English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
rookery
n. காக வகைகள் வாழிடம், காக வகை வாழுஞ் சாலை, கடல்நாய்க் குடியிருப்பு, தென்கடற் பறவைவகையின் தங்கல் வரிசை, நெருக்கக் குடியிருப்பு.
rookling, rooket
காக வகைக் குஞ்சு.
room
n. அறை,. இடம், வாய்ப்பு, செயல் எல்லை, வாய்ப்பெல்லை, (வினை) றைகள் வைத்திரு, இடங்கொடு, தங்க இடவசதி செய்துகொடு.
room-mate
n. ஓரறைத்தோழர்.
rooming-house
n. வாடகை அறைகளுள்ள வீடு.
rooms
n. pl. குடும்பத்தார் வசிக்கும் அறைகள், விடுதியில் குடும்பத்தினருக்கான இடம்.
roomy
a. இடவசதியுள்ள, விரிந்தகன்ற.
roost
-1 n. பறவைப் பொதும்பர், கோழிக்கூண்டு, (வினை) பறவைகள் வகையில் தூங்கு, ஆள் வகையில் சிறு துயில் கொள்ளு, உறங்குவதற்கான இடமளி, இரவில் தங்கியிரு, பறவை போல் உறங்கு.
rooster
n. வீட்டுச்சேவல்.
root
-1 n. வேர், வேர்ப்பகுதி, தழுவு கொடியின் கொளுவி, பிடுங்கிநடும் இளவேர்ச்செடி, வேருணவு, மருந்துவேர், (விவி) கான்முளை, பின்தோன்றல், உறுப்பின் அடி இணைப்புப்பகுதி, மணியின் ஒட்டுவாய், மலையின் அடியுறை, மூலம், தோற்றுவாய், மூலகாரணம், அடிப்படை, ஆதாரம், தூர், அடிப்புறம், தொடர்ச்சி அல்லது வளர்ச்சிக்கான வழி வகை, இன்றியமையாப்பொருள், மூலப்பண்பு, (கண) விசைமூலம், பெருக்கமூலம் (மொழி) வேர்ச் சொல், சொற்பகுதி, (இசை) அடிப்படைச் சுரம், (வினை) வேர்விடு, வேர்விடச் செய், உறுதயாக ஊன்றுவி, அடிநிலம் பற்றுவி, நிறுவு, நிலைபெறச்செய், வேர்பறித்து இழு, தோண்டிவேருடன் பிடுங்கு.
root-and-branch
a. முழுநிறைவான, (வினையடை) வேரோடு, அடியோடு, ஒன்றும்விடாது, முழுவதும்.
root-cap
n. வேர்நுனியுறை.
root-cause
n. அடிப்படைக் காரணம்.
root-climber
n. வேரினைப் பற்றிக்கொண்டு படருங் கொடி.
root-crop
n. உண்ணத்தக்க வேரினையுடைய பயிர்வகை.
root-fast
a. உறுதியாக வேரூன்றியுள்ள, நிலையாக ஊன்றிய.
root-hair
n. (தாவ) வேர் அமுக்கம், செடியின் வெட்டுவாயில் பொங்கி வழியுஞ் சாற்றின் மேனோக்கிய அமுக்க ஆற்றல்.
root-parasite
n. வேர் ஒட்டுத்தாவரம்.
root-pressure
n. (தாவ) வேர் அமுக்கம், செடியின் வெட்டுவாயில் பொங்கி வழியுஞ் சாற்றின் மேனோக்கிய அமுக்க ஆற்றல்.