English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
poison-tree, poison-wood
n. நச்சுத் தன்மையுடைய மஜ்ம்.
poisonous
a. நச்சுத்தன்மையான.
poissarade
n. சந்தைக் கலகக்காரி, பரதவமகள்.
poke
-1 n. கோணிப்பை, பை, சாக்குப்பை.
poke-bonnet
n. அருள் மீட்புப்படை மகளிர் தொப்பி போன்ற அமைப்புள்ள தொப்பி, உந்து விளிம்புள்ள மகளிர் தொப்பி, திருவருட்படை என்னும கிறித்தவ சமயக்குழுவின் மாதர் அணியும் தொப்பி.
poker
-1 n. தீக்கோல், நெருப்பைக் கிளறி விடுதற்கான கம்பி, ஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரின் முன்செல்லுங் கட்டியர், வெண்ணிற மரத்திற்சூடிட்டுச் சித்திரப் பூவேலைகள் செய்வதற்கான கருவி, (வினை.) வெண்ணிற மரத்திற் சூடிடுகருவிகொண்டு சித்திரப் பூவேலை செய், வெண்மரத்தில் கருவியாற் சூடிடுவதன் மூலம் அணிசெய்.
poker-face
n. சீட்டாட்டக்காரரது குறிப்பறிய மாட்டாத முகம்.
poker-work
n. வெண்ணிற மரத்திற் சூடுபடுத்தப்பட்ட கருவிகளாற் செய்யப்படுஞ் சித்திரப் பூவேலை.
poky
a. அறை வகையில் இறுக்க இடுக்கமான, மிக நெருக்கமான, கீழ்த்தரமான, தொழில் வகையில் சிறுதிற, தாழ்ந்த.
polacca, polacre
மூன்று பாய்களுள்ள நடுநிலக்கடல் வாணிகக்கப்பல்.
polar
a. நிலமுனைக் கோடிக்குரிய, துருவஞ் சார்ந்த, நிலவுலக முனைக் கோடிக்கருகேயுள்ள, காந்தமுனைக் கோடிகளுள்ள, காந்தமுனைப்புள்ள, காந்தத்தன்மையுள்ள, நேர் எதிர்மின் ஆற்றல்களையுடைய, அணுத்திரள் வகையில் குறிப்பிட்ட திசையில் செவ்வொழுங்காக அமைவுற்ற, (வடி.) தளமூலப்புள்ளி சார்ந்த, நிலமுனைக் கோடிகளைப் போன்ற இயல்புடைய, நேர் எதிரெதிர் பண்புகளையுடைய.
polarimeter
n. வக்கரிப்பு மானி, ஒளிக்கதிர் வக்கரிப்புக் கோட்டமானி.
polariscope
n. வக்கரிப்புக்காட்டி, ஒளிக்கதிர் வக்கரிப்பியல்பு காட்டுங் கருவி.
polarity
n. துருவமுனைப்பு, இருகோடிகளும் நிலவுலக முனைக்கோடிகளை நோக்கி முனைத்து நிற்கும் காந்தக்கல்-காந்தஊசி முதலியவற்றின் இயல்பு, மின்னுட்டு முனைக்கோடி இயல்பு, இருகோடி எதிரெதிர்நிலை, காந்த ஈர்ப்பு.
polarize
v. ஒளிக்கதிர் வக்கரிக்கச்செய், ஒளிக்கதிர் அலைகள் எதிர் பக்கங்களில் ஒத்தும் செங்கோண வாட்டில் வேறுபட்டும் திரியும்படி செய், காந்த முனைவாக்கமூட்டு, மின் முனைப்பாக்க மூட்டு, போக்கின் திசை ஒருமுகப்படுத்து, சொல் முதலியவற்றின் வகையில் தன்முனைப்புடன் வழங்கு, சிறப்புப் பொருள்பட வழங்கு.
polatouche
n. பறக்கும் அணில்வகை.
poldaemonism
n. இயற்கைக்கு மேற்பட்ட பல ஆற்றல்களில் நம்பிக்கை.
polder
n. நெதர்லாந்தில் கடலிலிருந்தோ ஆற்றிலிருந்தோ மீட்கப்பட்ட தாழ்நிலப்பகுதி.
pole
-1 n. கழி, கம்பு, உலோகக்கம்பி, கூடாரக்கால், நிலைக்கம்பம், தந்தி முதலியவற்றிற்கான கம்பம், நுகத்தடி, கோல், 11முழு நீள அளவு, (வினை.) கழிகள் இடு, கம்புகள் பொருத்து, கழிகொண்டு செயலாற்று, கழியால் தள்ளு.
pole-ax, pole-axe
கண்ட கோடரி, மழுப்படை, முற்காலப் படைக்கப்பற் கோடரி, சூர்க்கோடரி, ஈட்டியும் கோடரியும் இணைந்த படைக்கலம், இறைச்சிக்கடைக்காரனின் வெட்டுக்கத்தி.