English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
integer
n. முழுமை அளவை, அடக்ககூறுகளின் முழு மொத்தம், முழுமைத் தொகையீடு, (பெயரடை) முழுமையான, முழுமைவாய்ந்த, முழு எண்ணான,. முழு எண்ணுக்குரிய.
integrant
a. ஆக்கப் பகுதியாயுள்ள, முழுமையின் நேர் உறுப்பாயுள்ள, முழுமையாக்கத்துக்கு இன்றியமைக்கும் செயல்.
integrate
a. பகுதிகளாலான, முழுமையான, முழுநிறைவான, (வினை) முழுமையாக்கு, குறைப்பகுதி சேர்த்து முழுமையாக்கு, பகுதிகளை இணைத்து நிறைவாக்கு, மொத்தத் தொகை குறிப்பிடு, முழுச்சராசரி கூறு.
integration
n. முழுமையாக்க, ஒருமைப்பாடு, வெள்ளையரும் பிறவண்ண மக்களும் அடங்கிய பல்வேறுபட்ட சமுதாயத்தை ஒரே முழு அமைப்பாக வகுத்தமைக்கும் செயல்.
integrity
n. முழுமை, கூறுபடாநிலை,. நேர்மை, வாய்மை, நாணயம், ஒழுங்கு.
integument
n. புறப்போர்வை, தோல்,. மேந்தோல்.
intellect
n. மனத்தின் அறிவுத்திறம், அறிவாற்றல், மூளைத்திறம், ஆய்வுணர்வுத்திறம்,அறிவுடையவர், அறிவுடையோர் தொகுதி.
intellection
n. ஆய்ந்தறிதல், பகுத்தறியும் முறை.
intellectual
n. அறிவுத்திறனுடையவர், ஆய்வறிவாளர், அறிஞர், (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த, அறிவாற்றலுள்ள, அறிவாற்றல் சார்ந்த, ஆய்வுணர்வுக்குரிய, அறிவுக்குகந்த, அறிவுத்திறநோக்கிய.
intellectualism
n. அறிவுத்திறனுடையவர், ஆய்வறிவாளர், அறிஞர், (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த, அறிவாற்றலுள்ள, அறிவாற்றல் சார்ந்த, ஆய்வுணர்வுக்குரிய, அறிவுக்குகந்த, அறிவுத்திறநோக்கிய.
intelligence
n. அறிவுத்திறம், கூர்மதி, விவேகம், ஆறறிவுயிர், அறிவுரு, தகவல், செய்தி, வேவுத்தகவல்.
intelligencer
n. தகவல் கொடுப்பவர், ஒற்றர், மறைமுகத்தகவலாளர்.
intelligent
a. அறிவுத்திறம்வாய்ந்த, அறிவுள்ள, விவேகமுள்ள, கூர்மதியுடைய.
intelligentsia, intelligentzia
n. தற்சிந்தனையாற்றலுடையவர் தொகுதி, கற்றறிந்தோர் வகுப்பு.
intelligible
a. புரியக்கூடிய, விளக்கமான, தௌிவான, அறிவுக்குப் புலனாகின்ற, புலப்படக்கூடிய, (மெய்) புலன்களால் அறியப்படாது அறிவால் மட்டுமே அறியக்கூடிய.
intemperance
n. தன்னடக்கமின்மை, வரம்புமீறிய செயல், மட்டுமீறிய குடிப்பழக்கம்.
intemperate
a. வரம்புகடந்த நுகர்வீடுபாடுடைய, மட்டுமிஞ்சிய குடிப்பழக்கமுடைய, மட்டுமீறிய, அளவுகடந்த.
intend
v. எண்ணு,. உளங்கொள், முன்னரே கருது, செயல்குறி, திட்டமிடு, மனமாரச் செயலில் முனை.
intendant
n. மேலாள், கண்டகாணி.
intended
n. (பே-வ) மணஞ்செய்துகொள்ள உறுதி செய்யப்பட்டவர்.