English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lease
-1 n. கட்டுக் குத்தகை, குறிப்பிட்ட காலத்துக்கு அனுபவ உரிமையளிக்கும் ஒப்பந்தக் கட்டுக்பாட்டு முறை, நிலக்குத்தகை, பாட்டம், மண்ணக்குத்தகை, கட்டுக் குத்தனை உரிமை, கடடுக குத்தகை முறை, கட்டுக் குத்தகைக் கால எல்லை, அனுபவக் காப்புரிமை எல்லை, உரிமைக்காப்புக் கால நீடிப்பு, (வினை) கட்டுக் குத்தகை உரிமை வழங்கு, நிலம் அல்லது மனையைக் கட்டுக் குத்தகைக்கு விடு, நிலம் அல்லது மனையைக் கட்டுக் குத்தகையில் எடு.
leasehold
n. கட்டுக் குத்தகை உரிமை, கட்டுக் குத்தகை நிலம், கட்டுக்குத்தகை மனை.
leaseholder
n. கட்டுக் குத்தகையாளர், நிலத்தை அல்லது மனையைக் கட்டுக்குத்தகை எடுப்பவர்.
leash
n. நாய்வார், மூன்று வேட்டை நாய்கள்-முயல்கள் முதலியவை கொண்ட கணம், நெசவு வகையில் பாவுநுலை ஏற்றுக்கொள்வதற்கான சிறு துளையுடன் கூடிய கயிறு, (வினை) தோல்வாரினாற் கட்டிப்பிடி, தோல்வாரினாற் கட்டி இணை.
least
n. அறச்சிறிது, (வினை) அறச்சிறிய, மிகமிகக் கொஞ்சமான, மிகமிக அற்றபமான (வினையடை) மிகமிகக் குறைவாக, மிகமிகக் கொஞ்சமாக.
leastways, leastwise
(பே-வ.) குறைந்தபடியாகக் கொண்டாலும்.
leat
n. ஆலை முதலியவைகளுக்கு நீர்கொண்டு செல்லும் திறந்த நீர்க்கால்.
leather
n. பதனிட்ட தோல், தோற் சரக்கு, தோலினால் செய்யப்பட்ட பகுதி, மெருகிடுவதற்கான தோல் துண்டு, தோல்வார், (வினை) தோலினால் மூடு, தோல் கவசக் காப்புச் செய்துகொள், தோல்வாரினால் அடி.
leather-back
n. கடலாமை வகை.
leather-head
n. அறிவிலி, மூடன்.
leather-jacket
n. மீன் வகையில் ஒன்று, ஈ வகையின் முட்டைப்புழு.
leather-neck
n. கப்பலோட்டிகள் வழக்கில் படைவீரன், கடற்படைவீரன்.
leather-wood
n. உறுதியான பட்டையுடைய மரவகைகள்.
leatherette
n. தோல்போலச் செய்யப்பட்ட தாள்வகை, தோல் போலச் செய்யப்பட்ட துணிவகை.
leathern
a. தோலினால் ஆன, தோல் சார்ந்த, தோல் போன்ற.
leatheroid
n. செயற்கைத்தாள் தோல், வேதிமுறையில் பாடம் செய்யப்பட்டுப் பச்சைத்தோல் போலிருக்கும் பருத்தித்தாள்.
leathery
a. தோல் போன்ற, இறைச்சி வகையில் நெற்றான.
leave
-1 n. இசைவு, இணக்கம், இசைவாணை, செல்விடை, போவதற்கான இசைவளிப்பு, பள்ளி-பணிமனைகளில் விடுப்பு, விடுப்பிணக்கம், செலவிசைவாணை, விடுப்புக்காலம், செலவிசைவுக்காலம்.
leave-breaker
n. விடுப்புக் காலத்துக்கு அப்பாலும் வேலைக்கு வராமல் நிற்பவர்.
leaven
n. புரையூட்டுப்பொருள், மாவு புளிப்பாக்கும் பொருள், ஊடுபரவி உள்ளிருந்து மாற்றுதற்குரிய திறம், உள்ளார்ந்த நுண்திறக்கூறு, (வினை) புளிப்புப்பொருள் சேர்த்து மாவைப்புளிக்கவை, ஊடுருவிப் பரவிமாற்று, பக்குவப்படுத்தும் பொருள் சேர்த்து மாற்றியமை.