English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
opera-cloak
n. மாலை விருந்துகளுக்கோ இசைநாடகங்களுக்கோ செல்லும் மகளிர் அணியும் மேலாடை.
opera-glass, opera-glasses
n. இசைநாடகங்களில் அல்லது நாடகக்கொட்டகைகளில் பயன்படுத்துவதற்கான சிறு தொலைக்காட்டசிக் கண்ணாடி.
opera-hat
n. ஆடவரது நீண்ட மடக்குத் தொப்பிவகை.
opera-hood
n. மாலை விருந்துகளுக்கோ இசை நாடகங்களுக்கோ செல்லும் மகளிர் அணியும் முகத்திரை.
opera-house
n. இசைநடகக்கொட்டகை.
operate
v. இயங்கு, நடைபெறு, செயற்படு, பணியாற்று, கையாளு., இயங்கு, நடைமுறைப்படுத்து, செய்துமுடி, நிறைவேற்று, செயல் விளைவு உண்டுபண்ணு, நடத்து,. மேலாட்சி செய், பயன் அளி, உணர்ச்சிகளைப் பாதி, (படை) போர்த்துறை டவடிக்கைகளெடு, வாங்குதல் விற்றல்வழி பங்கு விலைமதிப்பில் உயர்வுதாழ்வு உண்டு பண்ணு, (மரு) அறுவை செய்.
operatic
a. இசைநாடகம் போன்ற, இசைநாடகத்துக்குரிய.
operating-rom
n. அறுவை மருத்துவ அறை.
operating-table
n. அறுவை மருத்துவ மேசை.
operating-theatre
n. மருத்துவ மாணவர்கள் முன்னிலையில் அறுவை மருத்துவம் செய்துகாட்டுதற்கான இடம்.
operation
v. நடவடிக்கை, செயற்பாடு, செயல்முறை, வேலைநடைமுறை, வேலைப்பாடு, செயல்வகை, இயக்கம், இயங்குமுறை, சட்டச் செயலாட்சி, சட்டச் செயலாட்சி எல்லை, நடப்புநிலை, செல்லுபடியாயிரக்கும் தன்மை, பகைள்-கப்பற்படைகள் வகையில் போர்த்திற நடவடிக்கை, அறுவை மருத்துவ நிகழ்ச்சி, (கண) எண்களின் செய்மானம்.
operative
n. கலைத்தொழிலாளர், பொறி வேலையர், பணியாள், வேலையாள், ஆலைத்தொழிலாளி, (பெயரடை) செயல்முறை சார்ந்த, செயல்விளைவுள்ள, நிறைவியலடைய, விரும்பிய பயனை அளிக்கிற, கருத்துமுறையுடனமையாத, செயற்படுகிற, நடைமறையான, நடப்பிலுள்ள, (மரு) அறுவை சார்ந்த.
operatize
v. இசைநாடகமாக்கு, இசைநாடகவடிவங் கொடுத்தமை.
operculum
n. மீன்களின் செவுள் உறை அல்லது மூடி, கிளிஞ்சல் துளை மூடி, தாவரங்களிலுள்ள துளை முடி.
operetta
n. ஓரங்க இசைநாடகம், சிற்றியல், இசைக்கூத்து,
operose
a. பெரும் உழைப்புத் தேவைப்படுகிற, கடினமாக உழைக்கிற.
oph;ite
n. பச்சைக்கல் வகை, பாம்புநிறச் சலவைக்கல்.
ophicleide
n. திருகாணிகளையுடைய பித்தளை இசைக்குழல் வகை.
ophidian
n. (வில) பாம்பினஞ் சார்ந்த உயிர், (பெயரடை) பாம்பினஞ் சார்ந்த.
ophiloatry
n. பாம்பு வழிபாடு.