English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
mayfly
n. விரைந்தழியும் பூச்சிவகை, ஈசல்.
mayhem
n. (வர) தற்காப்பற்றவராக ஒருவரை முடமாக்குங் குற்றம்.
mayhoralty
n. மாநகர்த் தலைவர் பதவி, மாநகர்த் தலைவரின் பதவிக்காலம்.
maying
n. மே திருநாள் கொண்டாடுதல், முட்செடி வகையின் மலர் பறித்தல்.
mayonnaise
n. முட்டை-பாலேடு-புளிக்காடி முதலியன கலந்து பக்குவப்படுத்தப்பட்ட சுவைச்சத்து, சுவைச்சத்து சேர்த்த குளிர் கூட்டுணவு வகை.
mayor
n. மாநகர் முதல்வர், பெரு நகராண்மைக் கழகத் தலைவர்.
mayoral
a. மாநகர்த் தலைவருக்குரிய, மாநகர்த்தலைவர் பதவிசார்ந்த.
mayoress
n. மாநகர்த் தலைவரின் மனைவி, மாநகர்த் தலைவி, மாநகர்த் தலைவரின். வினைமுறைக் கடமைகளைச் செய்யும் மாது.
maypole
n. மேவிழாக் கம்பம், மே திருநாளன்று சுற்றி நேடனமாடுவதற்காக வண்ணந்தீட்டி மலர்களால் ஒப்பனை செய்யப்படும் கம்பம்.
Mays
n. pl. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் வகையில் மே மாதத்தில்நடக்கும் தேர்வு, மே வாரத்தில் தேர்வு, மே வாரத்தில் நடக்கும் படகுப் பந்தயங்கள்.
mazard
n. சிறிய கறுப்புப் பழவகை.
mazarin
n. திண் கருநீலம்., (பெயரடை) அடர்நீல நிறமான.
Mazdaism
n. தொல் பழங்காலப் பாரசீகரின் சமயநெறி, பார்சி சமயம்.
maze
n. புதிர்நெறி, ஏடாகோடமான வழி சிக்கல் வலைப்பின்னற் போக்கு, குழப்பம், (வினை) குழப்பு, திகைப்பூட்டு.
mazer
n. (வர) வெள்ளிச்சட்டம் போடப்பட்டுள்ள கெட்டிக் கட்டையாலான பருகுகலம்.
mazurka
n. போலந்து நாட்டுச் சிறுதிற ஆடல் வகை, போலந்து நாட்டு ஆடலுக்கான இசையமைப்பு.
McCarthyism
n. அமெரிக்காவில் பொது உடைமையரென ஐயுறப்பட்டவர்களைப் பணிகளிலிருந்து நீக்கிவிடும் செயல்முறைக் கோட்பாடு.
me, pronl.
என்னை, எனக்கு, நானே, என்னையே.
mead
-1 n. கடுந்தேறல் வகை, தேன்-நீர்க் கலவை வெறியம்.