English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pulmometer
n. நுரையீரல் ஆற்றல்மானி.
pulmonary
a. நுரையீரல் சார்ந்த, நுரையீரல்களிலுள்ள, நுரையீரல்களின் தொடர்பான, நுரையீரல்களையுடைய, நுரையீரல் போன்ற உறுப்புக்களையுடைய, நுரையீரல் நோயினால் பீடிக்கப்பட்ட, நுரையீரல்களில் வலிமையிழந்த.
pulmonate
n. நேரடியாக வளிமண்டலக் காற்றுயிர்க்குஞ் சிப்பி வகை, (பெ.) நுரையீரல்களை அல்லது நுரையீரல் போன்ற உறுப்புகளையுடைய.
pulmonic
n. ஈளை மருந்து, (பெ.) நுரையீரல்களுக்குரிய.
pulp
n. விதைபருப்பு, பழச்சதை, களி, கூழ், தாள்செய்வதற்குரிய கூழ், நீரியலான தசைக்குழம்பு, பல்அடிக்கூழ்ப்பொருள், தூளாக்கி நீருல்ன் கலக்கப்பட்ட கனி உலோகக்கலவை, (வினை.) களியாக்கு, கூழாகச்செய், காப்பிக்கொட்டையிலிருந்து சோறு நீக்கு, களியாகு.
pulper
n. பொருள்களைக் களியாக்குவதற்கான இயந்திரம்.
pulpit
n. திருக்கோயிற் சமய உரைமேடை, சமயப்பிரசாத தொழில், சமய உரையாற்றுங் குருமார், ஏட்டுப்பெயர் வகையில் சமய உரைந்திரட்டு, (பெ.) சமய உரைமேடை சார்ந்த.
pulpiteer
n. சமயப் பிரசாரகர், (வினை.) சமய உரையாற்று.
pulsate
v. துடி, அடித்துக்கொள், தாளகதியில் விரிந்து சுருங்கு, அதிர்வுறு, அலைபாய், உயிர்ப்புறு, வைரக்கற்களிலிருந்து மண்ணைப் பிரிப்பதற்காக இயந்திரத்தின் மூலமாக அதிர்ச்சியூட்டு.
pulsatile
a. துடிப்புச் சார்ந்த, நாடித்துடிப்பின் இயல்பு வாய்ந்த, இசைக்கருவி வகையில் தட்டுவது மூலமாக வாசிக்கப்படுகிற.
pulsatilla
n. செடிவகையின் ஊதாநிற மணிவடிவ மலர், மருந்தாகப் பயன்படும் ஊதாநிற மணிவடிவ மலரின் சாற.
pulsation
n. நாடித் துடிப்பு, உயிர்த்துடிப்பு, இதயத்துடிப்பு, அடிப்பு, துடிப்பு, ஒழுங்காக இயங்கும் துடிப்பு, அதிர்வு.
pulsator
n. குலுக்கியந்திரம், மண்ணிலிருந்து வைரத்தைப் பிரித்தெடுக்கக் குலுக்குகிற இயந்திரம்.
pulsatory
a. துடிக்கிற, அடித்துக்கொள்கிற, அதிர்கிற.
pulse
-1 n. நாடி, நாடித்துடிப்பு, குருதிக்குழாய் அதிர்வு, இதயத்துடிப்பு, வாழ்க்கை விறுவிறுப்பு, உணர்ச்சியார்வம், துடுப்பு முதலியவற்றின் சந்தமார்ந்த இயக்கம், (இசை.) தாளம், ஒளியின் தனியலை, ஓசையின் தனி அலை, (வினை.) துடி, அடித்துக்கொள், அதிர், அலைபாய், தாளகதியில் விரிந்துசுருங்கு, தாள கதியில் இயக்குவி.
pulses
n. pl. பயறு வகைகள்.
pulsimeter
n. நாடிமானி, நாடி ஆற்றல் அல்லது துடிப்பு வீழ்ம் அலகிட்டுக்காட்டுங் கருவி.
pulsometer
n. நீராவியைச் செறியவைப்பதற்கான வளிதீர்குழல்.
pultaceous
a. வீக்கமருந்துக் களிபோன்ற, கூழான.
pultan
n. காலாட்படை வகுப்பு.