English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lupin, lupine
-1 n. கால்நடைத்தீனியாக உதவுந் தோட்டச் செடிவகை.
lupine
-2 a. ஓநாய்க்குரிய, ஓநாய் இனஞ் சார்ந்த, ஓநாய் போன்ற.
lupines
n. pl. கால்நடைத் தீனியாக உதவுந் தோட்டச்செடி வகைகளின் விதை.
lupus
n. தோல் படைநோய் வகை.
lurch
-1 n. கடுந்தோல்வி நிலை, எட்டாநிலை.
lurcher
n. சிறு திருட்டுச் செய்பவர், மோசடிக்காரர், ஒற்றர், கள்ளவேட்டைக்காரர் பயன்படுத்தும் கலப்பின நாய் வகை.
lure
n. வேட்டைப்பருந்தைத் திருப்பி வருவிப்பதற்குரிய கவர்ச்சிச்சின்னம், வஞ்சக்கவர்ச்சிப் பொருள், வஞ்சக்கவர்ச்சி இரை, வேட்டைக்கவர்ச்சி, மாயக்கவர்ச்சித் திறம், (வினை) கவர்ச்சிச் சின்னத்தால் வேட்டைப் பருந்தை மீட்டழை, மருட்டு, கவர்ச்சிக்குட்படுத்து, வசப்படுத்து, ஏய்,ஆசைகாட்டி இழு, தூண்டிச் செயலாற்றுவி.
lurid
a. கோர உருவான, பேய்போன்ற, வெளிறிய தோற்றமுடைய, பயங்கரமான, அச்சக்கூறுகள் வாய்ந்த, இயல்பு முரணிய, கொந்தளிக்கிற, (தாவ.) மங்கலான மஞ்சள் பழுப்பு நிறமுடைய.
lurk
n. மறைவு, (வினை) பதுங்கியிரு, ஒளிந்திரு, காத்திரு, உள்ளுறைவாயிரு, கவனிக்கப்படாமல் இரு, வெளிப்படாதிரு, உள்ளுறையாயிரு.
lurking-place
n. மறைவிடம், ஒளிந்திருக்குமிடம்.
luscious
a. மிகுமதுரமான, நறுஞ்சுவையுள்ள, தெவிட்டும் அளவுக்கு இனிப்பாயிருக்கிற, அளவுமீறிய கவர்ச்சியுடைய, மொழிநடை வகையில் புலனின்பக் கவர்ச்சிமிக்க, சிற்றின்பச் சுவைகனிந்த.
lush
a. புல் தழை வகையில் வளமை ததும்பிய.
lust
n. இச்சை, கழிகாமம், அடங்காச் சிற்றின்ப அவா,தகாச் சிற்றின்பவேட்கை, மட்டில் புலனுகர்வீடுபாடு, (வினை) மிகுவிருப்பங்கொள், இச்சைகொள், காமவிகாரமுறு.
lustral
a. தூய்மைச் சடங்கு சார்ந்த, வினைமுறையாகத் துப்புரவு செய்வது பற்றிய, துப்புரவுச் சடங்கில் பயன்படுத்தப்படுகிற.
lustrate
v. கழுவாய்ப்பலி கொடுத்துத் துப்புரவாக்கு, வினைமுறைச் சடங்குகள்செய்து தூய்மைப்படுத்து, திருமுழுக்காட்டித் தூய்மை ய.
lustre
-1 n. பளபளப்பு, ஒளிர்வு, பிறங்கொளி, காந்தி, புறப்பொலிவு, கதிரொளி, அழகொளி, மிகுவனப்பு, பகட்டு, மிகுபுகழ், மேன்மை, தனிச்சிறப்பு, சரவிளக்கு, சரவிளக்கின் தொங்கல் கண்ணாடிப்பட்டை, மெல்லிய பளபளப்பான உடுப்புத் துணிவகை, ஒளிரும் மேற்புறமுடைய கம்பளி வகை, (வினை) துணி மெருகிடு, மட்பாண்டம் பளபளப்காக்கு.
lustrine
n. பளபளக்கும் பட்டுத் துணிவகை.
lustrum
n. ஐந்தாண்டுகாலம்.
lusty
a. உடல்நலமும் வலிமையும் வாய்ந்த, ஊக்கமுடைய, எழுச்சியுடைய, சுறுசுறுப்புள்ள.
lusus naturae
n. (ல.) இயல்பிழுக்கம், பெரிதும்இயல் முரணிய இயற்கைப் படைப்பு, இயல்திரி விலங்குரு, இயல்திரி செடிவடிவம், இயற்கையின் திருவிளையாடல்.