English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
spillway
n. கலிங்கடிக் கால், அணையிலிருந்து மிகுதித் தண்ணீர் வழிந்தோடும் வடிகால்.
spilt
v. 'ஸ்பில்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
spilth
n. சிந்திய பொருள், எச்சம்.
spin
n. சுழற்சி, திருகியக்கம், மரப்பந்தாட்டப் பந்தின் சுற்றுவிசை, திருகிறக்கப் பாய்வு, விமான வகையில் சுழன்றுகொண்டே தலைகீழாக இறங்கும் இறக்கம், விரை வேகம், விரை வேகப் பயணம், தெம்புலா, விரை சுற்றுலா, ஊர்தி-மிதிவண்டி-படகு முதலியவற்றில் விறுவிறுப்பான சிறுதொலைப் பயணம், நுற்பு, நுற்றுமுடிந்த இழை, (வினை.) பம்பரம் சுற்றிச் சுழலுவி, பம்பரவகையில் விரைவாகச் சுற்றிச் சுழலு, திருகு தூண்டிலிட்டு மீன்பிடி, ஆள்-பொருள் வகைகளில் விரைவாகச் சுற்றிச் சுழலச் செய், சுண்டுவிரல் விட்டுஆட்டு, அதிர்ச்சியின் விளைவாகக் கறக்கமுறு, நுற்பாற்று, பஞ்சு-கம்பளி முதலியவற்றின் வகையில் நுற்று இழையாக்கு, சிலந்தி-பட்டுப்புழு முதலியவற்றின் வகையில் பசையிழையை நுலாக ஒடவிடு, கடைசலிட்டு இழைத்து உருவாக்கு, நீட்டியிழு, நெடிதாக்கு, நீட்டித்தொடருவி, காலத்தைச் சிறுகச் சிறுகச் செலவிட்டுப்போக்க, சரடிழு, வலிந்து உருவாக்கு, இலக்கியக் கட்டுரை-கதை முதலியன உருவாக்கு., (இழி.) வேட்பாளரைத் தேர்வுக்குப் பிறகு தள்ளிவிடு.
spinach, spinage
பசளைக்கீரை.
spinal
a. முதுகந்தண்டு சார்ந்த.
spindle
a. நுற்புக்கதிர், கழிசுற்று நுற்கோல், நுற்புஇயந்திரத்தின் கதிர்ச் சாலகை, ஊடச்சின் சுழல் முளை, சுழல்வட்டின் ஊடச்சு முளை, ஒல்லியானவர், மெல்லொடுக்கமான பொருள், நுல் நீள அளவு, (வினை.) கதிர்க்கோல் வடிவம் பெற்றிரு, மென்கம்பி போன்றிரு, மென்கம்பியாகு, நீண்டு ஒடுங்கி வளர்.
spindle-legged
a. ஊசிக்காலுடைய, நெடுங்காலுடைய.
spindle-shanked
a. நீண்டொடுங்கிய கால்களையுடைய.
spindle-shanks
n. pl. கம்பிக்காலர், நீண்டொடுங்கிய கால்களையுடையவர்.
spindle-shaped
a. கதிர்க்கோல் வடிவான, இடைபெருத்து இருமுனைகளிலும் கூம்பியுள்ள.
spindle-tree
n. கதிர்க்கோல் செய்வதற்குப் பயன்படும் மர வகை.
spindly
a. நீண்டொடுங்கிய, மெல்லியதாக்கப்பட்ட.
spindrift
n. கடல் மேற்பரப்பில் வீசியடிக்கும் நுண்திவலை ஆவி.
spine
n. முள்ளந்தண்டு, தண்டெலும்பு, முதுகந்தொண்டு, முதுகெலும்பு, (தாவ.) முள், இலை முதலிய உறுப்புக்களின் கூர்முனைத, மாறிய உருவான முட்பகுதி, ஓரு முனைப்பு, புத்தக அடுக்கில் புத்தக விளிம்பு முனைப்பு.
spineback
n. தண்டெலும்பு முனைப்பாகவுடைய மீன்வகை.
spined
a. முதுகெலும்புடைய, உள்ளெலும்புடைய.
spinel
n. பல்வண்ணப் பளிங்குருவினையுடைய கனிப்பொருள் வகை.
spineless
a. தண்டிலியான, முதுகெலும்பில்லாத, உறுதியற்ற, வலுவற்ற, முக்கிய ஆதாரமிழந்த, மீன்வகையில் முதுகுத் துடுப்புடனிணைந்த முள்ளெலும்பு இல்லாத.
spinet
n. இறகுவடிவ நரப்பிசைக் கருவி வகை.