English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Polish works
வழைப்பேற்றப் பணிகள், மெருகூட்டும் பணி, பளபளப்புப் பணிகள்
politarch
n. (வர.) பண்டைய ரோமரிடையே கீழ்த்திசை நகர ஆளுநர்.
politcize
v. அரசியல் வாதியாக நடி, அரசியலில் ஈடுபடு, அரசியலைப் பற்றிச் பேசு, அரசியற் பண்பேற்று, அரசியல் சார்ந்த தாக்கு.
politic
n. அறிவுக் கூர்மையுள்ளவர், நுட்ப மதியினர், ஊகி, சூழ்ச்சித் திறமுடையவர், (பெ.) அறிவுக்கூர்மையுடைய, நுட்ப மதியுடைய, ஊகமுள்ள, முன்மதி வாய்ந்த, சூழ்ச்சித் திறமுடைய, செயல்வகைத் திறமுடைய, செயல் நாயமுடைய, சூழலுக்கு இயைந்த செயல்திறம் வாய்ந்த.
political
n. அரசியல் மேலாண்மைப் பேராள், (பெ.) அரசுக்குரிய, நாட்டாட்சிக்குரிய, பொது ஆட்சித்துறைக்குரிய, அரசியல் சார்ந்த, அமைப்பொழுங்குடைய அரசியல் நெறிமுறை சார்பான, ஆட்சிமுறையில் ஈடுபட்ட, அரசியல் கட்சி சார்ந்த, அரசியல் கட்சியில் ஈடுபட்ட.
politician
n. அரசியல் வாதி, அரசியல் அறிஞர், அரசியல் வல்லுநர், அரசியலைத் தொழிலாகக் கொண்டவர், அரசியல் கட்சியிலீடுபட்டவர், அரசியலைப் பொழுதுபோக்காகக் கொண்டவர், அரசியல் சூழ்ச்சிமுறை தெரிந்தவர், சூழ்ச்சிக் காரர்.
politico-religious
a. சமயச் சார்புடைய அரசியல் சார்ந்த.
politics
n. pl. ஆட்சியியல், அரசியல்துறை ஆய்வியல், அரசியற் கலை, ஆட்சிமுறை, அரசியற் கோட்பாடுகள்.
polity
n. ஆட்சி அமைதிநிலை, ஆட்சி அமைப்பொழுங்கு, ஆட்சி அமைப்புமுறை, அமைப்பொழுங்குடைய அரசியற் சமுதாயம், அரசு, ஆட்சிக்குரிய இனக்குழு.
polk
n. பொகீமியா நாட்டின் கிளர்ச்சிமிக்க நடனவகை.
poll
-1 n. தலை, மனிதத்தலை, முடிவளருந் தலைப்பகுதி, மீன் வகையின் தலை-தோள் பகுதி, சுத்தியல் தலைப்பின் பருத்த பகுதி, ஆள், தனியாள், தேர்தல் வாக்களர் பட்டியல், தேர்தல் வாக்களிப்பு, தேர்தல் வாக்கெண்ணிக்கை, (வினை.) முடிகத்தரி, திரள் வளர்ச்சிக்காகத் தாவரங்களின் உச்சிப்பகுதியைவெட்டு, கால்நடைகளின் கொம்புகளை அப்ற்று, வாக்கெடுப்பு நடத்து, வாக்கெடுப்புப் பெறு, வேட்பாளர் வகையில் வாக்குகளைப் பெறு, வாக்குச்சீட்டை இடு, வாக்கினைக்கொடு.
poll-tax
n. தலைவரி, ஆள்வரி.
pollam
n. பாளையம், பாளையக்காரரின் பண்ணை.
pollan
n. அயர்லாந்து நாட்டு நன்னீர் மீன்வகை.
pollard
n. மோழை விலங்கு, கொம்பிழந்த விலங்கு, கொம்பற்ற ஆடுமாடு வகை, நுனி தறித்துத் திரள் தலையுடையதாக ஆக்கப்பட்ட தாவரம், தவிடு, குறுநொய்த் தவிடு, மாவடங்கிய குறுந்தவிடு, (வினை.) மரவகையில் இளங்கிளைகள் நெருக்கமாகவும் வட்டமாகவும் கிளைப்பதற்காக உச்சியைத் தறி
pollen
n. பூந்தாது, மகரந்தம், கருவுயிர்க்கச் செய்யும் தாவர ஆண்பாற்கூறு, (வினை.) பூந்தாது இட்டுச்செல், பூந்தாதினாற் கவியவை.
pollicittion
n. (சட்.) முறைப்படி ஏற்றுக்கொள்ளப்படாத வாக்குறுதி, ஒதுக்கிவிடத்தக்க வாக்குறுதி.
pollinate
v. பூந்தாது தூவு, பூந்துகள் மேலிடு.
polloi
n. pl. பஷ்ர், பெரும்பாலோர்.