English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
spado
n. (சட்.) மலடன், மலட்டு விலங்கு.
spaghettI
n. திரி இடியப்ப வகை.
spahee, spahi
முற்காலத் துருக்கு நாட்டுக் குதிரைப்படைவீரன், பிரஞ்சு அல்ஜீரிய குதிரை வீரன்.
spake
v. செய்யுள் வழக்கில் ஸ்பீக் என்பதன் இறந்தகாலம்.
spalder
n. நொறுக்காளர், சுரங்க வேலையில் தாதுப்பொருள்களை வகைப்படுத்தும் பொருட்டுச் சிம்புகளாக உடைப்பவர்.
spall
n. சிம்பு, சிராய், (வினை.) சிம்புகளாக நொறுக்கு, சுரங்கவேலைவகையில் தாதுப்பொருள்களை வகைப்படுத்துவதற்காகச் சிம்புகளாக உடை.
spalpeen
n. வீரன், அயர்லாந்து நாட்டு வழக்கில் கீழ்மகன்.
spam
n. தகரப்பேழையில் அடைக்கப்பட்ட இறக்குமதி உணவுப்பொருள்.
span
-1 n. சாண் அளவு, அரைமுழம், ஒன்பது அங்குலம், தாவகலம், ஆறு-பால வகைகளில் கோடிக்குக் கோடியான முழு இடைநீளம், வில்விட்டம், பால வகையில் ஆதாரக் கம்பங்களிடையேயுள்ள தனி வளைவு அளவு, பாவளவு, வானுர்தி இறக்கை முளையிலிருந்து இறக்கை முளையளவான இடையகல அளவு, (கப்.) சுருளை, நிலையாதாரக் கயிற்றில் இரு ஆதாரங்களுக்கிடைப்பட்ட ஓருமடி அளவு இறக்கை மாடம், பல்கவிவான, கட்டுமானமுடைய செடிகொடி வளர்ப்புக் கண்ணாடிமனை, வீச்சளவு, இடை நேர்தொலை, காலத்தொடர் வீச்சளவு, கால வரையறையளவு, முழுவீச்சளவு, முழுக்கால அளவு, குறுகிய இடஅளவு, குறுகிய கால அளவு, வீச்செல்லை, எட்டு தொலை, கிட்டு தொலை, புலனுணர்வு வீச்செல்லை, மனம் பற்றெல்லை, அறிவு வீச்செல்லை, இணைகோவை, குதிரை இணை தொகுதி, (வினை.) கவிந்து இணை, தழுவி இணை, அளாவியிரு, கவிந்திரு, தாவிச்செல், அளாவிக்கிட, இணைத்துக்கிட, அளாவி இணைத்திரு, தன் எல்லைக்குள்ளாகக் கொண்டிரு, இணைத்துப் பாலமமை, சாணிட்டள, கையால் அள, தொடர்பாயிணைத்து நினைவிற்கொணர், கருத்தில் மதித்து நோக்கு.
span-dogs
n. இணைகம்பிப் பற்றிறுக்கி, வெட்டுமரத்தைப் பற்றும் வளைவுகள் உடைய இரும்புக் கம்பி.
span-roof
n. சமச்சரிவுக் கூரை.
span-worm
n. கம்பளிப் புழு.
spandrel
n. கவான்முக்கு, கவான் வளைவுக்கும் அதுகவிந்த செங்கோண வட்டத்திற்கும் இடைப்பட்ட மூளையிடம்.
spangle
n. ஆடை ஒப்பனையில் பயன்படுத்தும் மின்மினு தகடு, ஜிகினா, மினுங்குஞ் சிறுபொருள், (வினை.) மின்வட்டுமணி பொருத்தி ஒப்பனை செய்,
spangled
a. ஜிகினா வேலே செய்யப்பட்ட.
spangly
a. மினுங்குகிற, மின்வட்டுமணி போன்ற.
Spaniard
n. ஸ்பெயின் நாட்டார்.
spaniel
n. குச்சு வேட்டைநாய், மடிகாதும் வழவழப்பு உடலும் பணிவார்ந்த பண்புமுடைய வேட்டைநாய்வகை, வளர்ப்பு நாய்வகை, அடிவருடி, கெஞ்சம் அடிமைப் பண்புடையவர்.
Spanish
n. ஸ்பானிய மொழி, (பெ.) ஸ்பானிய நாட்டைச் சார்ந்த, ஸ்பானியர்களை பற்றிய, ஸ்பானிய மொழி சார்ந்த.
spank
n. பிட்டத்து அடி, (வினை.) பிட்டத்தில் அறை, அடித்து விரைந்து ஓடச்செய்.