English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
incinerator
n. எரி தொட்டி, நீற்றுலை.
incipience, incipiency
n. தொடக்க நிலை, முதிரா நிலை.
incipient
a. தொடக்க நிலையிலுள்ள, முதிராத, புனிற்றிளமையான.
incipit
n. தோற்றுவாய், இங்கு தொடங்குகிறது.
incise
v. வெட்டு, செதுக்கு,
incisiform
a. உளிப்பல் போன்ற, முன்பல் ஒத்த வடிவுடைய.
incision
n. வெட்டுதல், செதுக்குதல், அறுத்தல், வெட்டு, கீறல், வெட்டுப் பள்ளம், ஆழமான காயம்.
incisive
a. வெட்டுகிற, துளைத்துச் செல்லுகிற், ஆழமான வெட்டுக் காயம் உண்டுபண்ணுகிற, கடுந்தாக்குதலான, கடும் வசையான, அறிவுக் கூர்மையான.
incisor
n. முன் வாய்ப்பல், உளிப்பல்.
incisure
n. வெட்டு, ஆழமான வெட்டுக்காயம், செதுக்குதல்.
incitant
n. தூண்டுவது, கிளர்ச்சியூட்டுவது, தூண்டு விசை, செயற்காரணம்.
incite
v. தூண்டு, கிளறி விடு, செயல் தூண்டுதளி.
incivility
n. பணிவின்மை, வணக்க இணக்கமின்மை, முரட்டுத்தனம்.
incivism
n. குடியுரிமைக் கேடு, பிரஞ்சுப்புரட்சிச் சார்பான பற்றுதல்.
inclement
a. பருவநிலைவானிலைகள் ஒவ்வாத, கடுமையான, புயலார்ந்த., காற்றுமழை கலந்து அடிக்கிற.
inclinable
a. சாய்க்கத்தக்க, சார்வான, சாய்வான, சார்தகவானந, சாதகமான, துணைநலமான.
inclination
n. சாய்வு, வாட்டம், சரிவு, சார்தல், மனச்சார்பு, பற்றுகை, மனப்பற்று, விருப்பம்.
incline
n. சாய்வு தளம், சரிவு, (வினை) சாயச் செய், சாய், செங்குத்தான நிலையினின்று சரியச்செய், வளை, குனி, சார்பு கொள், மனவிருப்பங் கொள், பற்றுதல் கொள்வி.
inclined
a. சாய்ந்த, நாட்டங்கொண்ட.
inclinometer
n. சாய்வு மானி, பூமியினுடைய காந்தத் தாக்குதலின் செங்குத்து அடர்த்தியைக் கணக்கிடுங் கருவி.