English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
methylate
v. மரத்தேறல் கல, குடிபொருள் தகுதியும் வரி விதிப்பும் நீங்கும்படி தேறல்வகைகளில் மரத்தேறற் சத்தூட்டு, மரத்தேறற் சத்துச்செறிவி.
methylated
a. மரத்தேறற் சத்தூட்டப்பட்ட, குடிநீர்மை நீக்கப்பட்ட.
meticulous
a. மிக உன்னிப்பான, விவரங்களை விடாமற் கவனிக்கிற.
metis
n. வெள்ளையருக்கும் அமெரிக்க செவ்விந்தியருக்கும் பிறந்தவர், கானடாவில் வெள்ளையர் செவ்விந்தியர் கலப்புப் பிறவியாளர்.
Metonic cycle
n. முழுநிறைமதிவட்ட ஊழி, சந்திரனின் இயக்கமாறுபாடுகள் அனைத்தையும் உட்கொண்ட 1ஹீ ஆண்டு அல்லது 235 மதிமான மாதக் காலம்.
metonym
n. ஆகுபெயராக வழங்கப்படுஞ் சொல்.
metonymy
n. ஆகு பெயர், காரிய ஆகுபெயர், பண்பாகு பெயர்.
metope
n. (க-க) பழங் கிரேக்கரின் சிற்ப முறையில் தூண்டி நடுமுகப்புக் கூறு.
metre
-1 n. சீர், சீர்தளையாப்பமைதி, யாப்பு வகை, பா வகை, தாளம், இசைக்குரிய காலக்கணிப்பு.
metreology
n. எடையளவுகள் ஆய்வுநுல்.
metric
a. பதின்மான அடுக்காயமைந்த பிரஞ்சு அளவை முறை சார்ந்த.
metrical
a. சீருக்குரிய, சீராலமைந்த, யாப்புமுறையான, அளவுமுறைக்குரிய, அளத்தலை உட்கொண்ட.
metrist
n. யாப்புமுறை வல்லுநர், யாப்பியல் மாணவர்.
metronome
n. தாளப்பொறி, இசைத்துறையில் ஊசல் குண்டு மூலம் கால அளவினைக் குறித்துக்காட்டும் கருவி.
metropo,itan
நாட்டுத் தலைமைக்குரு, தலைமை மேற்றிராணியார், (பெயரடை) தலைநகருக்குரிய, நாட்டுத் தலைமைக் குருவுக்குரிய, நாடுகடந்த ஆட்சிநில வகையில் தாயகத்துக்குரிய, தாயதூகத்தின் பகுதியான.
metropolis
n. தலைநகரம், நாட்டுத் தலைமைக் குருவின் பணியிருப்பிடம், செயல்டநிகழ் நள்ளிடம்.
mettled, mettlesome
a. ஊக்கமிக்க, கிளர்ச்சியுடைய.