English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
snow-plough
n. பனி வாரி, பாதைகளினின்றும் பனி அடைவுகளை அகற்றுவதற்கான கருவி.
snow-shoes
n.pl. பனிமிதியடி, பனி நடைக்கட்டை.
snow-shovel
n. பனிவாருதட்டு.
snow-slip
n. சறுக்கு பனிப்பாறை.
snow-storm
n. பனிப்புயல், பனிச்சூறை.
snow-white
a. பனிபோல் வெள்ளிய.
snowball
n. பனித்திரள், எறிபொருளாகப் பயன்படும் பனி மொந்தை, திரள்பிழம்பு நிதி, பங்கு வரியாளர் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பங்கு வரியாளர்களைச் சேர்க்க வேண்டுமென்னும் திட்டப்படி வளரும் நிதி, பழப்பொதியடை, அரிசிமாவில் ஆப்பிள் பழம் வைத்துச் சமைத்த பிட்டு, (வினை.) பனித்திரளையால் அடி, பனித்திரளையாலடித்துப் பந்தயம் விளையாடு.
snowball-tree
n. வட்டப் பனிமலர்ச்செடிவகை.
snowdrop
n. வெண்மலரினையுடைய செடிவகை.
snowless
a. பனியற்ற, பனி பெய்யாத.
snows
n. pl. பனிப்பெயல், பனித்திரள்.
snowy
a. பனி மிகுந்துள்ள, பனிமூடப்பட்ட, திண் பனிபோன்று வெண்மையான, தூய வெண்மைநிறமான, தூண்மையான.
snub
n. மொட்டைக்கண்டிப்பு, சப்பையடி, மட்டையடி, மதிப்புக்குலைப்பு, மானக்குலைவு, இடைநிறுத்தீடு, திடீர்நிறுத்தம், வாயுடைப்புவாதம், (அரு.) சப்பை மூக்கு, குறுக்குத்து மூக்கு, கட்டுத்தறி, குற்றி, (பெ.) மூக்குவகையில் சப்பையான, குறுங்குத்தான, மூக்குவகையில் மேல்நோக்கி வளைந்த நுனியுடைய, (வினை.) மொட்டையாகக் கண்டி, வெடுக்கெனத் திட்டு, அகட்டியடக்கு, கண்டித்தடக்கு, மட்டந்தட்டிவிடு, குறுக்கிட்டு வாய்மூடுவி, அவமதித்தடக்கு, அடக்கி இழிவுபடுத்து, முரட்டுத்தனமாக இழிவுபடுத்து, திடுமென நிறுத்து, இடைமறித்து நிறுத்து, வளர்ச்சிதடைப்படுவி, கப்பலைத் தடுத்துநிறுத்து, கப்பல் கட்டுதறியிற்கயிறு சுற்றுவதனால் கப்பற்போக்கை நிறுத்து.
snubber
n. மட்டந்தட்டுபவர், மொட்டைக் கண்டிப்பாளர், கட்டுதறி, அதிர்ச்சி தாங்கி.
snubbing
n. கடுந்திட்டு, மொட்டைக்கண்டனம், அதிரடி.
snubbing-post, snub-post
குதிரைக் கட்டுதறி, படகுக் கட்டுகறி.
snuff
-1 n. உறிஞ்சுதல், மோப்பம்பிடித்தல், மூக்குத்தூள், மூக்கு உறிஞ்சு மருந்துப்பொடி, சிட்டிகையளவுப்பொடி, பொடியிடல், சீறல், (வினை.) மூக்கினால் உறிஞ்சு, மோப்பம் பிடி, மூக்குப்பொடியிடு.
snuff-box
n. மூக்குத்தூள் சிமிழ், பொடிமட்டை.
snuff-colour
n. மஞ்சள் பழுப்புநிறம், பொடிநிறம்.
snuff-dish
n. மெழுகுதிரிக் கத்தரிக்கோல் வைப்பதற்குரிய தட்டு.