English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sikh
n. சீக்கியர், பஞ்சாபிலுள்ள சீக்கிய இனத்தவர், சீக்கிய சமயத்தவர், சீக்கிய வீரர், (பெ.) சீக்கிய இனஞ் சார்ந்த, சீக்கிய சமயஞ் சார்ந்த.
Sikhism
n. சீக்கிய சமயம், பஞ்சாபில் குருநானக் (146ஹீ-153க்ஷ்) என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட சமயம்.
silage
n. வளிகாப்புப் பதனமுறை, பசுந்தீவனத்தின் கால்புகாக் குழிபதன அல்லது பேழைப்பதன முறை, (வினை, ) தீவன வகையில் கால்புகாக் குழிபதனஞ்செய், பசும்புல் வகையில் வளிபுகாப் பேழைப்பதனஞ் செய், பதனக்குழியிலிடு, பதனப்பேழையிலிடு.
silence
n. அரவமின்மை, மோனம், சந்தடியின்மை, வாளாமை, வாய்விடா அமைதி, பேசாமை, வாயாடாமை, செய்தி வெளியிடாமை, மெய்ம்மை வகையில் வாயடக்கம், மறைகாப்பமைதி, (வினை.) ஓசையமர்த்து, வாயடங்கச் செய், பேச்சடங்கு, பேசாதிருக்கச் செய், விவாதத்தில் எதிராளியை அடக்கிவிடு, எதிர்வாதத்திற்கு இடமில்லாமற் செய்துவிடு, எதிரி துப்பாக்கி-பீரங்கி முதலியவற்றின் வகையில் செயல்படாததாக்கு.
silenced
a. வாயடக்கப்பட்ட, செயலற்ற நிலைப்படுத்தப்பட்ட.
silencer
n. பேசாதிருக்கச் செய்பவர், ஓசைபடாதிருக்கச் செய்யும் அமைவு.
silent
a. ஓசையற்ற, சந்தடியில்லாத, அரவமற்ற, பேசாத, வாய்விடாத, உரையாடாத, செய்திவெளியிடாத, மறைகாத்தடக்குகிற, சதி முதலிய வகையில் பேசப்படாத, அமைதியான, அடக்கமான, அமரிக்கையான, உள்ளார்ந்த, மறைசெயலுடைய, செய்திவகையில் பிறருக்குத் தெரியாத, மறைத்து வைக்கப்பட்ட, விளம்பரப்படுத்தப்படாத, வரலாறு முதலியன வகையில் ஒன்றும் தெரிவிக்காது செல்கிற, எழுத்துவகையில் ஒலிப்பற்ற, திரைப்பட வகையில் குரலிணைவற்ற, துப்பாக்கி முதலியன வகையில் ஓசைபடாத, தொழிற்பாங்காண்மை வகையில் செயற்படாத, மோனமுறை பின்பற்றுகிற.
silently
adv. பேசாமல், அமைதியாக, ஓசைபடாமல், மறைவாக.
silesia
n. மென்துகில் வகை.
silferino
n. கருஞ்சிவப்பு வண்ணச் சாயப் பொருள்.
silhouette
n. நாடகத்திரை மீது காட்டப்படும திண்ணிழலுருவம், பக்கம் நோக்கிய உருவரை நிழல்வடிவம், பக்கம் நோக்கிய உருவரைக் கருவடிவம், (வினை.) பக்கம் நோக்கிய புற வெட்டு உருவரைக் கருவடிவமாகக் காட்டு, திண்ணியழலுருவாகத் திரையிற் படிவி, திண்ணிழலுருப்படிவி.
silica
n. கன்ம ஈருயிரகை, மணலிலும் பளிங்குக்கல் வகைகளிலும் பெருங்கூறாய் அமைந்து மணற் சத்து, (பெ.) மணற் சத்துச் சார்ந்த.
silicate
n. மணற்சத்து உப்பு.
silicated
a. மணற் சத்தார்ந்த, மணற்சத்துடன் கலக்கப்பட்ட, மணற்சத்துச்செறிந்த, மணற்சத்து மேற்பூசப்பட்ட.
siliceous
a. மணற்சார்ந்த, மணற்சத்தடங்கிய.
silicic
a. மணற்சத்திற்குரிய, மணற்சத்திலிருந்து பெறப்பட்ட.
siliciferous
a. மணற்சத்தடங்கிய.
silicification
n. மணற்சத்துக் கலப்பு, மணற்சத்தூட்டுவளம், மணற்சத்தாக்கம், மணற்சத்துச் செறிப்பு, மணற் சத்தணுப்பகர இணைவு.
silicify
v. மணற்சத்தூட்டு, மணற்சத்துக் கலந்து வளமாக்கு, மணற்சத்தாய் மாற்று, மணற்சத்துத் செறிவி, மணற்சத்து அணுப்பகர இணைவாக்கு.