English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pulverize
v. தூளாக்கு, பொடியாக்கு, இடி, அரை, நீரைத்திவலைகளாகச் சிதறு, இடித்து அழி, நொறுக்கு, தகர்வுறு, நொறுங்கு, தூளாகு.
pulverizer
n. தூளாக்குபவர், பொடிக்கும் இயந்திரம், சிதறு கருவி.
pulverulent
a. பொடியான, தூள் சார்ந்த, பொடி போர்த்த, பாறை வகையில் நொறுங்கிவிடக்கூடிய, தன்னிணைவாற்றல் குன்றிய.
pulvil
n. வாசனைத் தூள், பொடி.
pulvinate
a. (தாவ., பூச்.) புடைப்பான, அதைப்புள்ள, மேற்கவிவான, திண்டுபோன்ற, திண்டுபோல் மெத்தென்ற.
pulvinated
a. (க-க) போதிகை வகையில் குவிமுகத்துடன் புடைத்திருக்கிற.
pumice
n. மெருகு மாக்கல்வகை, படிகக் கல், சிட்டக்கல், (வினை.) மாக்கல்கொண்டு தேய், சிட்டக்கல்லால் துப்புரவு செய்.
pump
-1 n. நீர்வாங்கு குழாய், காற்றழுத்த ஆற்றல்மூலம் நீரை மேலெழச் செய்யும் விசைக்குழாய், நீர்ம மட்டம் உயர்த்துவதற்கான விசைக்குழாய்ப்பொறி, நீர்மம் இயக்கவதற்கான குழாய்ப்பொறி, வளியழுத்தம் கூட்டவோ குறைக்கவோ பயன்படுத்தப்படும் குழாய்ப்பொறி, இதயம், குருதி, விசையியக்கக் கருவி, பூச்சியினங்களிற் குருதியுறிஞ்சும் உறுப்பு, பிறிரிடமிருந்து தந்திரமாகச் செய்திகளைக் கவரும் முயற்சி,பிறரிடமிருந்து திறமையாகச் செய்திகளைக் கவர்பவர், (வினை.) நீர்வாங்கு குழாயை இயக்கு, நீர் முதலியவற்றை விசைக்குழாய் மூலம் அகற்று, விசைக்குழாய் மூலம் நீர்மட்டம் உயர்த்து, கப்பல்-கிணறு முதலியவற்றிலுள்ள நீரை விசைக்குழாய் மூலம் வற்றச்செய், வெளிப்படுத்து, வெளிக்கொணர், செய்தியைத் தந்திரமாக வெளிப்படுத்து, முழுதுங் களைப்படையச் செய், காற்று அழுத்தமானியில் உடனடியாகப் பாதரசத்தை ஏற்றியிறக்கு.
pump-room
n. கனிப்பொருள் நீருற்றுகளிலிருந்து மக்கள் குழாய்வழி நீரைக் குடிப்பதற்குரிய அறை.
pumpernickel
n. செர்மன் நாட்டுக் கூலவகை ரொட்டி.
pun
-1 n. சிலேடை, சித்திரப்பேச்ச, (வினை.) சிலேடையாகப் பேசு.
puna
n. தென் அமெரிக்காவின் வடபகுதியிலுள்ளஉயரமான பாழ்மேட்டுப்பகுதி, காற்றழுத்தக் குறைவு காரணமாக ஏற்படும் கடுமூச்சுக் கோளாறு.
punch
-1 n. தன்ரூசி, தோல்-உலோகம்-தாள் முதலியவற்றில் துளையிடுங் கருவி, தாழ்செறிபொறி, தாழ்ப்பாளைச் செறிப்பதற்கும் எடுத்தற்கும் பயன்படுங் கருவி, செறிவழுத்தப்பொறி, ஆணியைப் பரப்பின் கீழ்ச் செலுத்தும் அமைவு, வெட்டழுத்தப்பொறி, பொறிப்பாணி, வார்ப்புருவத் தாய்ப்படிவம் அழுத்தும்பொறி, முத்திரைப் பொறி, இலச்சினைப்பொறி, (வினை.) தாள்-தோல்-உலோக முதலியவற்றில் தமரூசியால் துளையிடு, துளையிடு, ஆணியை அடித்திறக்கு, இருப்பூர் திச்சீட்டில் அடையாள நறுக்கிடு, அழுத்துபொறி இயக்கிச் செறிவி, அழுத்துபொறி இயக்கி நெகிழ்வி, அழுத்துபொறி இயக்கி உருவாக்கு, மரையழுத்து, குமிழ்அழுத்து, பொறிப்பிட, அழுத்திப்பதிவு செய்.
punch-bowl
n. ஐங்கலவைப் பானகக் குவளை, குன்றுகளிற் காணப்படும் வட்டி வடிவ ஆழ்பள்ளம்.
punch-drunk
a. கடுமையான அடியால் திகைப்படைந்த.
puncheon
-1 n. துளைக்கருவி, அண்டைகட்டுக்கம்பு.
puncher
n. குத்துச்சண்டை செய்பவர், முட்டியால் தாக்குபவர், துளையிடுங் கருவி, தமரூசி.
Punchinello
n. இத்தாலிய பொம்மலாட்டத் தலைமை நடிகர், பொம்மலாட்டத் தலைமைப்பாத்திரம், குட்டையான பருத்த ஆள்.