English Word (ஆங்கில வார்த்தை)
									Tamil Word (தமிழ் வார்த்தை)
									
								 
								
								post-mortem
								-1 n. சாவிற்குப் பின்னாய்வு. (பே-வ) சீட்டாட்ட வகையில் ஆட்டம் பற்றிய பின்பேச்சு, (பெ.) சாக்காட்டின் பின் செய்யப்படுவதான.
								
							 
								post-natal
								a. பிறப்பிற்குப்பின் நிகழ்கிற.
								
							 
								post-nuptial
								a. திருமணத்திற்குப் பிற்பட்ட.
								
							 
								post-obit
								n. மரபுச் சொத்துக்குரிய முன்னவர் இறந்ததும் கொடுத்த வாக்குத்தொகை உரிமை தருகிற கடன் பத்திரம், (பெ.) இறந்த பிறகு நடப்புக்கு வருகிற.
								
							 
								post-office order
								n. பணஞ் செலுத்துவதற்கான அஞ்சல் நிலையக் காசோலை.
								
							 
								post-oral
								a. வாய்க்குப்பின் அமைந்துள்ள.
								
							 
								post-paid
								a. அஞ்சல் தொகை செலுத்தப்பட்ட.
								
							 
								post-pliocene
								a. மண்ணியல் கடையூழியாகிய புத்துயிரூழியில்  மூன்றாந்தரக் கிளை ஊழிகளும் நாள்காந்தரப் பனி ஊழிப்பருவங்களும் கடந்த காலத்திற்குரிய.
								
							 
								post-tertiary
								a. மண்ணுல் புத்துயிரூழியின் முதல் மிகப்பெருங்கூறு கழந்த.
								
							 
								post-town
								n. தனி அஞ்சல் நிலையமுடைய நகரம்.
								
							 
								post(3)
								n. படைத்துறைக் களம், படைவீரர் நிறுத்தப்பட்டுள்ள இடம், பாளையம், வென்ற நாட்டில் படைப்பிரிவு தங்க வைக்கப்பட்டுள்ள இடம், படைவீரர் காவலிடம், பணித்துறைக் கடமைக்குரிய இடம், அரண்காப்பிடம், கோட்டைத் துறை, ஒதுக்குப்புறமான நாட்டின் வாணிகத்துறைக் களம், பணியிடம், பணிநிலை, இருபதுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளையுடைய படைக்கப்பல் முதல்வர் ஆணைப்பணி, (படை.) வேளை எக்காளமுழக்கம், (வினை.) படைவீரரைக் காவலாக நிறுத்து, படைப்பிரிவினை நிறுவு, படைக்கப்பல் முதல்வராக அமர்த்து, பணியில் அமர்வுசெய்.
								
							 
								postage
								n. அஞ்சற் கட்டணம்.
								
							 
								postal
								a. அஞ்சல் பறறிய, அஞ்சல் சார்ந்த.
								
							 
								postcard
								n. அஞ்சல் அட்டை.
								
							 
								poste restante
								n. அஞ்சற் காப்பகம், கேட்கும் வரையில் கடிதங்களை வைத்திருக்கும் அஞ்சல் நிலைய அரங்கம்.
								
							 
								posteen
								n. செம்மறியாட்டின் கம்பளி நீக்கப்பெறாத ஆப்கானிஸ்தான் நாட்டிற்குரிய பெரிய முழு மேலங்கி.
								
							 
								postentry
								n. குதிரைப் பந்தயத்திற் பிற்சேர்வு, கடைக்கணக்குத் துறையிற் பிற்சேர்ப்பு, பிந்துகுறிப்பு.
								
							 
								poster
								n. விளம்பரத்தட்டி, விளம்பரங்களை ஒட்டுபவர், காற்பந்தாட்ட வகையில் இலக்குக்கம்பத்துக்கு மேலே சென்று இலக்கினை எய்தும்படியான பந்துதைப்பு.
								
							 
								posterior
								n. உடலின் பிற்பகுதி, பிட்டங்கள், (பெ.) பின்னான, தொடர்ச்சியில் பின்வருகிற, பின்பக்கத்திய.
								
							 
								posterity
								n. கால்வழி, சந்ததி, பின்னோர், வழித்தோன்றல்கள், வருமரபு, பின்வருந் தலைமுறைகள்.