English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
signal
n. சுட்டுக்குறி, சமிக்கை, பொதுஅறிவிப்பு அடையாளம், முன் அறிகுறி, முன் அறிவிப்புச் சுட்டு, சாடைக்குறிப்பு, மறைகுறிச் சைகை, அடையாளச் செய்தி அறிவிப்பு, தொலை விளக்கக்குறி, தொலைக்காட்சிக் குறி, (பெ.) குறிப்பிடத்தக்க, தனிச்சிறப்பு வாய்ந்த, வாய்ப்பான, தகவுடைய, மிகச் சரியானதாகக் கொள்ளத்தக்க, முனைப்பாகத் தெரிகிற, தொலைவிளக்கமான, எடுத்துக்காட்டாயுள்ள, முன்மாதிரியான, (வினை.) குறித்துக்காட்டு, சைகைகாட்டு, சாடையால் தெரிவி, சுட்டுக்குறி காட்டு, அடையாள அறிவிப்புச் செய்தி அனுப்பு, சுட்டுக்குறி மூலம் ஏவு.
Signal light
சைகை விளக்கு
signal-book
n. சுட்டுக்குறித் தொகுப்பேடு, படைத்துறை-கடற்படை முதலியவற்றில் சிக்கலான செய்திகள் அனுப்புவதற்காக ஒழுங்குசெய்து அமைக்கப்பட்ட சைகை அடையாளத் தொகுப்பு நுல்.
signal-box, signal-cabin
n. அடையாள அறிவிப்புக்கூண்டு, இருப்புப்பாதையோரமாக அமைந்த சைகைச் செய்தி அனுப்பும் கருவிக்குடில்.
signal-man, signeller
சைகைச் செய்தி அனுப்புவோர்.
signalize
v. குறிப்பிடத்தக்கதாக்கு, தனிச்சிறப்புடையதாக்கு, நீடு நினைவுக்குறியாகச் செய, பெரிதும் விளங்கச் செய்.
signatory
n. உடன்படிக்கையில் கையொப்பமிட்டவர், கையொப்பமிட்ட கட்சியினர், (பெ.) உடன்படிக்கையிற் கையொப்பமிட்ட.
signature
n. கையொப்பம், கைச்சாத்து, பெயர் முதலெழுத்துக் கையொப்பம், கைநாட்டு, கையொப்பக் குறிச்சுட்டு, அச்சு முழுமடித்தாள் வரிசை எண், அச்சு முழுத்தாள் வரிசைக்குறி.
signboard
n. விளம்பரப் பலகை.
signet
n. தனிமுத்திரை, கையொப்ப இணைகுறி முத்திரை.
signet-ring
n. முத்திரை மோதிரம், பொறிப்புக்கணையாழி.
significance
n. தனிமுறைச் சிறப்பு, உட்பொருள், தனிவிளைவு வளக்கூறு, உட்கருத்து, குறிப்பு நுட்பம்.
significant
a. குறிப்பிடத்தக்க, தனிப்படக் கவனிப்பதற்குரி, புறக்கணித்துவிடத் தகாத, தனிச்சிறப்பு வாய்ந்த, உள்ளார்ந்த சிறப்புடைய, விளைவுவளக் கூறுடைய, உட்கருத்துவளஞ் செறிந்த, குறிப்புவனஞ்சான்ற, உட்பொருளார்ந்த.
significantly
adv. குறிப்பிடத்தக்க வகையில், தனிக்குறிப்புடன், தனிக்கவனிப்பிற்குரிய முறையில.
signification
n. தனிப்பொருள், பொருள்நுட்பம், உட்குறிப்பு, உட்பொருள், தனிக்குறிப்பீடு.
significative
a. தனிக்குறிப்புடைய, தனிப்பொருட் சுட்டுடைய, குறிப்பு வளஞ்சான்ற, தனிச்சிறப்புடைய.
signify
v. குறித்துக்காட்டு, அடையாளமாய் அமை, தனிச்சின்னமாய் அமை, பின்விளைவு காட்டு, பயன்வளமுடையதாயிரு, விளைவுவளக் கூறுடையதாய் அமை, பெருள்படு, கருப்பொருளுடையதாயிரு, உட்குறிப்புடையதாயிரு, தனிக்கருத்துப் புலப்படுத்து, படிப்பினை வழங்கு, தனிச்சிறப்புடையதாயிரு, குறிப்பிடத்தக்கதாய் அமை, கவனிப்பிற்குரியதாயிரு, புறக்கணிக்கத்தகாததாயிரு, தெரிவி, அறிவி.
signor, signore
திரு., இத்தாலிய வழக்கில் மணமான ஆடவர்பெயர் முன்னடைச்சுட்டுக்குறிப்பு, திருவுடையாள், நன்மகள்.
signora
n. திருவாட்டி, இத்தாலிய வழக்கில் மணமான பெண்டிர் பெயர் முன்னடைச்சுட்டுக் குறிப்பு, திருவுடையாள், நன்மகள்.
signorina
n. செல்வி, திருநிறைசெல்வி, இத்தாலிய வழக்கில் மணமாகாத பெண்பெயர் முன்னடைச்சுட்டுக் குறிப்பு, நங்கை, இளம்பெண்.