English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pomfret
n. உணவு மீன்வகை, இனிய அப்ப வகை.
pomiculture
n. பழவளர்ப்புத்துறை, பழப்பண்ணைத் தொழில்.
pomiferous
a. கனி தருகிற.
pommel
n. கலணைக்கரடு, சேணத்தின் மேல்நோக்கிய முனைப்பான முன்பக்கம், கத்தியின் கைப்பிடிக் குமிழ்,(வினை.) மொத்து, குமிழ்ப்புறத்தால் அடி, முட்டிகளால் குத்து.
pomology
n. பழவளர்ப்பு நுல்.
Pomona
n. பண்டை ரோமரின் பழங்கதை மரபில் பழங்களின் தேவதை.
pomp
n. பகட்டாரவாரம், ஆடம்பரம், ஆகுலம்.
Pompadour
n. பதினைந்தாவது லுயி மன்னரின் அரசி, (பெ.) கூந்தல் ஒப்பனைப்பாணி வகையில் பாம்படோர் அரசிக்குரிய, கச்சு வெட்டுப்பாணியில் பாம்படோர் அரசிக்குரிய.
pompano
n. வட அமெரிக்க மேற்கிந்திய தீவுகள் சார்ந்த உணவு மீன் வகை.
pompier, pompier ladder
n. தீயணைப்போர் ஏணி.
pompon
n. கூந்தல் திருகணி, பெண்கள்-சிறுவர்கள் ஆகியோரின் தொப்பிகளிலும் மிதியடிகளிலும் உள்ள இழைப்பட்டை-மலர்கள் முதலியன கொண்ட ஒப்பனைக் குஞ்சம், போர்வீரர் தொப்பியின் முன்பக்கத்திலுள்ள உருளைக்குஞ்சம்.
pomposity
n. பகட்டிறுமாப்பு, செயற்கைப் பகட்டாரவாரம், ஆரவாரச் செயல், ஆகல நீர்மை.
pompous
a. பகட்டாரவாரமான, பகட்டழகுடைய, தோற்றச் சிறப்பு வாய்ந்த, தற்பெருமையுள்ள, மொழிவகையில் சொற்பகட்டான, ஆரவார ஒலியுடைய, வெற்றுரையான.
ponceau
n. ஒளிர் சிவப்பு நிறம்.
poncho
n. தென் அமெரிக்க மேலாடை, தலைநுழைவதற்கான நடுவிடம் விட்ட நீண்ட ஆடைச்சதுக்கம், தலைநுழைவிடம் விட்ட மிதிவண்டிக்காரரின் நீர் ஊறாத நீண்ட மேலாடைச்சதுக்கம்.
pond
n. குட்டை, குளம், சிறு செய்குளம், (வினை.) அணைகட்டி நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்து, நீரோட்டத்திற்கு அணைபோடு, நீர்நிலை வகையில் குளமாக அமைவுறு, குட்டையாகத் தேங்கு.
pond-life
n. குட்டை வாழுயிரி, குளங்குட்டைகளில் வாழும் தண்டிலி உயிரினத் தொகுதி.
pondage
n. குளத்து நீரின் கொள்ளளவு, நீர்த்தேக்கம்.
ponder
v. நீளநினை, தீர எண்ணிப்பார்.
ponderable
a. கணிசன்ன எடையுடைய.