English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lanneret
n. வேட்டைப்பருந்தில் ஆண்வகை.
lanolin
n. தைல வகை மூலப்பொருளான ஆட்டுக்கம்பளச் சத்து.
lansquent
n. செர்மனியில் பிறப்புற்ற சீட்டாட்ட வகை.
lantern
n. ஒளிக்கூண்டு, விளாந்தர், கண்ணாடிக்கூட்டு விளக்கு, கலங்கரைவிளக்க ஒளிமாடம், மோட்டு ஒளிப்புழை மாடம், மின்மினிப்பூச்சியின் ஒளியிழைக் கை.
lanthanum
n. (வேதி.) 1க்ஷ்3ஹீ-41 ஆம் ஆண்டுக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அலுமினிய உலோகக் குழுவினர் சார்ந்த அரிய தனிமப்பொருள்.
lanthorn
n. ஒளிக்கூண்டு, விளக்கு.
lanyard
n. (கப்.) பற்றுவடம், கட்டுவதற்கு அல்லது கைப்பிடியாகப் பயன்படுவதற்கான சிறு கயிறு அல்லது கம்பி.
Laodicean
n. சமயம் அல்லது அரசியலில் அரைகுறை ஆர்வமுடையவர், (பெ.) சமயம் அல்லது அரசியலில் அரைகுறை ஆர்வமுடைய.
lap
-1 n. தொங்கல், சட்டை அல்லது சேணம் முதலியவற்றின் மடிவுப்பகுதி, காதின்மடல், மடிப்பு, முன்தானை, பாவாடையின் முன்பகுதி, மடி, முன்துடை, மேற்பகுதி, பள்ளத்தாக்கு, மலைகளின் நடுவே உள்ள உட்குழிவு, (வினை) மடியில் வை, துடைமீது வைத்துக்கொள்.
lap-dog
n. வளர்ப்புச் சிறு நாய்.
lap-joint
n. தண்டவாளம்-கம்பம் முதலியவற்றின் வகையில் இரு விளிம்புகளையும் பருமனில் பாதியாக்கி இணைத்துப் பொருத்தும் முறை.
lap-streak
n. பலகைக்பாளம் மேலது கீழதின்மேமல் கவியும் படி இணைத்த படகு.
laparectomy
n. குடற் பகுதி அறுவை.
laparocele
n. இடுப்பிலுள்ள குருதிக்குழாய் முறிவினால் ஏற்படுங் குடல் சரிவு.
laparotomy
n. அடிவயிற்றின் புறத்தோட்டின் அறுவை.
lapel
n. மேற் சட்டையின் மார்புற்ற பின்மடிப்புப் பகுதி.
lapicide
n. கல்வெட்டுபவர், கல்வெட்டுப் பொறிப்பாளர்.
lapidary
n. மணிக்கல் வெட்டுபவர், மணி செதுக்குபவர், மணிக்கல் மெருகு கொடுப்பவர், (பெ.) கல்சார்ந்த, கல்லின் மீது செதுக்கப்பட்ட, எழுத்துக்களைப் பொறிப்பதற்குரிய, கல்வெட்டுக்குரிய.
lapidate
v. கல்லாலடி, கல்லாலடித்துக் கொல்.
lapidify
v. கல்லாகும்படி செய், கல்லாக்கு.