English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pre-eminence
n. முந்து தலைமை, படினம்.
pre-eminent
a. ஒப்புயர்வற்ற, தனிமேம்பாடுடைய, முந்து தலைமையுடைய.
pre-empt
v. பிறருக்கு வாய்ப்பளிக்கும் முன்னரே விலைக்குவாங்கு, பிறருக்கு முன் விலக்கு வாங்கும் உரிமை பெறும்படி பொதுநிலத்தைக் கையாட்சிக்குக் கொண்டுவா, முன்னதாகக் கைப்பற்றித் தனதாக்கு, சீட்டாட்டத்தில் மற்றவர்கள் கேட்க முடியாத அளவுக்குக் கேள்வி கேள்.
pre-emption
n. முற்படு விலைக்கோட் பேறு, மற்றவர்கள்வாங்குவதற்கான வாய்ப்பளிக்கப்படுவதற்கு முன் விலைக்கு வாங்குதல், முற்படு விலைக்கோள் உரிமை, மற்றவர்கள் வாய்ப்பளிக்கப்படுவதன்முன் விலைக்கு வாங்குவதற்கான உரிமை, முற்பட விலையிற் கொள்ளப்பட்ட நிலம், சட்டமீறிய நொதுமலர் சொத்தை நிலையாக வரையறுக்கப்பட்ட விலைக்குக் கைப்பற்றும் போர்த்திறத்தார் உரிமை.
pre-emptive
a. முற்படு விலைக்கோள் பெறுகிற, சீட்டாட்டத்தில் பிறர் கேள்வி கேட்கமுடியாத அளவிற் கேட்கிற.
pre-engage
v. முன்னதாக ஒப்பந்தஞ் செய்துகொள், முற்பட ஈடுபாடு கொள்வி.
pre-establish
v. முன்னதாக நிறுவு, முற்பட நிலைப்படுத்து.
pre-exilian, pre-exilic
a. யூதர்கள் நாடு கடத்தக்கொண்டு செல்லப்பட்டதற்கு (கி.மு.5க்ஷ்6-53க்ஷ்) முந்திய.
pre-exist
v. முன்னொரு பிறிவியில் உளதாயிரு, ஒருவருக்கு முன்வாழ்ந்திரு.
pre-existence
n. பிறப்பிற்கு முற்பட உளதாம் நிலை, உடலுருவாகுவதன் முற்பட்ட வாழ்வு.
pre-frontal
a. (உள்.) நெற்றி எலும்புக்கு முன்னாலுள்ள, மூளையின் முற்பிரிவுக்கு முற்பகுதியிலுள்ள.
pre-human
a. மனிதன் உண்டான காலத்திற்கு முற்பட்ட.
pre-ignition
n. முன்னிடுவெடிப்பு, உள்வெப்பாலை எரிபொருளின் உரிய நேரத்துக்கு முற்பட்ட வெடிப்பு.
pre-maxillary
a. (உள்.) மேல்தாடைக்கு முன்னுள்ள.
pre-millenarian
n. திருமுன்னாயிரத்தார், திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கையுள்ளவர், (பெ.) திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கைக்குரிய.
pre-millennial
a. திருவாயிரத்திற்கு முற்பட்ட.
pre-millennialism
n. திருமுன்னாயிரக்கொள்கை, திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கை.
pre-natal
a. பேறுகாலத்திற்கு முந்திய.
pre-ocular
a. (உள்.) கண்ணிற்கு முன்னாலுள்ள.