English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
outgrowth
n. கிளைப்பு, புற வளர்ச்சி, இயல்பான விளைவு.
outhouse
n. புறவீடு, புறக்கட்டுச் சிற்றில்.
outing
n. இன்பப் பயணம், வீட்டைவிட்டு வெளிச்சென்று கழிக்கப்படும் விடுமுறைப் பருவம்.
outlandish
a. அயல்நாட்டுத் தோற்றமுடைய, வெளிநாட்டு உச்சரிப்புள்ள, புதுமை வாய்ந்த, இயல்முரணிய, அருவருப்பான, வடிவமைதியற்ற.
outlast
v. குறிப்பிட்ட கால எல்லைக்கப்பாலும் நீடித்திரு, தாண்டி நெடுங்காலம் நிடித்திரு,
outlaw
n. சட்டத்தின் காப்பிழந்தவர், நாடு கடத்தப்பட்டவர், (வினை) தடைசெய், விலக்காணையிடு, சட்டக்காப்பின்மை அறிவி.
outlawry
n. சட்டக்காப்பின்மைக்கு ஆளாக்குதல், சட்டக் காப்பிழந்தவர் நிலை.
outlay
-1 n. செலவிட்ட தொகை, செலவுகள், முதலீடு.
outlet
n. வெளிச்செல்லும் வழி, வழிந்தோடும் வழி, வடிகால், புறமதகு.
outlier
n. திறந்தவெளியில் படுத்திருப்பவர், விலகித் தனியாகத் தங்கியிருப்பவர், வெளியார், பிரிந்து புறத்தே கிடக்கும் பொருள், (மண்) பழைய பாறைகளால் சூழப்பட்ட தனியான பாறைத்துணுக்கு.
outline
n. உருவரை, எல்லைக்கோடு, திட்டவரை, குத்தாயக் குறிப்பு, உருவரைக் குறிப்பு, மட்டநிலைக்கோடு, உரமாதிரி, திருந்தா உரு, சுருக்க வாய்மொழி விவரம், சுருக்கம், (வினை) அச்சுக்கட்டு, எல்லைக்கோடு வரை, உருவரையிடு, முக்கியக் கோடுகளைமட்டும் காட்டி உருவெழுது, திட்டடிக் குறிப்பிடு, முக்கியக்கூறுகளை மட்டும் விவரித்துக்கூறு, பட வகையில் முக்கிய செய்கையில் எல்லைகுறி.
outlines
n. pl. முக்கியக்கூறுகள், பொதுக்கோட்பாடுகள்.
outlive
v. கடந்து வாழ்ந்திரு, எஞ்சியிரு, குறிப்பிட்ட காலப்பகுதி முடிய வாழ்ந்திரு, தன் எல்லைதாண்டி வாழ்ந்திரு, மறந்துவிடப்படும் அளவுக்கு வாழ்ந்திரு.
outlood
n. விழிப்புடைய காவல், இருந்து காவல்புரிவதற்கான இடம், பரந்த காட்சி, எதிர்கால வாய்ப்பு வளம், உளங்கொள் பாங்கு, மனநிலைச் சார்பு.
outlying
a. மைய இடத்திலிருந்து மிகுதொலை விலகியிருக்கிற, தொலை ஒதுக்கமான.
outmaneoeuvre
v. சூழ்ச்சித்திற மேம்பாட்டால் வெல், திட்ட மேம்பாட்டினால் தோல்வியுறுவி.
outmarch
v. விஞ்சி முன்னேறு, முன்னேறுவதனால் பின்தங்கச் செய்.
outmatch,
மேம்படு, போட்டினில் விஞ்சு.
outmeasure
v. அளவுமிக்கதாயிரு, அளவில் விஞ்சியிரு.
outmoded
a. நாண்மரபுக்கு மாறான, பழமைப்பட்ட.