English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sobranje
n. பல்கேரிய நாட்டு மாமன்றம்.
sobriety
n. மிதக்குடி நிலை, மதுவிலக்கிய நிலை, தௌிந்த அறிவுடைய நிலை, சமநிலை, உணர்ச்சிவசப்படாத நிலை, அமைதி நிலை, வீறமைதி.
sobriquet
n. சாட்டுப்பெயர், புனைபெயர்.
soccer
n. (பே-வ) உதைபந்தாட்டம், இலக்குக்காவலர் தவிர வேறு எவரும் பந்தினைக் கையால் தொடக்கூடாதென்ற வரையறையினையுடைய காற்பந்தாட்ட வகை.
sociable
n. திறந்த ஈரெதிரெதிர் சாய்விருக்கை நாற்சக்கரவண்டி, ஈரிணைவிருக்கை மிதிவண்டி, ஈரிணைவிருக்கை முச்சக்கர மிதிவண்டி, எதிரெதிர் கவைச் சாய்விருக்கை, எதிரெதிர் அமர்விற்குரிய வளைவெதிர் வளைவு வடிவமான இணைவிருக்கை, (பெ.) கூடிப்பழகும் இயல்பு வாய்ந்த, சமுதாயப் பழக்குத்துக்குகந்த, எளிதில் கலந்துரையாடுகிற, தாராளமாக ஊடாடிப் பழகுகிற, பிறருடன் எளிதில் உரையாடி மகிழ்கிற, கூடியிருப்பதற்குகந்த, சமுதாய வெறுப்பற்ற, தோழமை விரும்புகிற, கூட்ட வகையில் நட்பிணக்கம் வாய்ந்த, விதிமுறை வற்புறுத்தலற்ற, விறைப்பாய் ஒதுங்கியிராத, எளிதில் அடுத்துப் பழகுவதற்று இடமளிக்கிற.
sociableness
n. சமுதாய ஒப்பரவு.
sociably
adv. நட்பிணக்கமாக, சமுதாயத் தோழமையுணர்ச்சியுடன்.
social
n. பொது அளவளாவற் கூட்டம், தோழமைக்கூட்டம், விருந்துணவுக்குழாய், கூட்டருந்குழுமம், (பெ.) சமுதாயஞ் சார்ந்த, சமுதாயத்திற்குரிய, சமுதாயத்திலுள்ள, சமுதயா நோக்கிய, சமுதாய உறுப்பினர்களடங்கிய, சமுதயாப் பொதுவான, சமுதாயக் கூட்டான, கூடிவாழ்கிற, இணைந்து வாழ விரும்புகிற, கூட்டுவாழ்வு அவாவுகிற, தனிவாழ்க்கை விரும்பாத, ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிற, ஒன்றினை ஒன்று சார்ந்துள்ள, சமுதாயக் கூட்டுறவான, கூட்டாகத் தொழிற் பங்கீட்டினைக் கையாள்கிற, கூட்டில் அங்கமமான, பொது அளவளாவலுக்குரிய, ஒத்துறவாடுகிற, ஒத்துணர்கிற, கூடிமகிழ்கிற.
socialism
n. பொதுநலக்கூட்டுத் தத்துவம், சமதருமம், உடைமைப் பொதுமைக் கோட்பாடு, பொதுநலனை முன்னிட்டுத் தனிப்பட்டவர்களின் உரிமையைக் கீழ்ப்படுத்த வேண்டுமென்னுங் கோட்பாடு.
socialist
n. சமதருமவாதி, பொதுநலக் கூட்டுக்கொள்கைப் பற்றாளர்.
socialistic
a. சமதரும அடிப்படையான, கூட்டுப்பொதுநலஞ் சார்ந்த, சமதருமக்கொள்கை சார்ந்த.
socialistically
adv. சமுதாயக் கூட்டடிப்படையில், சமதரும முறையில், கூட்டுப் பொதுநலமாக.
socialite
n. நயநாகரிகச் சமுதாயத்தில் இடம் பெற்றவர்.
sociality
n. சமுதாயச் சார்பாயிருத்தல், சமுதாயச் சார்பு, சமுதாயத்தொடர்பு, சமுதாயப் பழக்கம், கூட்டு வாழ்வுப் பண்பு, நட்பூடாட்டம், கூடிக்களிப்பு, கூட்டுறவுப்பான்மை, அளவளாவற் பாங்கு, சமுதாய நடைமுறைச் சடங்கு, சமுதாய ஆசாரம்.
socialize
v. சமுதாயஞ் சார்ந்ததாகப் பண்ணு, கூட்டுப்பொதுநல அடிப்படையின் பேரில் நேறுவு.
society
n. மன்னாயம், சமுதாயம், கூட்டுவாழ்வுக்குழு, கூட்டிருக்கை, நட்புக்குழு, தோழமை, சேர்க்கை, சமுதாய வாழ்வு, சமுதாயப்பங்கு, சமுதாய அமைப்பு, சமுதாயப் பழக்கவழக்கத்தொகுதி, குடிமை, உயர்குடி வகுப்பு, நாகரிக சமுதாயம், நாகரிகப்பண்புக்குழு, பண்புடையோர் குழு, மேனிலைமக்கள் தொகுதி, மேனிலை வகுப்பு, மேனிலைத்தொடர்புடையோர் குழு, உயர் விருந்தோம்பற் சூழல், சங்கம், கூட்டுக்கழகம், கூட்டுறவுக்குழு, சேவைக்குழு, கொள்கைக்குழு, கோட்பாடு, வரையறையுடைய கழகம், பொதுக்குறிக்கோட் கழகம், (பெ.) நவநாகரிகக் குழுவினருக்குரிய, உயர்வகுப்பினர்களுக்கான, உயர்குடியினரிடைய ஊடாடுகிற, நாகரிகப் பாங்குடைய, உயர் வழூப்பினரிடைய வழங்குகிற.
Socinian
n. இத்தாலி நாட்டில் 16 ஆம் நுற்றாண்டில் எழுந்த இறைமையியற் கோட்பாட்டினர், (பெ.) 'சோசினஸ்' என்னும் பெயர்கொண்ட இருவரது கோட்பாட்டின்படியுள்ள, இத்தாலியில் 16ஆம் நுற்றாண்டில் நிலவிய இறைமைக் கோட்பாட்டுப் பிரிவினைச் சார்ந்த.
sociology
n. மன்னாய நுல்,மனித சமுதாயத்தின் வளர்ச்சி-இயல்பு-சட்டங்கள் ஆகியவை பற்றிய ஆய்வுத்துறை.