English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
precis
n. சுருக்கம், பொழிப்பு, குறிப்புரை, (வினை.) சுருக்கு, பொழிப்பாக்கு.
precise
a. துல்லியமான, நன்கு வரையறுக்கப்பட்ட,சரிநுட்பம் வாய்ந்த, செவ்விய, இழையும் பிசகாத, விதிமுறை வழாத.
precise ly
adv. சரி நுட்பமாக, இழையும் வழுவாமல், முற்றிலும் அதே முறையிலேயே.
precisian
n. சமயத்துறையில் மயிரிழை வழுவாது வினைமுறை கடைப்பிடிப்பவர், விதிமுறை வழாதவர், கண்டிப்பாளர்.
preclude
v. விலக்கு, தள்ளு, தடைசெய், நடைமுறைக்கு ஒவ்வாததாக்கு.
preclusion
n. தவிர்ப்பு, முன்தடுத்தல்.
precocious
a. பிஞ்சில் முதிர்ந்த, சிறுமுதுக்குறைவான, பருவத்திற்கு முன்பாகவே பூக்கிற, பருவம் வருமுன் காய்க்கிற, இலை தளிர்ப்பதற்கு முன்பே பூக்கிற, செயல்வகையில் வயதுக்க மீறிய அறிவாற்றலைக் காட்டுகிற.
precocity
n. பருவமுன் பழுத்தல், பிஞ்சில் முதிர்வு.
precognition
n. முன்னறிவு, முன்னுணர்வு.
preconceive
v. முற்புனைவாகக் கொள், அறியுமுன்னரே கருத்துக்கொள், முன்கூட்டியுணர்.
preconception
n. அறியுமுன் கருத்து, முன்னுறு தப்பெண்ணம்.
preconize
v. சாற்று, அம்பலப்படுத்து, பலரறியப்பாராட்டுரை, பெயர் கூவி அழை, நியமனத்தைப் பலரறிய ஏற்றிசைவளி.
precursor
n. முன்னோடி, முன்வரு தூதன், முன்னறிவிப்பாளர், முற்போந்த அறிகுறி, முந்தையர், பணித்துறையில் ஒருவருக்கு முன்னிருந்தவர், இயேசுநாதருக்கு முன் வாழ்ந்து அவர் வருகைக்கு முன்னறிவிப்பாளராக அமைந்த தீக்கையாளர் யோவான்.
precursory
a. முன்குறிப்புரையான, பீடிகையான, வாயில் செய்கிற, புதுமுகமான, முன்னோடித் தூதனாக அமைந்த.
predacious
a. விலங்கு வகையில் பிற விலங்குகளை உண்ணுகிற, பிற விலங்குகளை உண்ணும் விலங்குகள் பற்றிய, சூறையாடுகிற, கொள்ளையடிக்கும் பழக்கமுடைய.
predate
v. முன் தேதியிடு, மெய்யான தேதிக்கு முன் தேதிகுறி.
predatory
a. கொள்ளைசார்ந்த, கொள்ளையடிக்கிற, சூறையாடும் பழக்கமுள்ள, விலங்குவகையில் பிற விலங்குகளைக் கொன்றுதின்னுகிற.
predecease
n. முற்சாவு, (வினை.) முன்மாள்வுறு.
predecessor
n. முற்பதவியாளர், பதவியில் முன்னிருந்தவர், முந்தியது, முன்னது, முற்போந்த ஒன்று, மூதாதை.