English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lull
n. புயலிடை அமைதி, இடை ஓய்வமைதி, அமைதிப்படுத்தும் பண்பு, (வினை.) அமைதிப்படுத்து, புயல் அடங்கச் செய், அரவம் அடங்கச்செய், தூங்கச் செய், தாலாட்டி உறங்க வை, உளக்கொந்தளிப்புத் தணி, ஐயமகலச் செய், சூழ்ச்சியால் அவநம்பிக்கை அகற்று.
lullaby
n. தாலாட்டுப் பாட்டு, (வினை.) தாலாட்டு, தூங்கவைப்பதற்காகப் பாட்டுப் பாடு.
lumbago
n. இடுப்புவாத நோய், கீல்வாத நோய்.
lumbar
n. இடுப்பு நரம்பு, இடுப்புப்பகுதித் தண்டெலும்பு, (பெ.) இடுப்பைச் சார்ந்த, இடுப்பிலுள்ள.
lumber
-1 n. கழகடை, ஓட்டை உடைசல் குவை, பயனற்ற துண்டுத்துணுக்குத் தொகுதி, சேமிக்கப்பட்ட துண்டுத் துணுக்குக்களின் தொகுதி, இடமடைக்கும் பொருட்குவியல், தேவையற்ற மிகுகொழுப்பு, அரைகுறை வேலைப்பாடுடைய வெட்டுமரம், (வினை.) இடமடை, இடஞ் செலுத்தி நிரப்பு, கொட்டிக்குவி, கூளமாக்கு, முரட்டுக் கட்டைகளாக வெட்டு, வெட்டி உருவாக்கு.
lumber-carrier
n. வெட்டுமர வணிகப்படகு.
lumber-jacket
n. கழுத்தளவும் இறுகத்தக்க ஆடவர் திண்ணிய முழுச்சட்டை, மாதர் முழுச்சட்டை.
lumber-mill
n. மரக்கட்டைகளை இரம்பத்தினால் அறுக்கும் தொழிற்சாலை.
lumber-room
n. கழிவுக்கிடங்கு, பயனற்ற சாமான்கள் வைத்திருக்கும் அறை.
lumber-scaler
n. மரக்கட்டைகளை அளப்பவர்.
lumberer
n. காட்டுமரங்களை வெட்டி வகைப்படுத்துபவர்.
lumberman
n. மரக்கட்டைகளை வெட்டுபவர், மரம் அறுத்து ஒழுங்குபடுத்துபவர், வெட்டுமரக் கட்டைகளைத் தூக்கிச் செல்பவர்.
lumbo--abdominal
a. இடுப்பையும் அடிவயிற்றையும் சார்ந்த.
lumbrical
n. கைகால் வரல் வளைப்பதற்கான தசைகளில் ஒன்று, (பெ.) கைவிரல்களை அல்லது கால்விரல்களை வளைக்கிற.
Lumiere
a. வண்ண நிழற்பட முறை சார்ந்த.
luminary
n. ஒளிப்பிழம்பு, ஒளிபரப்பும் பொருள், ஒளிக்கோணம், புகழ்சான்றவர், ஆன்றோர், அறிவு மேதை, ஆன்மிக வழிகாட்டி, தலைமைப் பெருந்தகை.
luminiferous
a. ஒளிவழங்குகின்ற, ஒளிக்கதிர் பரப்புகின்ற.
luminous
a. ஒளிபிறங்குகின்ற, ஒளிதிகழ்கின்ற, சுடர்ஒளி வீசுகின்ற, இருளில் ஒளி வீசுகின்ற, மின்னிடுகிற, மின்னொளிர்வுடைய, பளபளப்பான, மினுமினுப்புள்ள, எழுத்தாளர் வகையில் நல்விளக்கம் அளிக்கிற, எழுத்தாண்மை வகையில் விளங்க வைக்கிற.
lump
-1 n. கட்டி, மொத்தை, பெரிய அளவு, மிகுதியான அளவு, கும்பு, குவியல், உருவாக்கத் தகுதியான பிசைந்த மாவு உருண்டை, தசைமுண்டு, இயற்கைக்கு மாறான தசைவளர்ச்சி, புடைப்பு, வீக்கம், கன்றிய காயமுபபு, மந்தமதி, பேதை, (வினை) மொத்தையாகத் திரட்டு, கூளமாகக் குவி, வகைதிரி பின்றிப் பலதிறங்களையும் ஒருநிலைப்படக் குவி, பந்தய முதலியவற்றில் முழுப்பணத்தையும் பணயமாக வை, கட்டியாக எழு, கட்டியாகப் புடைத்து உருவாகு, பளுவுடன் இயங்கு, பளுப்பட அமர்.
lumper
n. கப்பல் சரக்கேற்றி இறக்குபவர், வேலைக் குத்தகைக்காரர், திட்பநுட்பமற்ற வகைமுறை அமைப்பாளர்.