English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
polyatomic
a. பிற அணுக்களுடன் எளிதில் இடமாறவல்ல பலநீரக அணுக்க கொண்ட.
polyautography
n. கல்லச்சுமுறை.
polybasic
a. (வேதி.) இரண்டுக்கு மேற்பட்ட அடிமங்களை அல்லது ஓர் அடிமத்தில் இரண்டிற்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்ட.
polycarpellary, polycarpous
a. பல கருவக உயிர்மங்களைக் கொண்ட.
polychaetan, polychaetous
a. பூச்சி வகையில் காற்குறடுகளில் மிகப்பல முட்கூறுகளைக் கொண்ட.
polychrome
n. பல்வண்ணக்கலைவேலை, பன்னிற உருவச்சிலை வேலைப்பாடு, பல்வகை வண்ணம் பூசுதல், (பெ.) பல்வண்ணங்களைக் கொண்டு பூச்சுவேலை செய்யப்பட்ட, பல்வண்ண ஒப்பனை செய்யப்பட்ட, பல்வண்ணங்களில் அச்சடிக்கப்ட்ட.
polyclinic
n. தனியார் பலவகை மருத்துவ மனை, பல வகைப் பயிற்சி மருத்துவமனை.
polydactyl
n. மிகை விரல் உயிர், கால்-கைகளில் இயல்பான எண்ணிக்கைக்கு மேற்பட்ட விரல்களைக் கொண்ட விலங்கு, (பெ.) இயல்பான எண்ணிக்கைக்கு மேற்பட்ட கால்-கை விரல்களையுடைய.
polygamic
a. பன்மனைவிகளையுடைய.
polygamist
n. பன்மனைவியருடையவர், பன்மனைவியரை மணக்கும் பழக்கம் உடையவர்.
polygamous
a. பன்மனைவியரையுடைய, ஒரே சமயத்தில் பல மனைவியரைக் கொள்ளும் பழக்கமுடைய, பல கணவர்களையுடைய, (வில.) ஒரு பருவத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட இணைவுத் தோழமையுடைய, (தாவ.) சில மலர்களில் ஆண் உறுப்புக்களும் சிலவற்றில் பெண் உறுப்புக்களும் சிலவற்றில் இருபால் உறுப்புக்களும் கொண்ட.
polygamy
n. பன்மனைமணம், பன்மனை மணமுறை.
polygastric
a. பல இரைப்பைகள் கொண்ட.
polygenesis
n. பல்வேறு மூலவினத் தோற்றம், பல்வேறு கருமுளையிலிருந்து உண்டான உயிர்த்தோற்றம்.
polygenetic, polygenic
நீரகம் முதலியவற்றோடு இணைந்து ஒன்றிற்கு மேற்பட்ட சேர்மங்கள் ஆக்கவல்ல.
polygenism
n. பன்மூல மன்மரபியல் கோட்பாடு, பலதனிவேறு இணைதுணைகளான மூதாதையர்களிடமிருந்து மனிதவினம் தோன்றிற்று என்னுங் கொள்கை.
polygenist
n. பன்மூல மன்மரபியல் கோட்பாட்டாளர்.
polygeny
n. பன்மூல மன்மரபு, மனிதவின வகையில் பல தனிவேறான இணைதுணையான மூதாதையர்களிடமிருந்து தோன்றுதல்.
polyglot
n. பன்மொழிகளில் எழுதப்பட்ட நுல், பன்மொழியாளர், (பெ.) பன்மொழிகளான.
polygon
n. பல்கோணக் கட்டம், நான்கிற்கு மேற்பட்ட பல பக்கங்களையுடைய வரைப்படிவம்.