English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
punching-ball
n. குத்துப்பயிற்சிப்பந்து, குத்துச்சண்டைபழகுவதற்காகத் தொய்வாற்றலுடைய தளையால் கட்டித் தொங்கவிடப்படும் காற்றடைத்த பந்து.
punctate
a. (தாவ., மரு.) புள்ளிகள் கொண்ட.
punctilio
n. ஆசார நுணுக்கம், சடங்கு நுட்பம், நுண்ணயவினைமுறைக்கூறு.
punctilious
a. ஆசார நுணுக்கம் வாய்ந்த, விடாப்பிடி நுட்ப ஒழுங்குமுறை வாய்ந்த, ஆசார ஒழுங்குடைய, வழுவற்ற, செம்மையான.
punctual
a. காலந்தவறாத, காலங்கடவாத, குறித்தகாலத்திற்கு முந்திய, (வடி.) புள்ளி அல்லது முனை சார்ந்த.
punctuality
n. காலந்தவறாமை, காலத்திட்பம்.
punctuate
v. புள்ளகளிடு, நிறுத்தக்குறிகளிடு, பேச்சிடைய கிளர்ந்துரைத்துத் தடு, வற்புறுத்தல் கொடு.
punctuation
n. நிறுத்தக்குறியீடு, நிறுத்தக் குறியிடுதல் எபிரேய முதலிய மொழிகளில் உயிர்க்குறி ஒலிக்குறிப்புள்ளிகளிடுதல்.
punctum
n. கறை, மேற்பரப்பின் மாசு, வண்ணத்தடம், புள்ளி, கரடு, மேடிட்ட தடம், தழும்பு, பள்ளமான புள்ளி.
puncture
n. கீறல், கிழிசல், துளை, ஓட்டை, குத்து, சக்கரப் புறவட்டில் ஏற்படும் பிளவு, (வினை.) சக்கரப் புறவட்டில் துளை ஏற்படுத்து, கிழிசல் உண்டாக்கு, கீறுதலுறு.
pungency
n. உறைப்பு, காரம், எரிச்சல், நெடி, குத்தலான கேலி, வன்சொல்.
pungent
a. காரமான, உறைப்பான, மணவகையில் மூக்கைத் துளைக்கிற, கேலி வகையில் குத்தலான, கண்டன வகையில் கடுமையான, உணர்ச்சியைத் தூண்டுகிற, எரிச்சலுட்டுகிற, (இய., தாவ.) கூரியமுனையுடைய.
Punic
n. பண்டைய, கார்த்தேஜ் மக்களின் செமித்திய இன மொழி, (பெ.) கார்த்தேஜைச் சார்ந்த.
punice
n. மூட்டைப்பூச்சி.
punish
v. தண்டி, தண்டனை அளி, தண்டத்தொகைவிதி, அடி, ஒறு, ஓட்டப்பந்தயத்தில் எதிர்ப்பக்கத்தாரைக் கடுஞ்சோதனைக்கு உள்ளாக்கு, (பே-வ) குத்துச்சண்டையில் எதிரிக்குக் கடுமையான அடிகொடு, உணவுவகையில் பெரிய அளவு உட்கொண்டுவிடு, பந்தாட்டத்தில் எதிர்ப்பக்கப்ப்நதாட்ட வலுக்கேட்டை முழுதும் பயன்படுத்திக்கொள்.
punishment
n. தண்டனை, ஒறுப்பு, தண்டத்தொகை, தண்டவரி.
punitive
a. தண்டிக்கிற, தண்டனையாக விதிக்கப்படுகிற, தண்டனை இயல்புடைய.
punk
-1 n. விலைமகள், பரத்தை.
punka,punkah
விசிறி, பங்கா, இழுப்புவிசிறி.