English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
neuropathist
n. நரம்புநோய் மருத்துவ வல்லுநர்.
neuropathy
n. இயற்கைமீறிய நரம்புக் கோளாறு.
neuropterous
a. பளிங்குவலை போன்ற நாலு சிறகமைப்புடைய பூச்சியினம் சார்ந்த.
neurosis
n. நரம்புச்சிக்கலால் ஏற்படும் உடல்நிலைக் கோளாறு, முளை நுண்ம அமைதிக்கோளாறு.
neurotic
n. நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்துச்சரக்கு, நரம்புக்கோளாறுடையவர், இயற்கை மீறிய உணர்ச்சியுடையவர், (பெ.) நரம்புமண்டலத்தைப் பாதிக்கிற, நரம்புக் கோளாறுக்கு ஆட்பட்ட, இயற்கை மீறிய உணர்ச்சியுடைய.
neurotomy
n. ஒருசிறை உணர்விழப்புக்கான நரம்பறுவை.
neurypnology
n. செயற்கைத் துயிலூட்டுக்கலை, வசியம்.
neuter
n. (இலக்.) ஆண்பெண்பால் வேறுபாடு காட்டாப் பெயர்ச்சொல், பால்வேறுபாடு காட்டாப் பெயரடை, தன்வினை, செய்வினை செயப்பாட்டுவினை வெறுபாடற்ற வினைச்சொல், நொதுமலர், பொரில் இருசார்புமற்ற பொது நிலையாளர், வாதத்தில் சார்புகொள்ளா நடுநிலையாளர், கருத்து வேறுபாட்டில் சார்பற்றவர், பூச்சியினப் பெண்பாலில் பாலின முதிரிவற்றவை, வெடியினத்தில் பாலின உறுப்பற்றவை, விதையகற்றப்பட்ட பூனை, (பெ.) இரண்டுங்கெட்ட, பொதுநிலையான, சார்பற்ற, ஆண்பெண் பான்மை குறிக்காத, செய்வினை செயப்பாட்டுவினை வேறுபாடு குறிக்காத, தாவரங்களில் பாலின உறுப்புக்களற்ற, பூச்சியினத்தில் பாலின முதிர்ச்சியற்ற பெண்பாலான, மலடான, பொரில் சார்பற்றவாதத்தில் நடுநிலையான, கருத்து வகையில் தனிச்சார்பு கொள்ளாத.
neutral
n. நடுநிலை அரசு, போரில் நடுநிலை வகிக்கும் நாடு, நடுநிலையாளர், நடுநிலை வகிப்பவர், நடுநிலை நாட்டுக் குடிமகன், நடுநிலை நாட்டுக் கப்பல், விசையூக்க இயந்திரத்தில் இயக்கம் ஊட்டாது இயங்கும் பகுதியின் நிலை, (பெ.) பொரில் ஈடுபடாத, நடுநிலையான, விலகிநிற்கிற, விலகி நிற்கும் உரிமை அளிக்கப்பட்ட, பாதத்தில் சார்பற்ற, கருத்து வேறுபாடுகளில் கலக்காத, தனினிலையான, சார்புறுதியற்ற, தௌிவான, நிலையற்ற, திட்டவட்டமான பண்பற்ற, வகைப்படுத்த முடியாத, தனிமுனைப்புப்பண்பில்லாத, முடியுறுதியற்ற, சுவைமுனைப்பற்ற, வண்ண உறுதியற்ற, பூச்சியினத்தில் பெண்பாலில் பாலின பளர்ச்சியற்ற, பெண்மலடான, தாவரத்தில் பாலுறுப்புக்களற்ற, மின்னாற்றலில் நொதிமின்னான, வேதியியலில் காடி-காரச் செயல்கள் இரண்டுமற்ற.
neutralize
v. மட்டுப்படுத்து, முனைப்பழி, மாறான விளைவால் பயனற்றதாக்கு, ஈடுகட்டு, சரிக்கட்டு, இட வகையில் போர் எல்லையிலிருந்து விலக்கிவை.
neutron
n. நொதுமம், மின் இயக்கமில்லாத சிற்றணுத்துகள்.
neve
n. குழை பனிப்பரப்பு, பனியோடையின் தலைப்பில் பனிக்கட்டியாகச் செறிவுறாத தளர் பனித்திரள் பரப்பு.
never
adv. ஒருபோதுமில்லா நிலையில், என்றுமில்லா நிலையில்.
nevermore
adv. இனி எக்காலத்துக்கும் இல்லா நிலையில்.
nevertheless
adv. எனினும், அப்படியிருந்தாலும், இருந்த போதிலும்.
new
a. புதிய, முன்னில்லாத, முதன்முதலாகத் தெரிவிக்கப்படுகிற, முன் உணரப்படாத, தெரியவராத, முன்கேட்டறியாத, முன் கண்டறியாத, அண்மையில் தோன்றிய, புதிதாக ஆக்கப்பட்ட, அணிமையில் செய்துமுடிந்த, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, புதிதான, பழக்கத்திலில்லாத, மாறிய, மாறுபாடான, புது மாறுதலுடைய, புதுப்பிக்கப்பட்ட, புதிதாகச் சேர்க்கப்பட்ட, கெடாத, புதுநிலையிலுள்ள, பழமைப்பட்டுவிடாத, தேய்வுறாத, தளராத, பளபளப்புக்குறையாத, புத்தாக்கம் பெற்ற, புத்துயர்வு பெற்ற, புது வகையான, புதுப்பயனுடைய, வேறு வகையான, அனுபவமற்ற, புதுறறையான, (வினையிடை.) புதிதாக, அண்மையில்.
New Deal
1ஹீ32-லும் இதற்குப் பின்னரும் ரூசுவெல்ட்டின் ஆட்சிக் குழுவினரால் திட்டமிடப்பட்ட சழூக-பொருளாதார ஏற்பாடு.
new-blown
a. புதுமலர்ச்சியுடைய, அப்பொழுதுதான் மலர்ந்த.
new-born
a. புதிதாகப் பிறந்த.
new-built
a. புதுப்பித்துக் கட்டப்பட்ட, திரும்பக் கட்டப்பட்ட.