English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
insularity
n. தீவின் இயல்பு, தனிநிலை, தனி ஒதுக்கம், குறுகிய மனப்பான்மை.
insulate
v. தீவாக்கு, சுற்றுச் சார்பினின்று பிரித்து வை, தனிப்படுத்து, துண்டுபடுத்து, வெப்பத்தொடர்பறுத்துப் பாதுகாப்புச் செய், மின்பாயாமல் காப்பிடு.
insulin
n. கணையச் சுரப்புநீர், விலங்குகளின் கணையச் சுரப்பியிலிருந்து எடுக்கப்பட்டு நீரிழிவுநோய் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
insult
-1 n. அவமதிப்பு, மரியாதையற்ற நடத்தை, வகை மொழி, பழிதூற்றரவு, நிந்ததை.
insuperable
a. பொறுக்கமுடியாத, தாங்கமுடியாத, மேற்கொள்ள இயலாத.
insurance
n. காப்புறுதி, காப்பீடுசெய்தல், காப்பீட்டுத் தவணைப் பணம் காப்புறுதிக் கட்டணம்.
insurant
n. காப்புறுதிப் பத்திரம் அளிக்கப்பெற்றவர்.
insure
v. உறுதிப்படுத்து, உறுதிசெய், காப்புறுதி செய், காப்பீடுமூலம் உறுதிசெய்.
insurer
n. ஈடுசெய்ய உத்தரவாதம் அளிப்பவர், காப்புறுதி செய்துகொள்பவர்.
insurgence, insurgency
n. கிளர்ச்சி, எதிரெழுச்சி, ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுதல்.
insurgent
n. கிளர்ச்சிக்காரர், ஆட்சி எதிர்ப்பாற்றல், (பெயரடை) கிளர்ச்சி செய்கிற,. கடல் வகையில் கிளர்ந்தெழுந்து பாய்கிற.
insurmountable
a. ஏறிக்கடக்கமுடியாத, கடந்து மேற்செல்ல இயலாத, வென்று சமாளித்தற்குரிய.
insurrection
n. ஆட்சி எதிர்ப்பு, கிளர்ச்சிக்கான தொடகக் நிலை எழுச்சி, புரட்சி.
insusceptible
a. மசியாத, இளகாத, தடம்பதிய இடந்தராத, ஏற்காத, இயலாத.
int.
வியப்பு-துன்பம்-இரக்கம் முதலியவற்றை வெளிப்படுத்தும் வியப்பிடைச் சொல்.
intact
a. முழுமைகெடாத, குறைபடாத, பழுதுபடாத, தொடப்படாமலுள்ள.
intagliated
a. மேற்பரப்பில் செதுக்கப்பட்ட.
intaglio
n. செதுக்கு வேலைப்பாடு, கடினமான பெருளின்மீது செய்யப்பட்ட செதுக்கு வேலை, செதுக்கு வேலைப்பாடுள்ள மணிக்கல், (வினை) கடினமான பொருள்களின் மீது செதுக்குவேலைப்பாடு செய்.
intake
n. உள்வாய், ஆற்றிலிருந்து குழாய்க்கோ கால்வாய்க்கோ நீர் எடுத்துச் செல்லும் இடம், சுரங்கத்தில் காற்றுப் புழைவாய், குழாயின் அல்லது குறுங்காலுறையின் ஒடுங்கிய பகுதி, தையலிணைப்புக் குறுக்கம், கொள்பொருள், கொள்ளப்பட்டவர், சதப்பு நிலத்திலிருந்து சீர்ப்படுத்திப் பயன்படுத்தப்பட்ட நிலம்.
intangible
a. தொட்டறிய முடியாத, உணர முடியாத, புரியமுடியாத, புதிரான, மனத்தால் பற்றமுடியாத.