English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pooh
int. சீஸ், பொறுமையின்மைக் குறிப்பு, வெறுப்பொலிக் குறிப்பு.
Pooh-Bah
n. பல பதவியாளர்.
pooka
n. கூளி, சிறுதெய்வம்.
pookoo
n. தென் ஆப்பிரிக்காவைச் சார்ந்த சிவப்பு மான் வகை.
pool
-1 n. இயற்கையாயமைந்த சிறுகுளம், அமைந்த நீர்நிலை, கட்டி நிற்கும் நீர்மத்தேக்கம், மடு, ஆற்றின் அமைந்த நீர்ப்பகுதி, (வினை.) கல்வெட்டியெடுக்கையில் ஆப்புச் செருகுவதற்காகத் துளை செய், நிலக்கரி வகையில் கீழறு, சுரங்கமறு.
poon-oil
n. புன்னை எண்ணெய்.
poonah brush
n. பூனா ஓவியத்தூரிகை, கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப மெல்லிய தாளில் வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் தூரிகை.
poonah painting
n. பூனா ஓவியப்பாணி.
poonah paper
n. பூனா ஓவியத்தாள், கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் மெல்லிய தாள்.
poop
-1 n. கப்பலின் பிற்பகுதி, கப்பலின் பின்கோடி மேடைத்தளம், (வினை.) அலை வகையில் கப்பலின் பின்பகுதியின் மேல்மோது, கப்பல்வகையில் பிற்பகுதியின் மேல் அலைமோதப் பெறு.
pooped
a. கப்பல் வகையில் பின்கோடி மேடைத்தளமுடைய.
poor
a. வறிய, ஏழ்மையான, வளமற்ற, குறைபாடுடைய, மண் வகையில் விளையாத, குறைவாயுள்ள, போதாத, எதிர்பார்த்ததைவிடக் குறைவாயிருக்கிற, இழிவான, அற்பமாமன, எழுச்சியற்ற, ஊக்கங்குறைந்த, வெறுக்கத்தக்க, தாழமையுள்ள, பொருட்படுத்த வேண்டியிராத, இரங்கத்தக்க, நற்பேறற்ற, நலக்கேடான.
poor-box
n. தரும உண்டி, ஏழையர் உதவிநிதிப்பெட்டி.
poor-house
n. ஆதுலர் சாலை, ஏழையர் விடுதி.
poor-law
n. ஏழையர் உதவிமுறைச்சட்டம், இரவலர் சட்டம்.
poor-rate
n. அற வரி, ஏழைகளின் உதவிக்காக விதிக்கப்படும் வரி.
poor-spirited
a. ஊக்கமற்ற, கோழையான, உரமற்ற, எதற்கும் அஞ்சுகிற.