English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
inspissate
v. கெட்டியாக்கு, தடிப்பாக்கு, உருச்சுருக்கு.
instability
n. நிலையில்லாமை, உறுதியின்மை, மன உலைவு, அடிக்கடி மாறும் இயல்பு.
instal, install
பதவியில் அமர்த்து, வினைமுறைகளுடன் பணியில் ஏற்றிவை, நிலைநாட்டு, நிறுவு, கருவியை அமைவில் பொருத்திச் சித்தஞ்செய்.
installation
n. அமர்த்தல், வினைமுறைகளுடன் அமர்த்துவினை நிறைவேற்றம், பயனுறுநிலை இணைப்பு, முழுநிறை கருவிகல அமைவு.
instalment
n. தவணை, தவணைப்பணம், தொடர்கதை வெளியீடு முதலியவற்றின் வகையில் தொகுதி, வெளியிட்டுக் கூறு.
instance
n. எடுத்துக்காட்டு, சான்றுநிகழ்ச்சி, குறிப்பீடு, தூண்டுரை, (சட்) வழக்கின்படிமுறை, (வினை) சான்றாகஎடுத்துக்காட்டு, சான்றுதரும் செய்தியாக எடுத்துக்கூறு,. குறிப்பிடு.
instancy
n. அவசரம், படுவிரைவு.
instant
n. நொடி, காலநுட்பம், உடனடிவேளை, மிகக்குறுகிய நேரவிலை, சரிநுட்பநேரம், (பெயரடை) உடனடியான, மிக அவசரமான, நடைமுறை மாதத்தைச் சார்ந்த.
instantane
n. கணநேரக் காட்சி நிழற்படம், சிலவரிகளில் எழுத்பப்படும் சுருக்கக் கட்டுரை.
instantaneous
a. உடனடியான, கணத்தில் நிகழ்கிற, உடனடியாகச் செயற்படுகிற.
instanter
adv. பாதுகாப்பாளர் பொறுப்பின் கீழ்.
instauration
n. மீட்டமைவு, முன்னிலை மீட்டமைத்தல், புதுமீட்பமைவு, புதுப்பித்தாக்கப்படும் நிலை.
instead
adv. பகரமாக, பதிலாக, ஈடாக, ஒன்றன் இடமாக, பிரதியாக.
instep,
n,. புறவடி, பாதத்தின் மேற்பகுதி, புதைமிதியின் புறவடிப்பகுதி, புறவடி வடிவுடைய பொருள்.
instigate
v. பின்னின்று தூண்டிவிடு, தீமை ஏவு, கிளர்ச்சிக்குத் தூண்டு, கொலை முதலிய செயல்களுக்கு மறை தூண்டுதலளி.
instil, instill
துளித்துளியாக விடு, சிறிது சிறிதாகப் புகட்டு, படிப்படியாக அறிவுறுத்து, சிறிதுசிறிதாகப பண்புதோய்வி.
instillation
n. சிறிதுசிறிதாக வடித்தல், அறிவு புகட்டுதல், உள்ளத்தில் பண்பு பரவவிடுதல், புகட்டப்பட்ட பண்பு.
instinct
-1 n. இயல்புணர்ச்சி, இயற்கை அறிவு இயலெழுச்சி, உள்ளார்ந்த உந்துணர்வு, இயற்றுண்டுதல், இன உணர்வு, அறிவுநிலையுடையன போலக் காணப்படும் திட்ட அறிவற்ற விலங்கினங்களின் இயல்பான செயற்பண்பு, இயலறிவுத்திறம், உணர்வற்ற நிலைச் செயல்தூண்டுலுக்கும முழு அறிவுணர்வுத் தூண்டுதலுக்கும் இடைப்பட்ட நிலையுடைய இயல்பான அகத்தூண்டுதல்.
instinct, (2)
a. உள்ளுறித்தோய்ந்த, நிரம்பி உட்பொதிந்துள்ள, பொதுளித் ததும்பிய.
institute
n. நிறுவனம், கழக முறை அமைப்பு, குறிப்பிட்ட நோக்கத்துக்குரிய நிலையான வளர்ச்சித்திட்ட ஏற்பாடு, இலக்கிய மெய்விளக்கத்துறை அமைப்பு, கல்வி கலை ஆய்வு புத்தாய்வுகளுக்குரிய நிலையம், நிலையக் கட்டிடம், (வினை) ஏற்படுத்து, நிறுவு, தொடங்கிவை, ஏற்பாடு செய், அமர்த்து.