English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
metaphor
n. உருவக வழக்கு, நேர் சொற்பொருளாகாத பெயர் அல்லது பண்புகட்டிய வழக்கு, உருவகம்.
metaphoric, metaphorical
a. உருவகஞ் சார்ந்த, உருவகமான, உருவக வடிவான.
metaphrase
n. சொல்லுக்குச்சொல் மொழிபெயர்ப்பு, (வினை) வேறு சொற்களால் மாற்று.
metaphrastic
a. சொல்லுக்குச் சொற் பெயர்ப்பான.
metaphysical
a. நுண்பொருள் ஆய்வுக் கோட்பாட்டியல் சார்ந்த, பொருண்மை சாராப் பொதுநிலைப் பண்பியல் வாதத்துக்குரிய, நொய்ம்மை நுணுக்கமான, பொருண்மை சாராத, இயல் கடந்த, கனா நிலையார்ந்த.
metaphysics
n. pl. .இயல்கடந்த ஆராய்வு, நுண்பொருள் கோட்பாட்டியல், உளவாகும்நிலை உணர்நிலை பற்றிய கோட்பாட்டியல், உளவாகும்நிலை உணர்நிலை பற்றிய கோட்பாட்டியல் விளக்கமுறை, உளம் பற்றிய மெய்விளக்க இயல், வறட்டுக்கோட்பாடு, நொய்ம்மை, நுணுக்கவுரை, கடுஞ் சிக்கல் வாதம்.
metaplasm
n. (உயி) உயிர்ச் சத்தல்ரலாத உயிர்மக்கூறு., ஊன்மத்தில் மாறுபாடு ஊக்கும் உயிர்மக்கூறு.
metapol;itics
n. pl. உறுநுணுக்க அரசயில், செயல் முறையினின்று நெடுந்தொலை விடிகிய கோட்பாட்டரசியல்.
metapsychics
n. pl. இயல்கடந்த உளநிலை ஆராய்ச்சி.
metastatic
a. இடமாறிய, இடமாற்றஞ் சார்ந்த.
metatarsus
n. கணுக்காலுக்கும் கால்விரல்களுக்கும் இடைப்பட்ட ஐந்து நீண்ட விரல்களின் தொகுதி.
metathesis
n. எழுத்திடப்பெயர்ப்பு, ஒலியிடப் பெயர்ப்பு, (வேதி) இரண்டு அணுத்திரள்களிடையே அணுமாற்றம்.
metaxstasis
n. உறுப்புகளில் பண்புவகை இடமாற்றம், நோய்வகையில் உறுப்புக்களிடையே இடமாறுபாடு, நிலைமாற்றம், உருமாற்றம், பாறைகளில் பண்புமாறா உருமாற்றம்.
metayage
n. பாட்டம், நிலக்கிழார் உழவரிடை வாரம் பிரித்துக்கொள்ளும் முறை.
metayer
n. பாட்டக்காரர், வாரம் பிரித்துக்கொள்ளும முறையில் விளைநிலம் பெறுவர்.
mete
-1 n. எல்லை, எல்லைக்கல்.
metempiric
n. அனுபவ எல்லை கடந்தவை பற்றிய கோட்பாட்டுத்துறை, அனுபவங்கடந்த கோட்பாட்டுத் துறையில் நம்பிக்கை உடையவர்.
metempirics
n. அனுபவ எல்லை கடந்தவை பற்றிய கோட்பாட்டுத்துறை.
metempsychosis
n. பிறப்பிறப்புக் கோட்பாடு, உயிரின் கூடுவிட்டுக் கூடு பாய்தல்பற்றிய கொள்கை.
meteor
n. உற்கை, விண்வீழ் கொள்ளி, எரிமீன், அண்டப் புற வெளியிலிருந்து விண்வெளியில்மோதியதனால் ஒளிகாலும் பிழம்பு,. விண்வெளி நிகழ்ச்சி.