English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
siesta
n. நண்பகல் குறுந்துயில்.
sieve
n. சல்லடை, சலித்துப் பிரிக்கும் கருவி, அரிதட்டு, அளவு வரிகூடை, வரிகூடை அளவு, ஓட்டைவாயர், மறைகாவாது வெளியிடும் இயல்பினர், (வினை.) சல்லடையிலிட்டுச்சலி, அரிதட்டிட்டு அரி.
sifficiently
adv. போதிய அளவில் தாராளமாக.
siffix
-1 n. விகுதி, பின்னொட்டாய்ச் சேர்ந்த சொல்லறுப்பு, பின்னொட்டு, பிற்கூறு.
siffleur
n. சீழ்க்கைக் கலைஞர்.
sift
v. அரித்தெடு, சலித்துப்பிரித்து எடு, சலித்துத் தரம் பிரி, அரி, தௌ்ளு, கொழி, துளைகளுள்ள கரண்டியால் தூவு, பனி முதலியவற்றின் வகையில் தூவலாகப் பெய், ஒளிக்கதிர் சிதறப்பெறு, திரித்தாய்ந்து மெய் அறி, நன்மைதீமை பிரித்துணர், பண்பு திரித்தறி.
sigh
n. நெட்டுயிர்ப்பு, பெருமூச்சொலி, ஏக்கம், ஆழ்துயர், மிக்க ஆறுதல் உணர்வு, (வினை.) நெடுமூச்செறி, பெருமூச்சுவிடு, பெருமூச்சோடு தெரிவி, பெருமூச்சுப் போன்று ஒலியெழுப்பு, ஏக்கங்கொள்.
sight
n. பார்வை, கண்பார்வை, பார்க்கும் திறம், காட்சி, காணப்படுவது, தோற்றம், காணப்படுதல், காணக்கூடியது, கண்காட்சிப்பொருள், காட்சிக்குரியது, காண்டக்கபொருள், காட்சி எல்லை, நுண்நோக்கு, அறிதிறம், கருத்து, மதிப்புணர்வு, (பே-வ) பெரிதளவு, (வினை.) காண், அருகில் சென்று பார், காணுமளவில் அருகாகு, விண்கோளம் முதலியவற்றைக் கருவிகொண்டு நுண்ணிதின் நோக்கு, துப்பாக்கிக்குக் காட்சியமைவு இணை, துப்பாக்கிக்குக் காட்சியமைவு சரிசெய், வான்கோளநிலைமானிக்குக் காட்சியமைவு பொருத்து, தொலைநோக்கியின் துணைகொண்டு வான் கோளங்களைப் பார்வையிடு, சரியாக இலக்குவை.
sight-singing
n. காட்சியிசைப்பு, இசைமானத்தாளைப்பார்த்துப் பாடுதல்.
sightless
a. கண்ணற்ற, (செய்.) காண முடியாத.
sightly
a. காணத்தக்க, காட்சி வனப்பமைந்த.
sightworthy
a. காணத்தக்க.
sigillate
a. மட்கலங்கள் வகையில் சித்திரப்பதிவுப் படிவங்கள் கொண்ட, (தாவ.) முத்திரை போன்ற அடையாளங்கள் கொண்ட.
sigmate
a. எஸ் என்ற எழுத்தின் வடிவம் உடைய, (வினை.) எஸ் என்ற எழுத்தைச் சேர், எஸ் என்ற ஒலியை உடனிணை.
sigmatic
a. கிரேக்க மொழி இலக்கணத்தில் 'எஸ்' என்ற எழுத்திணைந்து உருவான.
sigmoid
n. எஸ் என்ற எழுத்துப்போன்ற வடிவு, எதிரெதிரான வளைவு, (பெ.) எஸ் போன்று வளைந்த.
sign
n. குறி, இடுகுறி வரை, அடையாளம், நினைவுக்குறி, அறிகுறி, அடையாளக் குறிப்பு, அறிவிப்புக்குறி, தெரிவிப்புக்குறி, தனிச்சிறப்புக் குறி, சின்னம், சுட்டுகுறி, குறியீடு, தெரிந்த எழுத்துக்குப் பதிலாக மேற்கொள்ளப்படும் தெரியவரா எழுத்து, மறைகுறியீடு, குழுஉக்குறிச் சின்னம், சைகை, கையடையாளம், மெய்யுறு குறிப்பு, செயற்குறிப்பு, சாடை, நினைவூட்டுக் குறிப்பு, விளம்பரக் குறியீடு, மரபுக்குறி, சான்றுக்குறி, எண்பிக்கும் அடையாளம், முன்அறிகுறி, முன்னம், எதிர்ப்புக்குறி, எச்சரிப்புக்குறி, நோயின்குறி, இடர்க்குறி, உற்பாதம், இராசிச்சின்னம், வான்மனைக்குறி, (வினை.) குறியீடு செய், குறித்துக்காட்டு, அடையாளம் இடு, சைகை காட்டு, சைகைமூலந் தெரிவி, சைகை மூலங் கட்டளையிடு, சைகைமூலம் வேண்டு, கையொப்பமிடு, கையொப்பமிட்டு ஒப்புதல் தெரிவி, கையொப்பமூலம் உத்தரவாதஞ் செய், கையொப்பமூலம் பணி ஏற்புச் செய், கையொப்பமூலம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்.
sign-painter
n. விளம்பரப்பலகை ஓவியர்.
sign-posf
n. கைகாட்டி, வழிகாட்டிமரம், தெருப்பெயர்ப்பலகை.
sign-writer
n. விளம்பரப் பலகை எழுத்தோவியர்.