English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
netsuke
n. குமிழணி, ஜப்பானியர் அணியும் மெருகிடப்பட்ட குமிழ்மாட்டி போன்ற அணிகலன்.
netting
n. வலையிடல், வலை, வலைக்குரிய இழை, வலைப்பின்னலுக்கான கச்சை, வலையழிக்கான கம்பி, கம்பியாலான வலை, கம்பி வலைப்பகுதி.
nettle
n. பூனைக்காஞ்சொறிச் செடி வகை, (வினை.) முட்செடிகளால் அடி, காஞ்சொறிமுத்துப் போலக் குத்து, எரிச்சலுண்டாக்கு, சினமூட்டு, தொந்தரவு செய்.
nettle-rash
n. காஞ்சொறிமுத்துக்களால் ஏற்படும் தடிப்புச் சொறி வேதனை.
network
n. பின்னல் வேலை, பின்னல், வலையமைவு, குறுக்கு மறுக்குக்கட்ட அமைவு, ஆறு-இருப்புபாதை-கால்வாய் முதலியவற்றின் வலைபோன்ற கிளைப்பின்னலமைப்பு, இணை திட்ட ஒலிபரப்பு நிலையக்கோவை.
neum
n. (இசை.) அசை ஒலிப்பு இசைப்புக்குறி, இடைநிலைக்கால இசைமானத்தில் சுரத்தொனி ஏற்ற இறக்கக் குறி.
neural
a. நரம்புகள் சார்ந்த, நரம்புமைய அமைப்பைச் சார்ந்த.
neuralgia
n. நரம்பு வலி, தலைவலி, விட்டுவிட்டு வரும் கடுமையான முகக்கடுப்பு.
neuralgic
a. தலைவலி சார்ந்த.
neurasthenia
n. நரம்புத் தளர்ச்சி.
neurasthenic
a. நரம்புத் தளர்ச்சி சார்ந்த.
neuration
n. பூச்சி சிறகின் நரம்புச்சட்டப் பரப்பு, இலை நரம்புச் சட்டப்பரப்பு.
neurectomy
n. நரம்பறுவை, நரம்புத் துணிப்பு.
neuro-muscluar
a. நரம்புத்தசை சார்ந்த.
neuro-physiology
n. நரம்பு மண்டல அமைப்பாய்வுநூல், நரம்பு மண்டலம் பற்றிய உடலமைப்பு நூல்.
neuro-psychic
a. நரம்பியல்-உளவியல் ஆகிய இருசார்புப் பண்புகளுஞ் சார்ந்த.
neurology
n. நரம்பாய்வு நூல்.
neuroma
n. நரம்புக்கட்டி.
neuropath
n. இயற்கை கடந்த உணர்ச்சியறிவுள்ளவர், இயல்மீறிய நரம்புணர்ச்சிக் கோளாறுடையவர்.