English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
spanker
n. பிட்டத்தில் அறைபவர், விரைநடைக்குதிரை, (பே-வ) குறிப்பிடத்தக்க பெரிய ஒன்று, அதிர்ச்சிதரும் ஒன்று, மிகு கவர்ச்சியான மனிதன், (கப்.) நடுக்கள முன்பின்புறக் கப்பற்பாய்.
spanking
n. பிட்ட அறை, பிட்ட உதை, பிட்ட அறைகொடுத்தல், (பெ.) (பே-வ) கவர்ச்சியான, குறிப்பிடத்தக்க, அருஞ்சிறப்புடைய, நேர்த்தியான, (வினையடை.) கவாச்சியாக, குறிப்பிடத்தக்கவாறு, நேர்த்தியாக.
spanless
a. (செய்.) அளத்தற்கரிய, கவிந்திணைக்கப்பட முடியாத.
spanner
n. கவிந்திணைப்பவர், கவிந்திணைப்பது, புரிமுரக்கி, திருகு முடுக்கும் அல்லது கழற்றும் கருவி, பாலத்தின் குறுக்குச்சட்டம், இயந்திரத்தில் ஒருபோகு இயக்கத்திலுள்ள இணைப்புச்சட்டம்.
spar
-1 n. கப்பற் பாய்மரக்கழி, (வினை.) கப்பற் பாய்மரக் கழியினைப் பொருத்து, கழிகொண்டு ஆழமற்ற திட்டுக் கடந்து கப்பலைச் செலுத்து.
spar-buoy
n. கழிமுனை, மிதவை, நிமிர்முனைப் பாய்மரக் கழியடியில் இணைக்கப்பட்ட மிதவைக்கட்டை.
spar-deck
n. கப்பலின் முழுநீள மேல்தளம்.
sparable
n. குற்றாணி, புதைமிதியடிகளின் அடித்தோல் குதிகாற்பகுதி பொருத்தப் பயன்படும் தலையற்ற ஆணி வகை.
spare
n. காப்புறுப்பு, இயந்திரங்கள் பொறிகள் ஊர்திகள் வகையில் வேளைக்காப்பீட்டு உதிரி உறுப்பு, (பெ.) அருகலான, குறைவான, மட்டான, போதாத, ஒல்லியான, மெலிந்த, கஞ்சத்தனமான, செட்டான, சிக்கனமான, போதிய அளவினும் மிக்க, தனக்குக்போக மீந்த, மீத்தளிக்கக்கூடிய, மீழ்த்திலிருந்து கொடுக்கத்தக்க, பொதுத் தேவைக்கு மேற் பட்டதான, விட்டுக்கொடுக்கக்கூடிய, நெருக்கடி வேளைக்காக ஒதுக்கிவைக்கப்பட்ட, (வினை.) கொல்லாமல் விடு, அழிக்காமல் விடு, அழியாமற் பேணு, தண்டிக்காமல் விடு, கேடு செய்யாமல் விடு, மன்னித்துவிடு, பிழைத்துப்போகவிடு, விட்டுவை, விட்டவிடு, இல்லாமற் கழி, செலவிடாமல், மீத்துவை, காத்துவை, சொல்லாமல் விடு, மீத்துவழங்கு, மீழ்த்திலிருந்து கொடு, கடுந்தேவைக்குரியது போக மீதத்தைக் கொடு, அவசர ஈடுபாடு போக மீத நேரங்கொடு, மிகுதேவை போக மீத்துக்கொடுக்க இயலும் நிலையிலிரு, சிறிது கொடுத்தருள், செட்டாக இடு, மட்டாகச் செலவிடு.
sparerib
n. செட்டெலும்பு, மிகளம் கொஞ்சமான இறைச்சியோடு கூடிய பன்றியின் மேல் விலா எலும்பு.
sparger
n. தேறல் வடித்தலில் தூவுகலம்.
sparing
a. கைப்படிப்பான, கையிறுக்கமான, மிகக்குறைந்த அளவில் செலவுசெய்கிற.
sparingly
adv. செட்டாக, சுருக்கமாக.
sparingness
n. செட்டு, கையிறுக்கம், கைச்சுருக்கம்.
spark
n. தீப்பொறி, சுடர்ப்பொறி, மின்விசைப்பொறி, அனற்கூறு, ஒளிர்முனை, மணிக்கல்லின் சுடர்முகப்பு, மின்னுந் துகள், மினுங்கும் பொருள், உயிர்ப்பு, உயிர்த்துடிப்பு, அறிவுத்துடிப்பு, பண்புத்திறம், தூண்டுதிறம், மகிழ்நன், ஒய்யாரன், காதற்கொழுந்து, இன்பண்பாளர், சமுதாத்திற் பழகுதற்கினியவர், (வினை.) அனற்பொறி காலு, சுடர்ப்பொறி வெளியிடு, மின்பொறியுமிழ், (மின.) மின்னோட்டம் தடைப்படும் இடத்தில் மின்பொறி உண்டாக்கு, மகளிரிடையே காதல் தோழனாயமை, பழகினியனாயிரு.
spark-arrester
n. மின்பொறிக் காப்பமைவு, மின்கருவிகளில் தீப்பொறியால் சேதம் உண்டாகதபடி தடுக்கும் அமைவு.
spark-gap
n. மின்விசைப்பொறி தாவும் மின்முனை இடைவெளிநெறி.
sparking-plug
n. உந்துபொறி-உள்வெப்பாலைகளில் வெடிக்கலவைக்கு அனற்பொறியூட்டும் அமைவு.
sparkish
a. களிகிளர்ச்சிவாய்ந்த, பகட்டொய்யாரமான.
sparkle
n. ஒளிர்வு, சுடர்வு, மினுக்குறவு, (வினை.) மின்னுமினங்கு, ஒளிவிடு, சுடரிடு, பளபளப்புறு, பிறங்குறு.