமிடத்துக்கு மேலுள்ள நேரடி மரப்பகுதி, புல்தாள், புல்லின் நுனிக்கூம்பு, தளிர்முனை, தளிர்க்காம்பு, நீள்காம்பு, பூங்கொத்து,குவட்டுரு, கூம்புவடிவப் பொருள், கொடுமுடி, சிகரம், கூர்முனை, கூர்முளை, (வினை.) தளிர்த்து மேனோக்கி வளர், மேனோக்கி உயர்ந்தெழு, கூம்புமுனை இணைவி, கூம்பு முனையாக உருவாகு.
spired
a. கூம்பு முனையுடைய, கூம்புமுனை பொருத்தப்பட்ட, கூம்பு வடிவான, கூர்முனை வாய்ந்த, தளிர்க்கொத்துடைய, பூங்கொத்துடைய, புல்வயல் நிமிர்தாளுடைய, தளிர்த்த.
spirillum
n. திருகுசுருள் வடிவ நுண்ணுயிரி, திருகுசுருள் வடிவ நுண்ணுயிரிகளின் தொகுதி.
spirit
-1 n. மெய்க்கருத்து, மெய்பொருள், சாறு, சத்து, தெய்வஉரு, தெய்வதம், சிறுதெய்வம், மாய உரு, மாயத் தேவதை, கூளி, குறளி, திணைத்தெய்வம், சித்துரு, தெய்வத்திறம், தெய்வ தத்துவம், ஆவி உரு, ஆவிப் பொருள், காற்றலை, பரு உடல் சார்பற்ற நுண்ணுரு, உள்ளுரு, ஆன்மா, உயிர், உயிருரு, உயிர்த்தத்துவம், ஆன்மஉரு, ஆன்மிக வடிவம், உள்ளுயிர், அறிவுர, ஆற்றலுரு, உள்ளறிவுத் திறம், போக்கு, பொது இயல்பு, மனநிலை, மனப்பாங்கு, ஒழுக்கத்திறம், ஆண்மை, ஊக்கம், தெம்பு, ஆற்றல், வலிமை, வீரியம், மன உரம், தன்முனைப்பு, கிளர்ச்சி, ஆர்வ எழுச்சி, உயிர் நாடி, தூண்டு முதல், ஊக்கு முதல், ஊக்கு முதல்வர், ஊக்கத்திற்கு ஊற்றானவர், உயிர்நாடி போன்றவர், வடி நீர்மம், கடுவெறியச் சத்து, கடுவெறியக் கலவை வகை, கடுவெறிய நீர்க்கலவை, (வினை.) ஊக்கு, வலிமைகொடு, தூண்டி இயக்கு, மகிழ்வூட்டு, கிளர்ச்சியூட்டு, திடுமெனக் கொண்டேகு, மாயமாகக் கொண்டேகு, கடத்திமறை, கடத்திவிடு.
spirit-lamp
n. வெறிய விளக்கு
spirit-level
n. குமிழி மட்டம்.
spirit-rapper
n. ஆவியுலகத் தொடர்பாளர்.
spirited
a. ஊக்கம் நிறைந்த, எழுச்சி மிக்க, கிளர்ச்சியுடைய, சுறுசுறுப்பான, விறுவிறுப்பூட்டுகிற, துணிவுடைய.
spiritism
n. ஆவியுலகத்தொடர்பு, ஆவியுலகக் கோட்பாடு, ஆன்மவாதம்.
spiritless
a. துணிவற்ற, ஊக்கமில்லாத, உயிர்துடிப்புக் குன்றிய.
spiritoso
adv. (இசை.) ஊக்கத்துடன், விறுவிறுப்பாக.
spirits
n. pl. வெறிய வடிநீர்மம், வடித்திறக்கிய செறிவார்ந்த சாராயம், வெறியக் கலவை, களி கிளர்ச்சி, ஊக்க எழுச்சி, உள ஆற்றல் கூறுகள், மனம்.
spiritual
n. அகநிலைச் செய்தி, அமெரிக்க நீகிரோவரின் சமயப்பாடல், (பெ.) அகநிலையான, ஆன்ம இயலான, பருப்பொருட் சார்பற்ற, உடற் சார்பற்ற, உயிர் சார்ந்த, உயிரின் உள்ளியல்புக்குரிய, உயிர் நலஞ் சார்ந்த, தெய்வநிலைக்குரிய, திருநிலையான, சமய ஒழுக்கத்துக்குரிய, புனிதமான தெய்வத்தூண்டுதலுடைய, அகத்தூண்டுதல் சார்ந்த, இறையருள் சார்ந்த, சமயத்துறை சார்ந்த.