English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
spider
n. சிலந்தி, எட்டுக்காலி, சிலந்தியினத்தின் வகை, சிலந்திப் பேரினம், சிலந்தி போன்ற பொருள், இக்கா, குச்சு வண்டி.
spider-catcher
n. நீள் அலகுப் பறவைவகை.
spider-crab
n. நீள் மென்கால் நண்டுவகை.
spider-line
n. சிலந்தி நுலிழை.
spider-monkey
n. நெடுங்கால் அமெரிக்க குரங்குவகை.
spider-wasp
n. குஞ்சுகளுக்காகச் சிலந்திப்பூச்சிகளைக் கூட்டிற் சேர்த்துவைக்குங் குளவிவகை.
spidery
a. சிலந்திபோன்ற, சிலந்திப்பூச்சிகள் நிறைந்த, எழுத்துவகையில் நெடுநீள் மெல்வரைகளார்ந்த, சக்கரவகையில் கொடுவளைவான நெடுநீள ஆரங்களையுடைய, கைகால்கள் வகையில் வற்றி, ஒடுங்கி நெடுநீளமான.
spiegeleisen
n. கன்மம் அடங்கிய வார்ப்பிரும்பு வகை.
spiel
n. (இழி.) பேச்சு, கதை, சொற்சரடு, (வினை.) விரித்துப் பேசு, மேடையில் முழக்கமிடு, சொற்பொழிவாற்று, நுற்கண்டில் புரியவிழவிடு, சரடு விடு, வம்பள, கதையள, பேச்சுநீட்டு.
spiflicate, spifflicate
v. (இழி.) நொறுக்கு, ஒழி, அழி, அடக்கு, மூளை, குழப்பு.
spigot
n. முளை, மூடுகுமிழ்.
spike
n. கதிர்முனை, கூர்முனை, முனைக்கதிர், இரும்புமுள், தண்டவாள ஆணி, தடித்த பெரிய ஆணி, நறுமணப் பூஞ்செடி வகை, (தாவ.) குலைக்கதிர், கதிர்க்குலையுடன் கூடிய சினை, கதிரிளங்கொப்பு, (பே-வ) மீவினை ஆங்கிலத் திருச்சபை மரபினர், (வினை.) தடித்த பெரிய இருப்பாணி கொண்டு இறுக்கு, இரும்புமுட்கள் அமைத்துக் கொடு, குழாய்ப்பொருத்து முனையினால் இணை, கூர்முனையினாற் குத்து, குத்தித் துளை, பீரங்கி வாயினை முளைகொண்டு அடைத்து மூடு, பயனற்றதாகச் செய்.
spikenard
n. இலாமிச்சை, சடாமாஞ்சிப் பூண்டுவகை, இலாமிச்சைத் தைலம்.
spiky
a. முள்ளார்ந்த, இரும்புமுட்கள் பொருத்தப் பெற்றுள்ள, கூர்முனையுடைய, (பே-வ) வினைமுனைப்புடைய ஆங்கிலத் திருச்சபை சார்ந்த.
spile
n. முளை, அடைப்பு, ஆப்பு, முளைத்தடி, நிலத்தில் அடித்திறக்குவதற்கான பெரிய வெட்டுமரம், மண்ணில் அடித்திறக்கிய முளை, (வினை.) மிடாவில் முளையடைப்பதற்குரிய துளை செய்.
spiling
n. முளைகளின் தொகுதி, (கப்.) கப்பலின் விலாக் கட்டை ஓர வளைவு.
spill
-1 n. சிந்துதல், சொரிதல், கொட்டுதல், (வினை.) சிந்து, கொட்டு, சொரி, உதிர், நீர்மத்தை வழியவிடு, நீர்ம வகையில் வழிந்தோடு, குதிரைவகையில் முதுகிலிருந்து கீழே தள்ளிவிடு, (கப்.) பாய்மடிப்புக் காற்றை வெளியேறவிடு.
spiller
n. உட்பை வலை, பெரிய வலையைக் கரைக்கு இழுக்க முடியாத போது அதனுள்ளிருக்கும் மீனை அகற்றுதற்காகப் பயன்படுத்தப்படும் சிறு வலை.
spillikin
n. ஆட்டக்கீற்று, ஆட்டக்காயாகப் பயன்படும் கட்டைக்கீற்று அல்லது எலும்புத் துணுக்கு.
spillikins
n. pl. கீற்றோட்டம், கட்டை அல்லது எலும்புச் சிம்புகளால் ஆடப்படும் விளையாட்டு வகை.