English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
silicon
n. கன்மம், மணற்சத்திற் பெரிதளவாயுள்ள தனிமம்.
sililoquist
n. தனி மொழியாளர், நாடகத்தில் தானே உரையாடிக்கொள்பவர்.
siliqua
n. கடுகு இனமரவகை நெற்று.
silk
n. பட்டு, பட்டுத்துகில், பட்டிழை, செயற்கைப்பட்டு, செயற்கைப்பட்டுத்துகில், செயற்கைப் பட்டிழை, சிலந்தி நுல்வகை, நீல-மாணிக்கக்கல் வகைகளின் தனி மெல்லொளி, (பே-வ) அரசுச் சார்பு வழக்குரைஞர், (பெ.) பட்டினாலாய.
silk-cotton
n. இலவு, இலவம்பஞ்சுமரம், இலவம்பஞ்சு.
silk-fowl
n. பட்டியல் இறகுடைய பறவை வகை.
silk-gland
n. பட்டுப்புழுவின் பட்டுநீர்மச் சுரப்பி.
silk-reel
n. பட்டுநுல் திரிவட்டு.
silken
a. பட்டாலான, பட்டுப்போன்ற, மென்னயமான, பட்டொளமி வீசுகிற, இன்னயமிக்க, இன்பசப்பான.
silkiness
n. பட்டுப்போன்ற பண்பு, மென்பட்டியல்பு.
silkworm
n. பட்டுப்பூச்சி.
silky
a. பட்டுப்போன்ற, மெல்லிழைவான, இன்னழகு வாய்ந்த, மென்னய நேர்த்தியுடைய.
sill
n. பலகணிப்படிக்கல், பலகணிப் படிக்கட்டை, வாயிற் படிக்கல், வாயிற்படிக்கட்டை, கப்பல் கட்டுத்துறை வாயில் அடித்தளக்கட்டு.
sillabub
n. பாற் பாசடை, பாலேடு-தேறல்-பசைமங்கலந்த கூழமுதுணவு.
sillily
adv. மடத்தனமாக, சிறுபிள்ளைத்தனமாக, அறிவற்று, சூதுவாது தெரியநிலை காரணமாக.
silliness
n. மடமை, முதிரறிவின்மை, அறிவுக்குறை, மன உரமின்மை, சிறுபிள்ளைத்தனம், சூதுவாதறியாத் தன்மை, கேடற்ற சிறுமை, அற்பத்தனம், இரங்கத்தக்க நிலை, கரவின்மை.
silly
n. மட்டி, மடவோர், கேடிலி, (பெ.) மடமை வாய்ந்த, சூதுவாதறியாத, சிறுபிள்ளைத்தனமான, முதிரறிவற்ற, மன உரமற்ற, அற்பத்தனமான, கள்ளமற்ற, கரவில்லாத, அறிவற்ற, இரங்கத்தக்க, கேலியான, மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரருக்கு மிக நெருங்கிய.
silo
n. பசுந்தீவனப் பதனக்குழி, வளிபுகாப் பசும்பல் பதனப் பேழை, (வினை.) பசும்புல்லைப் பதனக்குழியிலிடு, பசுந்தீவனத்தைப் பதனப் பேழையிலிட்டு வை.
silt
n. வண்டல், சேற்றுப்படிவு, (வினை.) வண்டலிடு, சேறாகப் படிவுறு, வண்டலிட்டடை.