English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
requiem
n. இறந்தார் ஆவி அமைதியடைவதற்கான சிறப்பு வழிபாடு, அமைதி வழிபாட்டிற்கான இசை அமைப்பு, இரங்கற்பா, நெய்தற்பண்.
requies cat
n. மாண்டார் ஆவியின் அமைதி குறித்த வேண்டுதல், சாந்தி.
requiescant in pace
n. அவர்கள் ஆவிகள் அமைதியுறுக.
requiescat in pace
n. அஹ்ர் ஆவி அமைதியுறுவதாக.
require
v. வேண்டு, அவாவிக்கோரு, உரிமைக்கோரிக்கையிடு, செயற் கட்டளையிடு, ஆணைக்குறிப்புத் தெரிவி, வலிந்து கோரு, தேவைப்படு, இன்றியமையா நிலையுடையதாயிரு, அவசியப்படுவதாயிரு, அவசியமாயிரு.
requirement
n. தேவை, கோரிக்கை, வேண்டப்படும் பொருள்.
requisite
n. இன்றியமையாத்தேவை, அவசியக்கூறு, வெற்றிக்குரிய முற்கூறு, தேவைப்பொருள், (பெயரடை) சூழ்நிலைகளிடையே தேவைப்படுகிற, வெற்றிக்குத் தேவையான, தேவைப்படுகிற, செயல்துறைத் தேவையான.
requisition
n. தேவைக்கோரிக்கை, எழுத்துவழி வேண்டுகேள், பணித்துறைச் செயல்முறைக் கட்டளை, படைப் பொருள் கோரிக்கைக் கட்டளை, (வினை) வேண்டுதற் கட்டளையிடு, படைத்துறைக்கான பயனீட்டு ஆணைக்கோரிக்கை செய், படைத்துறைக்கான ஆணைக்கோரிக்கையிடு, போர்ப்பொருள் நாடி ஆணையிடு, தனிமுறை அழைப்பாணையிடு, பொதுப்பணிக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்.
requite
v. கைம்மாறு செய், நல் ஈடுசெய், பரிசீடு செய், பதிலீடு அளி, பதிலுக்குப்பதில் செய், தகையுறத்ட திருப்பிக் கொடு, வஞ்சந் தீர், பழிக்குப்பழி வாங்கு.
reredos
n. பலிபீடத்தின் பின்புறச் சுவரை மறைக்கும் வேலைப்பாடுடைய திரை.
res
n. பொருள், உடைமை, சொத்து.
res angusta domi;
n. வறுமை, வீட்டிலுள்ள இடர்ப்பாட்டுநிலை.
res judicata
n. முன்பே தீர்க்கப்பட்டதென்று வாதிக்கப்பட வேண்டாதது.
resaddle
v. மீண்டுங் குதிரைக்குச் சேணங் கட்டு.
resalable
a. திருமப விற்கத்தக்க.
rescind
v. அழி, மாற்று, நீக்கு,.தள்ளுபடி, செய், உத்தரவைத் தள்ளுபடி செய்தல்.
rescis;sion
n. அழித்தல், மாற்றல், நீக்குதல், உத்தரவைத் தள்ளுபடி செய்தல்.
rescript
n. மீமிசை எழுத்து, எபதப்பட்தன் மேலாகத் திரும்ப எழுதிய எழுத்து, மீட்டெழுத்து, மறுவரைவு, மீட்டெழுதப்பட்டது, அரசியல் எழுத்து விளம்பரம், ஆட்சியாளர் சாசனம், பணிமுறைக் கட்டளைப் படி, போப்பாண்டவர் ஆணைப்பத்திரம், போப்பாண்டவர் மேல்நிடிலைத் தீர்ப்பு, சட்டக் கருத்துக்களில் உதவிபுரியுன்று வேண்டிய குற்ற நடுவரின் விண்ணப்பத்திற்கு ரோமப் பேரரசர் விடுத்த எழுத்து வழி மறுமொழிக்கட்டளை.
rescue
n. இடர்மீட்பு, மீட்புதர், இடர்காப்புதவி, தீஙட்கிலிருந்து தடுத்தாளுகை, சட்டமுரணான சிறை விடுவிப்பு, உடைமை வகையில் வலிந்த மீட்பு, (வினை) காப்பாற்று, விடுவி, தப்புவி, சட்டத்திற்கு முரணாக விடுவி, வல்லந்தமாக உடைமையைத் திரும்பப்பெறு.