English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pram
-1 n. சரக்கேற்றும் தட்டை அடிப்பாகமுடைய படகுவகை, பீரங்கிகள் ஏற்றப்பட்ட தட்டைப்படகு வகை, ஸ்காண்டினேவிய கப்பலின் படகு.
prance
n. பின்கால்மீது துள்ளிக்குதிப்பு, தாவு நடை, எழுச்சிமிக்க நடை, துள்ளலியக்கம், (வினை.) குதிரையைப் பின்னங்கால்களை ஊன்றித் துள்ளச்செய், துள்ளி நட, துள்ளி நடக்குமங் குதிரை மீதிவர்ந்து செல், இறுமாப்பு நடைபோடு, பகட்டுநடை நட, வீறாப்புக்காட்டு.
prandial
a. சாப்பாட்டிற்குரிய.
prank
-1 n. குறும்பு விளையாட்டு, சிறு குறும்பு, நையாண்டிக்குறும்பு, இயந்திரங்கள் வகையில் ஒழுங்கற்ற இயக்கம்.
prase
n. பச்சைப் படிகக்கல் வகை.
pratie, praty
ஆங்கிலோ-ஜரிஷ் வழக்கில் உளக்கிழங்கு.
pratincole
n. தூக்கணங் குருவியின் தோற்றமும் பழக்கவழக்கங்களும் உடைய பறவை வகை.
pratique
n. தொற்று நீக்கச்சீட்டு, தொற்றுநோய் ஒதுக்கீட்டுக்குப்பின் கப்பலுக்கு வழங்கப்படும் துறைமுப்த் தொடர்புரிமைச்சீட்டு.
prattle
n. குதலை, (வினை.) குதலை பேசு.
prattler
n. குதலைப் பேச்சினர், குழந்தை.
pravity
n. உணவு வகையில் கெட்டுப்போன நிலை, கொடுமை.
prawn
n. இறால் மீன், (வினை.) இறால்மீன் பிடி.
praxis
n. எடுத்துக்காட்டு, வழக்கம், (இலக்.) பயிற்சிக்கான எடுத்துக்காட்டு வாய்பாடுகள்.
pray
v. வழிபடு, வேண்டுதல் செய், விண்ணப்பித்துக்கொள், வேண்டு, இசைவுகோரு, மன்றாடு, குறையிர, கெஞ்சிக்கேள்.
prayer
-1 n. இறைவணக்கம், வழிபாட்டுமுறை, இறையதருள் வேண்டுதல், வழிபாட்டு வாசகம், இறைவணக்க வாய்ப்பாடு, வேண்டுகோள், முறையீடு, விண்ணப்பம், வேண்டப்படும் பொருள்.
prayer-book
n. வழிபாட்டு ஏடு.
prayer-meeting
n. தொழுகைக் கூட்டம்.
prayer-wheel
n. தருமசக்கரம், திபேத்திய பௌத்தர் வழிபாட்டு வாசகம் பொறித்த சுழல்நீள் உருளை.
prayerful
a. இறைவணக்கஞ் செய்யும் பாங்குள்ள கடவுள் வழிபாட்டொழுக்கமுடைய.
pre-acquaint
v. முன்னதாகத் தெரிவி.