English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
petitioner
n. மனுச்செய்பவர், திருமண விடுதலை கோரும் வழக்குகளில் வாதி, (வர.) பிரிட்டனின் அரசர் இரண்டாம் சார்லஸ்ஸிடம் 16க்ஷ்0ம் ஆண்டில் பாராளுமன்றம் கூட்ட வேண்டுமென்று மனுச்செய்துகொண்ட கட்சிகளில் குறிப்பிட்ட ஒன்றினைச் சார்ந்தவர்.
petitk-maitre
n. பகட்டன், பிலுக்கன், தற்பெருமைக்காரன்.
petitmal
n. கடுமையற்ற, காக்காய்வலிப்பு நோய் வகை.
petits soins
n.pl. சின்னஞ்சிறு துணையூழியங்கள்.
petits-chevaux
n. சூதாட்ட விளையாட்டு வகை.
petrel
n. கருமை வெண்மை நிறங்களும் நீண்ட இறகுகளும் உடைய சிறு கடற்பறவை வகை.
petrifaction
n. கல்லாகுதல், கல்லாக மாறிய பொருள், கல்லாக மாறிய பொருளின் திரள், கல்வடிவாகக் கிடைத்த புதைபடிவம்.
petrify
v. கல்லாக்கு உணர்ச்சியறச்செய், வியப்பால் செயலறச்செய், அச்சத்தால் உணர்விழக்கச்செய், விறைத்துப்போகச் செய், கடினமாக்கு, மனம்-கொள்கை வகையில் உயிர்ப்பு ஆற்றல் இழக்கச்செய்.
petroglyph
n. கற்பாறைச் செதுக்குவேலை.
petrograph
n. கற்பாறைச் செதுக்கெழுத்து, கல்வெட்டு.
petrography
n. கற்பாறைகளின் அமைப்பு-உருவாக்கம் முதலியவற்றைப்பற்றிய இயலாய்வு விளக்கம்.
petrol
n. கல்லெண்ணெய், பொறிவண்டிகளுக்கும்-விமானம் முதலியவற்றிற்கும் பயன்படும் தூய்மையாக்கப்பட்ட நில எண்ணெய், தூய்மைப்படுத்திய பெட்ரோலியம்.
petroleum
n. பாறை எண்ணெய், உள்வெப்பாலையிலும் பிற பொறிகளிலும் எரிபொருளாகப் பயன்படும் நில மேற்படுக்கைக்கரிய தாது எண்ணெய்.
petroleur
n. பாறை எண்ணெயைப் பயன்படுத்தி எரித்தழிப்பவன்.
petroleuse
n. பறை எண்ணெயைப் பயன்படுத்தி எரித்தழிப்பவள்.
petrolic
a. கல்லெண்ணெய் சார்ந்த, பாறை எண்ணெய்க்கு உரிய.
petrology
n. கல்லாய்வு நுல், கற்பாறைகளின் தோற்றம், அமைப்பு முதலியவை பற்றிய நுல்.
petronel
n. (வர.) பதினாறு-பதினேழாம் நுற்றாண்டுகளின் குதிரைவீரர்க்ள பயன்படுத்திய பெரிய கைத்துப்பாக்கி வகை.
petrous
a. பாறையாலான, பாறை சார்ந்த, பாறைபோன்ற, (உள்.) பொட்டெலும்பில் மிகவுங் கடினமான
petticoat
n. மகளிர் உட்பாவாடை, உள்ளங்கி, பெண், மங்கை.