English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
oolong
n. பதப்படுத்தப்பட்ட கருநிறச் சீனத் தேயிலை வகை.
oom
n. தென் ஆப்பிரிக்க வழக்கில் மாமன்.
ooze
n. ஆற்று வண்டல், நீராளமான அடிச்சேறு, கசிவு, மென்கசிவொழுக்கு பட்டை நீர், தோல் பதனிடப் பயன்படும் சீமை ஆல் மரப்பட்டை ஊறல் நீர், (வினை) துளைகள் வழியாக ஈரங் கசிவுறு, கசிந்து வெளிப்படு, வெளிவிடு, கசியவிடு, செய்திடு புறம்போகவிடு. ஊக்கம் கரைய விடு.
ooze-calf
n. சாயம் தோய்ந்து ஊறிய கன்றின் தோல்.
op,simath
முததுமையிற் கற்றுக்கொள்பவர்,*,
opacity
n. ஒளியை ஊடுருவிச் செல்லவிடாத தன்மை, ஒளியை எதிரிட்டுக் காட்டாத இயல்பு, மழுங்கல்தளம், பொருள்புரிய நிலை, மழுப்பம்.
opah
n. இறைமீன், நிலாமீன், வட அட்லாண்டிக் கடலில் வாழும் ஒருமதிப்புடைய ஒளிவண்ண மீன்வகை.
opal
n. பலநிறம் நிழலாடும் மணிக்கல் வகை, நிறம் மாறும் மணிவகை.
opalescence
n. வானவில் வண்ண மாறுபாட்டுடன் கூடிய பால் நுரை நிறம்.
opaline
n. அரைகுறையாகத் தளிவில்லாமல் ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும் வெண்ணிறக் கண்ணாடி, (பெயரடை) பல நிறம் நிழலாடும் மணி வகைபோன்ற, மாறிக்கொண்டிருக்கும் நிறங்களைக் காட்டுகிற, வானவில்போல் பல நிறங்ளுடன் விளங்குகிற.
opaque,
a. ஒளியை ஊடுருவிச் செல்லவிடாத, ஒளியை எதிரிட்டுக் காட்டாத, ஒளிவிடாத, கண்ணுக்குப் புலப்படாத, தௌிவற்ற, மழுங்கலான, அறிவுக்கூர்மையற்ற.
open
n. திறந்த வெளியிடம், தங்குதடையற்ற வான்வெளி, பொதுவிடம், பொதுமக்கள் பார்வைக்குரிய இடம், (பெயரடை) திறந்த, வாயில் மூடப்பெறாத, மூடி பொருத்தப்படாத, புழை அடைக்கப்படாத, பூவகையில் மலர்ந்த, மடிப்பவிழ்ந்த, இடைவெளியுடைய, துளைகளையுடைய, போக்குவழி உடைய, வழிமறிக்கப்படாத, நுழைவு தடுக்கப்படாத, செல்ல வழி விடுகிற, வளைக்கப் பெறாத, அடைப்பற்ற, வேலியிட்டுமத் தடுக்கப்படாத, தடையற்ற, பொதியப்பெறாத, மேலீடற்ற, மூடாக்கற்ற, மேற்கவிவற்ற, மேற்கவிவற்ற, மறைப்பற்ற, திரை நீக்கப்பட்ட, வெளிப்படையான, கள்ளங்கபடமற்ற, மூடிமறைக்காத, தப்பெண்ணமற்ற, முன்முடிபு அற்ற, ஒரு சாய்வு அற்ற, எதையும் எளிதில் ஏற்கும பண்புடைய, வேற்றுமைகளை வரவேற்கிற, பொதுக்காட்சிக்குரிய, எல்லாரும அணுகக்த்தக்க, எல்லாருக்கும் உரிய, தாராள வாய்ப்பளிக்கிற, இடமளிக்கிற, முழு வாய்ப்பின் மீது அமைந்த, பொதுமக்கட்குரிய, பொது உரிமையான, பொது விளம்பரமான, தடைபடாக் காட்சியுடைய, பரந்த, அகன்ற, அகல்விரிவான, இடுக்கமற்ற, குடல் வகையில் மலச்சிக்கலற்ற, தாராளமாகக் கொடுக்கிற, வரையறையற்ற, தனிக்கட்டுப்பாடற்ற, முடிவுகட்டாத, முடிவுறாத, (இசை) சுரவகையில் தடைபடாக் குழலிசைப்புச் சார்ந்த, சுர வகையில் நரப்பிசைப்புச் சார்ந்த, இடைநிறுத்தமற்ற, தொடர்பான இசைப்புடைய, (இலக்) அசைவகையில் உயிரெழுத்துடன் முடிகிற. (ஒலி) உயிர் ஒலிவகையில் அங்காந்தொலிக்கிற, (வினை) திற, திறந்துகொள், திறந்து விடு, திறந்திரு, வாயில் உடையதாயிரு, திசைநோக்கியமை, பூவகையில் மலர்வுறு, வாயில் உண்டுபண்ணு, துளை உண்டுபண்ணு, வழிசெய், போக்குவழியுடையதாயமை, துளையுடையதாய் அமை, செல்வழியாயுதவு, தடைநீக்கு, தடை விலகப்பெறு, தொடங்கு, அலுவல் தொடங்கு, திற்நதுவை, தொடங்கிவை, வழக்கில் தொடக்க நடவடிக்கை எடு, நடவடிக்கை மேற்கொள்,. இயக்கிவை, நிறுவு, பேசத்தொடங்கு, வேட்டைநாய் வகையில் குரைக்கத்தொடங்கு, தோன்று, தோற்றத்தொடங்கு, புதுத்திருப்பக்காட்சிபெறு, முழுக்காட்சிகாண், காட்சிக்குப் புலப்படுத்து, காட்சிக்குப் புலப்படு, வெளிப்படுத்து, வெளியிடு,. அறியும் படி விளக்கு.
open the ball,
முதல்நடனத்தைத் தொடங்கு, நிகழ்ச்சிகளைத் தொடங்கு.
open-cast
n. முகட்டுத் திற்புடைய சுரங்க அகழ்வுப் பகுதி.
openig
n. பிளவு, இடைமுறிவு, இடையீடு, புழை, வாயில், செல்வழி,இடைவெளி,. தொடக்கம், தொடக்கப்பகுதி, வழக்கில் தொடக்க அறிக்கை, சதுரங்க ஆட்ட வகையில் தொடங்குவதற்கான ஆட்டம், நல்வாய்ப்பு, ஏற்ற சூழ்நிலை, தக்க தறுவாய், (பெயரடை) முதலாவதான, தொடக்கத்திலுள்ள.
openly
adv. ஒளிவுமறைவின்றி, எல்லோருக்கும் தெரியும்படியாக, பொதுவாக, வெளிப்படையாக.
opera
n. இசைநாடகம், இசையைச் சிறப்புக்கூறாகக் கொண்ட நாடகம், இசைநாடகக்கலை.