English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pre-ordain
v. முன்னதாக வகுத்தமை, கடவுள்வகையில் ஊழ்வழி முன்னறுதி செய்.
pre-prandial
a. உண்டிக்கு முந்திய.
pre-preference
n. முந்து முற்சார்பு.
Pre-Raphaelism
n. முற்படு கலையார்வக்கோட்பாடு, இத்தாலிய கலைஞர் ரபேல் காலத்திற்கு முற்பட்ட பழங்கலையார்வ ஈடுபாட்டுக் குழுவினரின் கலைக்கோட்பாடு.
Pre-Raphaelite
n. பழங்கலையார்வக் கோட்பாட்டுக் குழுவினர், இத்தாலிய கலைஞர் ரபேல் காலத்திற்கு முற்பட்ட கலைப்பண்பைப் பின்பற்றிய 1ஹீஆம் நுற்றாண்டின் பழங்கலையார்வக் குழுவினர்.
pre-scientific
a. இக்கால அறிவியல்முறை தோன்றுதற்கு முற்பட்ட.
pre-university course
n. பல்கலைக்கழகப் புகுமுகத் திட்டம்.
pre-war
a. போருக்கு முந்திய, (வினையடை.) போருக்கு முற்பட்ட காலத்தில்.
preach
n. அறவுரை, திருக்கோயில் மேடைப்பேச்ச, (பே-வ) வலிந்த நீதிபோதனை, (வினை.) சமயச் சொற்பொழிவாற்று, அறவுரை கூறு, வலியப் போய் நீதிபோதனை செய், சொற்பொழிவுப்ள் வாயிலாகச் சமயநுல்களைப் பலரறியக்கூறு, சொற்பொழிவுகள் வாயிலாகக் கோட்பாடுகள் முதலியவற்றைக் கேட்போர் மனத்திற் பதியவை.
preacher
n. சமய போதகர், சமயச் சொற்பொறிவாளர், சமயகுரு, ஆதரவாளர், மன்றாடி.
preachify
v. சலிக்கும்படி போதி.
preachment
n. வாய்வீச்சுச் சமயச் சொற்பொலிவு, சலிப்புப்பேச்சு.
preachy
a. (பே-வ.)சலிப்பு அறவுரயான.
preamble
n. முகப்புரை, பீடிகை, முற்கூற்று, பூர்வாங்க வாசகம், தொடக்கப்பகுதி, (வினை.) முகப்புரை அமை, தோற்றுவாய் செய்.
prebend
n. மானியப்படி, திருச்சபை உறுப்பினருக்கு உதவித்தொகையாக அளிக்கப்படும் மானிய வருவாய்ப்பகுதி, திருச்சபை உறுப்பினர் உதவித்தொகைக்கு மூலமுதலான மானியப்பகுதி, திருச்சபை உறுப்பினர் உதவித்தொகைக்கு மூலமுதலான வரிப்பகுதி, மானிய வருவாய்ப் பகுதியிலிருந்து உதவித்தொகை பெறும் திருச்சபைக் குழு உறுப்பினர்.
prebendary
n. மானிய வருவாய்ப் பகுதியிலிருந்து உதவித்தொகை பெறும் திருச்சபைக்குழு உறுப்பினர்.
prebendary-stall
n. கிறித்தவ திருக்கோயில் வருவாயில் ஊழிய மானியம் பெறுங் குருவின் தங்கிடம்.
precarious
a. பிறர் சார்பொட்டிய, நிலையுறுதியற்ற, நிலையற்ற, முடிவுக்குரியதையே ஆதார மெய்ம்மையாகக் கொள்கிற, தற்செயல் நிகழ்வான, ஐயத்துக்கிடன்ன, இடர் செறிந்த.
precatory
a. (இலக்.) வேண்டுகோட் பொருளுடைய.
precaution
n. முன்யோசனை, முன் எச்சரிக்கை நடவடிக்கை.